மோடி சொன்னால் உண்மை இருக்குமா?

ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது” என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது.

அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே. பால் உட்பட) மோடி பல நாடுகள் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன என்ற உண்மையை புறக்கணித்து, இந்தியாவின் குறைந்த தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் இருக்கும் பகுதிகளை அதிக தொற்று இருக்கும் பகுதிகளுடன் ஒப்பிடுகிறார்.

ஐந்து பரந்த நடவடிக்கைகளில் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிட்டால், இந்தியாவின் நிலை இது தான்:

  • மொத்த தொற்றின் எண்ணிக்கையில் 3 வது இடம்
  • மொத்த இறப்பு எண்ணிக்கையில் 6 வது இடம்
  • மொத்த நிலுவை தொற்று எண்ணிக்கையில் 3 வது இடம்
  • 10 லட்சத்தில் தொற்று எண்ணிக்கையில் 99 வது இடம் (104 நாடுகள் இந்தியாவைவிட சிறந்த நிலையில் உள்ளன)
  • 10 லட்சத்தில் இறப்பு எண்ணிக்கையில் 98 வது இடம் (பங்களாதேஷ், ஜப்பான், இந்தோனேசியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் வியட்னாம் ஆகிய நெருக்கடி மிகுந்த நாடுகள் உட்பட 105 நாடுகள் இந்தியாவை விட சிறந்த நிலையில் உள்ளது.

இந்த தரவரிசைகளிலிருந்து இந்தியா “மற்ற நாடுகளை விட சிறந்த நிலையில்” இருப்பதாக கூறிய மோடியின் கூற்று சந்தேகத்திற்குரியது என்பது தெளிவாகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தது குறித்த அவரது பெருமிதப் பேச்சைப் பொறுத்தவரை, மோசமாக திட்டமிடப்பட்ட, மிக மோசமாக செயல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு பற்றியோ, அது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியோ, பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றியோ கூட குறிப்பிடப்படவில்லை. மாறாக, மறுபரிசீலனை தேவையில்லை என்றே நிபுணர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கீழேயுள்ள வரைபடம் இந்தியா முழுவதும் புதிய COVID-19 தொற்றுகளின் தினசரி எண்ணிக்கையையும், தினசரி குணமடைதலையும் ஒப்பிடுகிறது. – நீல கோடு (புதிய நோய்த்தொற்றுகள்) பச்சை கோட்டைவிட (குணமடைந்தவர்கள் எண்ணிக்கை) ஏறும் போது – இந்தியா மோசமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள, இதை நீங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டாவில் “உயர் செயல்திறன்” சோதனை வசதிகளை தொடங்கும் போது வழங்கிய தனது உரையில், “உலகம் நம்மைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று மோடி கூறினார். உலகம், உண்மையில், இந்தியாவைப் புகழ்வதில்லை. ஒருவேளை உலகம் இந்தியாவை கவனித்திருந்தால், இந்தியாவில் நோய் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பதையும், இந்தியா போதுமான அளவு சோதனை செய்யாததால் குறைத்து மதிப்பிடப்படுவதையும் கவனிக்க நேர்ந்திருக்கும்.

ஜனவரி 31 ஆம் தேதி முதல் நோய் பதிவு செய்யப்பட்டதிலிருந்து COVID-19 நோய் வளர்ச்சி விகிதத்தை குறிக்கும் வரைபடத்தின் படி, வளர்ச்சி விகிதம் ஏப்ரல் தொடக்கத்தில் 22.6% இருந்து ஜூலை இரண்டாவது வாரத்தில் 3.4% ஆக குறைந்தது, ஜூன் மாத தொடக்கத்தில் ஊரடங்குக்கு பின் 4.4% ஆகவும் இருந்தது.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் வழக்குகளின் வளர்ச்சி விகிதத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட இந்த சரிவு அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற அதிக நோய்களைக் கொண்ட பிற நாடுகளை விட குறைவாக இருக்கிறது.

ருக்மிணி எஸ் மற்றும் நிகில் ராம்பால் ஆகியோர் நிரூபிக்கிறபடி, இந்தியாவில் கோவிட் -19 தொற்றுகளின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும்: “கிட்டத்தட்ட 200 நாடுகளில் 18 நாடுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் அந்நாடுகளில் (அர்ஜென்டினா தவிர 1.5 லட்சம் தொற்றுகள்) சில நூறு அல்லது சில ஆயிரம் தொற்றுகள் மட்டுமே உள்ளன”

‘நமது உலக தரவு’ என்பதிலிருந்து பின்வரும் விளக்கப்படத்தைக் கவனியுங்கள், இது அதிக நோய்களைக் கொண்ட நாடுகளுக்கான நோய் இரட்டிப்பாகும் நேரத்தை குறிக்கிறது:

அமெரிக்கா மற்றும் பிரேசிலில், நோய்கள் முறையே ஒவ்வொரு 41 மற்றும் 33 நாட்களுக்கு இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் இந்தியாவில் நோய் இரட்டிப்பாக 21 நாட்கள் மட்டுமே ஆகிறது. 19 நாட்களில் நோய் இரட்டிப்பாகி வரும் தென்னாப்பிரிக்காவைத் தவிர, அதிக நோய்களைக் கொண்ட ஒவ்வொரு நாடும் இந்தியாவை விட மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது.

மோடியைப் போலவே, பவுலின் வாதமும் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட அளவுகளில் தங்கியிருக்கிறது, அவை மற்ற நாடுகளை புறக்கணித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தொடர்புடைய புள்ளிவிவரங்களுடன் சாதகமாக ஒப்பிட்டுப் கையாளப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அத்தகைய ஒரு பயிற்சிக்கு எளிதில் வழிவகுக்கிறது, மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய எண்களையும் கணக்கீடுகளையும் கொண்டுள்ளது.

பல பகுப்பாய்வுகள் ஊரடங்கு இல்லாமல் நாம் இருக்கும் சூழ்நிலையைப் பற்றிய தெளிவான விவரத்தைக் கொடுக்கின்றன. ஊரடங்கு இல்லாவிட்டால் கோடியை தாண்டியிருக்கும். ஒரு மாதிரியின் அடிப்படையில், மே நடுப்பகுதி வரை ஊரடங்கு 14-29 லட்சம் கோவிட் -19 தொற்றையும் 37,000 முதல் 78,000 இறப்புகளையும் தடுத்திருக்கிறது என்று புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஜூலை நடுப்பகுதியில் கூட, நாம் இன்னும் அதிக நோயை எட்டவில்லை, இது மே மாத நடுப்பகுதியின் ஒரு மோசமான யதார்த்தம்.

இந்த வரைபடத்தில் மூன்று விளக்கங்கள் உள்ளன. இவை தோராயமானவையே.

ஒரு மாதிரியின் அடிப்படையில், மே நடுப்பகுதி வரை ஊரடங்கு 14-29 லட்சம் கோவிட் -19 தொற்றுகளையும் 37,000 முதல் 78,000 இறப்புகளையும் தடுத்திருக்கிறது என்று புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்த இறப்பு மதிப்பீடுகள் நடுத்தர வளைவு குறிக்கிறது. எவ்வாறாயினும், மே 15 க்குள் 54,000 இறப்புகளை ஊரடங்கால் தவிர்க்கப்பட்டது என்ற மதிப்பீடு ஒட்டுமொத்தமாக (மேல் வளைவு) தவிர்க்கப்படக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கையை அறியாமலும், இறப்பை விளக்காமலும் கூறப்பட்டிருக்கிறது.

மேல் வளைவு குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு விவாதத்திற்கு உட்பட்டது. சிறுநீரக செயலிழந்த ஒருவர் மருத்துவமனைகள் கோவிட் -19 பராமரிப்பு வசதிக்கு மாற்றப்பட்டதால், சில வாரங்களுக்கு டயாலிசிஸை அணுக முடியாததால் இறந்துவிட்டால், அவரது மரணம் ‘COVID-19 காரணமாக ஏற்பட்ட மரணம்’ என்றும் கருதப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இத்தகைய மறைமுக விளைவுகளுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

உதாரணமாக, இந்தியா இன்று பெரிய அளவிலான பிபிஇ மற்றும் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கிறது, அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனை படுக்கைகளை அமைத்துள்ளது மற்றும் தளவாடங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற விஷயத்தில் மோடி தனது கவனத்தை செலுத்துகிறார், அவர் காணாத விஷயங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

ஏப்ரல் மாதத்தில், நாட்டில் அழைக்கப்படும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த குடிமக்களாக தங்கள் கடமைகளைப் பற்றி அழைப்பவருக்கு நினைவூட்டும் தானியங்கு செய்தியுடன் தொடங்குகிறது. ஆனால் நீரே கிடைக்காத ஒருவருக்கு கைகளை கழுவ அறிவுருத்துவது என்ன நன்மை தரும்? விகாஸ் பாஜ்பாய் எழுதுவது போல், “மிரட்டும் மருத்துவமனை சூழலின் எண்ணங்கள், செய்ய வேண்டிய செலவுகள், பறிபோன ஊதியங்கள், குழந்தைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு, சூழல் இவ்வாறு இருக்கும் போது “11 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளால் என்ன நன்மை!

இதேபோல், முறையாக ஊதியம் வழங்கப்படாமலும், தங்க வைக்கப்படாமலும், அரசாங்கத்தின் கோரிக்கைகளை மறுத்து இறப்புச் சான்றிதழ்களை மற்றும், சோதிக்கப்படாத மருந்துகளை நிர்வகிக்கும், மேலாளர்களால் உணவில்லாமல் இருக்கும் தொழிலாளர் பட்டாளங்கள் உருவாவது கவலைக்கிடமான விஷயம். மோசமாக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள் நோயாளிகளிடையே மருத்துவர்கள் மீதான அவநம்பிக்கையை ஆழப்படுத்தும்.

இந்திய மக்களின் அறிவியல் விழிப்புணர்வின்மையை பயன்படுத்தி அதிக குணமடையும் வீதத்தைப் போற்றிப் பேசுவது நல்லதல்ல (தொற்றுநோய்களின் போது குணமடையும் விகிதங்கள் இயற்கையாகவே அதிகரிக்கும்). “ஒவ்வொரு இந்தியனையும் நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்” என்று கூறுவது பொருத்தமற்றது, பின்னர் டாக்டர்களுக்கோ நோயாளிகளுக்கோ உதவாத தெளிவற்ற வழிகாட்டுதல்களை வரைவு செய்வது அல்லது பத்திரிகை வெளியீட்டின் மூலம் விஞ்ஞானம் செய்வது, சந்தை போலிகளால் நிரம்பியுள்ளது என்பதை மறந்து “இன்று இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட N95 முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுவது, அரசு மாவட்ட மருத்துவமனைகளை பொது-தனியார் கூட்டாண்மை முறையில் இயக்குவதற்கான நிதி ஆயோக் முன்மொழிவைப் பற்றி விவாதிக்காமல், “தொகுதி, கிராமம் மற்றும் ஜில்லா மட்டங்களில் தேவை-விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும்” திட்டங்களைக் குறித்து யோசிப்பது என பொறுப்பற்று இருக்கிறது மோடியின் பேச்சு.

இதன் விளைவாக, “சரியான நேரத்தில் சரியான முடிவுகளால் இந்தியா சிறந்து விளங்குகிறது” என்று கூறும் மோடி, ஒரு நோய் எனும் அடிப்படையில் கூட இங்கே ஒவ்வொரு ஆண்டும் பல சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருகிறது என்பதை மறந்து விடுகிறார்.

மேலும் அவர் தனது அரசாங்கத்தின் பணிகளை சிறப்பானதாக காட்ட திராட்சைக் கொத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திராட்சையை பயன்படுத்துகிறார். ஆனால், திராட்சைக் கொடிகளில் பல திராட்சைகள் புறகணிப்பாலும் தவாறான கொள்கைகளாலும் அழுகவிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அவரது அரசாங்கம் முன்பிருந்தவர்களை குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்த குறிப்பிட்ட தவறான செயல்களில் பல அவருடைய அரசாங்கத்திற்கு மட்டுமே உரியது. யாருக்குத் தெரியும் பாரதீய ஜனதா கட்சி ஆகஸ்ட் 5 அன்று இந்தியா 2 மில்லியன் நோய் எண்ணிக்கையைக் கடந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினாலும் கொண்டாடும்.

இது வயர் இணையதள கட்டுரையின் தமிழாக்கம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s