தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர் கூட்டம் தோழர்கள் நாத்திகன் சுரேந்திரனுக்காகவும், செந்தில்வாசனுக்காகவும் வாதிடச் சென்றேன். அவர்களைப் புழல் சிறையிலிருந்து அழைத்து வருவார்கள் என்று வழக்கறிஞர் துரை அருண் சொல்லியிருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தைக் காட்டி அவர்களைக் கொண்டுவரவில்லை. காணொலி வாயிலாக அவர்கள் முறையிட்டிருக்கக் கூடும். சிறையில் அவர்களிடம் கடுமையான கெடுபிடி காட்டப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். … கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாள்: செப்ரெம்பர் 12, 2020
கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?
செய்தி: கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி … கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.