செய்தி: ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 109 தடங்களில், தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களை இயக்கும் தடத்தில், எந்தெந்த ஸ்டேஷன்களில் ரயிலை நிறுத்துவது என்பதை, தனியாரே முடிவு செய்து கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, கிலோமீட்டருக்கு, 512 ரூபாயை கட்டணமாக, தனியார் செலுத்த வேண்டும். செய்தியின் பின்னே: தனியார்மயம் என்பதே அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்பது … ரயில்வேயை ஏழைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாள்: ஓகஸ்ட் 18, 2020
முகநூலா? பாஜகவின் பின்வாயா?
செய்தி: இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குத் தனது வெறுப்பு பேச்சுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்திதான், இன்று இந்திய அரசியலை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவர்களின் மீறல்களைத் தண்டிப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக்கின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக் பாஜகவுக்கு … முகநூலா? பாஜகவின் பின்வாயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.