தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்

காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது. முன்னுரையிலிருந்து .. .. .. ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் … தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அவர்கள் ஏன் கதறுகிறார்கள்?

இந்த ஆண்டும் டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் நம்ம பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றிருக்கின்றார். இது இது வரை எந்த இந்தியப் பிரதமருக்கும் இல்லாத சிறப்பு..! என்றாலும் விளம்பரத்தை உயிர்மூச்சாகக் கொண்ட மோடி பட்டாளம் மோடிக்குக் கிடைத்த இந்தத் தனிச் சிறப்பைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக குமுறிக் கொண்டும் பாய்காட் டைம் (டைம் இதழைப் புறக்கணிபோம்) எனக் கதறிக் கொண்டும் இருக்கின்றார்கள். நடுநிலைகள் என பாவனை செய்பவர்கள் கூட … அவர்கள் ஏன் கதறுகிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதுத்துறை ஆய்வறிக்கை

"மக்கள் சேவையை மறந்த ஆட்சியாளர்கள்" வெளிச்சம் போடும் ஆய்வறிக்கை... தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவ னங்களும் 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை இறுதிப்படுத்தியுள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து  ஆய்வு அறிக்கையை, மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 16 அன்று பேரவையில் சமர்ப்பித்தனர். அது குறித்து ஒரு கண்ணோட்டம்: 276 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கைக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் முன்னுரை … பொதுத்துறை ஆய்வறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்

செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!

பலநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக … இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)

செய்தி: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை … விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்

செய்தி: திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம், “தமிழக அரசு எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986 மற்றும் 92ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் போதும் தொடா்ந்தது. புதிய … இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் 142

கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 76 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது. இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.. "போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" "கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்" "உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்" … பெரியார் 142-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?

செய்தி: பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். … ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராகோஸ் குலம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 15 இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம். குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் – இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன – கிரேக்கர்களின் genea உடனும் ரோமானியர்களின் gentes உடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங்கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; … இராகோஸ் குலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.