
நீட் தேர்வு, மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். சமூகத்தின் மீது அக்கரையுள்ள அனைவரையும் இந்தச் செய்தி கடுமையாகத் தாக்கியுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் ஆற்றாமைகளை. கவலைகளை, கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர், வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
உடனே சங்கிகள் அவருக்கு எதிராக பல முனைப்புகளை செய்யத் தொடங்கி உள்ளனர். பொதுவாக திரைத் துரையில் உள்ளவர்கள் சமூகம் குறித்த தங்கள் புரிதல்களை பகிர்ந்து கொள்வது மிக அரிது. ஆனால் சூர்யா தொடர்ந்து அதை செய்து வருகிறார். மட்டுமல்லாது, ஒரு கல்வி குறித்து ஒரு அறக்கட்டளை நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது நோக்கம், இலக்கு, பயணப்படும் திசை போன்றவை ஆய்வுக் குறியவை என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் குறி வைத்து தாக்கப்படுவது தொடர்கிறது. இந்த அடிப்படையிலிருந்து நீட் தேர்வு குறித்த அவருடைய கருத்துகள் வரவேற்கப்பட வேண்டியவை. இப்போது மட்டுமல்லாமல் தொடக்கத்திலேயே நீட் தேர்வு குறித்த ஒரு விவாத நூலை, “நீட் தேர்வு: சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்” என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
அந்த நூலில் ஏன் இந்த வெளியீடு எனும் பகுதியில் சூர்யா எழுப்பியிருக்கும் இரண்டு எளிமையான கேள்விகள்,
1. ஓட்டப் பந்தயத்தில் சிலரின் கை கால்களை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு முதலில் வந்தவர்களுக்கே பாரிசு என அறிவிப்பது எந்த விதத்தில் சரி?
2. புரிந்து கொள்ளப்பட வேண்டிய விதயங்களைப் பற்றி எந்தவிதமான உரையாடலோ விவாதமோ செய்யாமல் எதை சாதிக்க நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்?
இந்தக் கேள்விகளே நூலின் உள்ளடக்கத்தை தெளிவாக்கி விடுகிறது. நீதிபதி சந்துரு, டாக்டர் இரவீந்திரநாத், ரவிக்குமார், திருமாவளவன், முனைவர் குழந்தைசாமி உள்ளிட்ட பலரின் கட்டுரைகள் விவாதத்துக்கான தொகுப்பு என்று இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்.
தமிழனுக்கு மட்டும் நீட் தோ்வு எப்படி தீட்டாகும்.1.76 லட்சம் போ்கள் நீட் தோ்வு எழுதியிருக்கின்றார்கள். அனைவரும் ஜெஇ தோ்வை எழுதுகின்றார்கள். ஜெஇஇ தோ்வு தீட்டு என்று யாரும் சொல்லவில்லை. பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது.யாரும் தற்கொலை செய்யவில்லை. தமிழன் மட்டும் ஏன் இந்த முட்டாள்தனத்தை செய்கிறான் .
1. நீட்டை ரத்து செய்து விடுவோம். மருத்துவகல்லூரிக்கு அனுமதி எந்த அடிப்படையில் செய்வது. 12ம் வகுப்பு இறுதித்தோ்வின் அடிப்பைடயில் செய்யலாம் என்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில் 4000 இடங்கள்தாம். ஒரு லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள். மீதி 96000 பேர்களின் மருத்துவ கல்வி கனவு கலைந்துதானே போகும். தற்கொலை நடந்தால் யாா் பொறுப்பு?
2. அரசு பள்ளியில் 12 வருடங்கள் பணியாற்றிய இயற்பியல் பட்டதாரி ஆசிரியா்ஆசிரியரிடம் நீட் தோ்வில் கேட்ட ஒரு வினாவைக் கேட்டேன். அவருக்கு பதில் தெரியவில்லை. அந்த கணக்கிற்கு விடை அறிய அவருக்கு ஆா்வம் இல்லை.A வடிவத்தில் உள்ள ஒரு மின் சுற்றின் மேல் உச்சியின் கோணம் 60டிகிரி. பிற பகுதியின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது. குறுக்கு கம்பியின் நீளம் கொடுக்கப்படவில்லை. அதைக்கண்டு பிடிக்கத்தான் அறுபதி டிகிரி கொடுக்கப்டடுள்ளது. ஒரு முக்கோணத்தின் ஒரு கோணம் அறுபது என்றால் அது சமபக்க முக்கோணம். எனவே குறுக்கு கம்பியின் நீளம் கண்டுபிடித்து விடலாம். இந்த கணக்கில் parallel & serial மின் இணைப்பு உள்ளது. இந்த இரண்டு கருத்தும் விளங்கினால் கணக்கு தீர்வு வந்து விடும்.
அறிவியல்பத்திரிகைகள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை அறிவீர்களா ? எத்தனை பேர்கள் ? தமிழ்நாட்டில் அறிவியல் பத்திரிகைகள் வீட்டிற்கு வாங்கிப்படிக்கும் ஆசிரியா்கள் எத்தனை பேர்கள் ? பெரும்பாலும் 0 தான். நீட் தோ்விற்கு பயன்படும் பத்திரிகைகள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளது.தமிழில் உள்ளதா ? இல்லை. ஆங்கிலத்தில் உளள பத்திரிகைகள் படிக்கும் ஆசிரியர்களள் தமிழ்நாட்டில் அல்பம். மாணவர்களை நீட் தோ்விற்கு எப்படி தயாா் செய்வது ? அறிவியல் கணக்கு ஆசிரியா்களை மேலும்மேலும் படிக்க வேண்டியதை கட்டாயமாக்கு. ஆக தகுதியற்ற ஆசிரியா்கள் தாம் ஆசிரியா்கள் கூட்டணி சங்கம் வைத்து சில அரசயில் கட்சிகளை கைக்குள் போட்டு நீட் ஒழிக என்று கோசம் போட வைக்கின்றார்கள். ஆடத் தெரியதவள் தெருக்கோணல் என்றது போல் தம்ழ்நாட்டில் உண்மை நிலை உள்ளது. ஆசிரியா்களை Neet-abled ஆக அரசு மாற்ற வேண்டும்.சம்பளம் மட்டும் வாங்கும் ஆசிரியா்கள்தான் முதல் குற்றவாளிகள்.
2. போட்டி தோ்விற்கு உதவும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஹிந்தியில் சந்தையில் குவிந்து கிடக்கின்றது. ஆனால் தமிழில் இல்லை. இதனால்மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் சேருவதில்லை. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அதே நிலைமை.சென்னை IITயில் படிக்கும் 6000 மொத்த மாணவர்களில் தமிழ் மாணவர்கள் 500தான்.மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வதில்லை. இது மிகவும் ஆபத்தானது.
3.NEET/JEE/NIT/IIS/ UPSC/SSc/NDA/SSA /AIMS/JIPMER /Cental University
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க தகுதியான மாணவர்களை உருவாக்க வழி என்ன என்று பாருங்கள். மத்திய அரசின் வேலை வாய்ப்புக்களி்ல் தமிழக இளைஞர்கள் தங்களுக்குரிய பங்கை பிற மாநில இளைஞர்களுடன் போட்டி போட்டு ஜெயித்து பிடிக்க வேண்டும். அதற்கு வழி என்ன என்று தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நீட் வேண்டாம் என்று சொல்லும் ஸ்டாலின் துண்டு சீட்டைப் பாரத்து ஒழுங்காக வாசிக்கத் தெரியாதவா். அவரைப்பின்பற்றி தாங்களும்…….நீட் ஒழிக கோசம் போடுவதைப் பார்த்தால் தாங்கள் சரியான வாத்து மடையன் ஆக இருக்க வேண்டும்.
நண்பர் சுகுமார்,
தற்கொலைகள் நடக்கின்றன என்பதால் தான் நீட் எதிர்க்கப்படுகிறது என நீங்கல் நினைத்தால் அது உங்கள் தவறு.
நீட் தேர்வின் கேள்விகளுக்கு ஆசிரியர்களே பதில் கூற திணறும் போது மாணவர்கள் எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஏன் உயிரை வாங்குகிறீர்கள்?
நீட்டும் அதுபோன்ற பிற தேர்வுகளும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன வந்தது? எந்த மருத்துவர் யாருடன் ஒப்பிடும் போது தகுதிக் குறைவானவராக உங்களுக்கு தெரிகிறார்? எப்படி?
போட்டித் தேர்வு புத்தகங்கள் தமிழில் இல்லாதது தான் வேலை வாய்ப்புகள் கிடைக்காததன் காரணமா?
மாணவர்களின் தரம் நீட்டுக்கு முன் குறைந்திருந்ததா? நீட்டுக்குப் பிறகு கூடி இருக்கிறதா?
நீட் ஏன் வேண்டும் என்பது தான் கேள்வி? அதை எப்படி எல்லாம் எதிர் கொள்லலாம் என்பது கேள்வியே இல்லை. நீங்கள் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?
ஆசிரியா்களை Neet-abled ஆக அரசு மாற்ற வேண்டும்.சம்பளம் மட்டும் வாங்கும் ஆசிரியா்கள்தான் முதல் குற்றவாளிகள்.
தன் கடமையை சிறப்பாக செய்யாதவன் தமிழக ஆசிரியர்கள் சாபக் கேடு. கோவை. அரச மேல்நிலைப்பள்ளியில் படித்த ஒரு மாணவி -எந்த பயிற்சி வகுப்பிற்கும் செல்லாதவா் JEE தோ்வில் முதல் நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். சிறந்த தகுதி படைத்தவர்கள் மருத்துவ கல்வி பெற வேண்டும் என்பதுதான் நீா்
நண்பர் சுகுமார்,
ஆசிரியர்கள் கூட நீட்டுக்கு தகுதியுடையவர்களாக இனிமேல் தான் மாற வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படித்தானே. என்றால் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இப்போதே நீட் போன்ற தேர்வுகள் கட்டாயமாக்கப்படுகின்றன? நீங்கள் பதில் கூற வேண்டிய கேள்வி இது தான்.
6-12 வகுப்பு தோ்ச்சி கூட Neet-level தோ்வு நடத்தி பாஸ் போட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஆசிரியா்களை நீக்குங்கள். புதிய ஆசிரியர்களை நியமியுங்கள். அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும்.குப்பைகளை அள்ளும் போது கொஞ்சம் சங்கடங்கள் ஏற்படும். சகித்துக் கொள்ள வேண்டும். நீட் வேண்டும். அது எழுத முடியாதவன் முடிகின்ற துறையை தோ்வு செய்ய வேண்டும்.
மருத்துவ கல்வி சோ்க்கைக்கு நாடு அளவில் ஒரே அளவாக தோ்வு வேண்டும் என்பதை காங்கிரஸதிமுக கம்யுனிஸ்ட ஆகிய அனைவரும் கொண்டு வந்த சட்டம்தான் நீட். இப்போது இவர்கள் ஏன் குலைக்கின்றார்கள். மக்களைஏமாற்றுகின்றார்கள். செங்கொடியும் ஏதோ வாங்கிய காசுக்கு பொங்குகின்றாா்.
நாடு முழுவதும் ஒரே சீரான தரத்தில் மருத்துவ கல்விக்கு ஆள் சோ்க்கை நடைபெற வேண்டும் என்றுதான் காங்கிரஸ“ திமுக கூட்டணி நீட் தோ்வை கொண்டு வந்தது. நீட் தோ்வு வந்தால்தான் ஆசிரியா்கள் படிப்பார்கள். மாணவர்களும் அவர்களிம் நீட ஜெயி வினாத்தாள்களைக் கொடுத்து விளக்கம் கேட்பார்கள். வாழ்க நீட் தோ்வு.ஆசிரியா்களை படிக்க வைக்க இதுதான் சிறந்த வழி
நண்பர் சுகுமார்,
ஆசிரியர்களே நீட்டுக்கு தகுதியாகவில்லை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள். என்றால் ஆசிரியர்கள் தகுதியாவதற்கு முன்பே மாணவர்கள் தகுதியாக வேண்டும் என்று திணிப்பதை ஏற்க முடியாது என்று தானே தர்க்கப்படி நீங்களும் கூற வேண்டும். ஆனால் மாற்றுகிறீர்களே ஏன்? இதற்காக நீங்கள் யாரிடம் காசு வாங்கினீர்கள்?
இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு தானே தவிர ஒரே தேசமல்ல. இங்கு அந்த பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் கல்வி முறைதான் வேண்டும். அதற்கு எதிராக யார் செயல்பட்டாலும் தவறு தான். திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளும் இதில் விலக்கில்லை. தவிரவும் காங்கிரஸ் கொண்டுவர விரும்பிய நீட்டுக்கும், பாஜக திணிக்கும் நீட்டுக்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
இது எதையுமே உணர்ந்து கொள்ள முயற்சிக்க மாட்டேன் என்றால் அங்கு ஆர்.எஸ்.எஸ் அஜண்டா உள்ளிருக்கிறது என்பது தான் பொருள். அதாவது நீங்கள் காசு வாங்கியிருந்தாலும் வாங்காவிட்டாலும்.
நன்றி.
இதற்காக நீங்கள் யாரிடம் காசு வாங்கினீர்கள்?
நாயைஅடிப்பானேன் .பீ யை சுமப்பானேன் என்பது பழமொழி.
அதுபோல் தங்களிடம் இப்படி ஒரு விமா்சனத்தை நான் ஏற்க வேண்டியதாயிற்று.
மாற்றுக்கருத்து கொண்டவர்களை ஆாஎஸஎஸஎன்று விமா்சனம் செய்வது படு முட்டாள்தனம்.
நண்பர் சுகுமார்,
உணர்ச்சிவயப்படாமல் நடந்த உரையாடல்களை நிதானமாக படித்துப் பாருங்கள். நான் எழுப்பி இருக்கும் கேள்விகளை பரிசீலிக்கவோ பதிலளிக்கவோ நீங்கள் ஆயத்தமாக இல்லை. அடுத்து என்ன காரணத்துக்காக நீட் போன்ற தேர்வுகள் கொண்டுவரவேண்டிய தேவை எழுந்தது என்பதற்கு உங்கள் பக்க விளக்கங்களை நீங்கள் முன்வைக்கவே இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது தான் நீங்கள் வலதுசாரி கருத்துடையவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாறாக மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாலேயே உங்களை ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரை குத்தவில்லை.
உங்கள் கருத்தோடு மாறுபடுகிறேன் என்பதால் தானே \\செங்கொடியும் ஏதோ வாங்கிய காசுக்கு பொங்குகின்றாா்// என்று எழுதினீர்கள்.
உங்கள் கருத்தை விவாதியுங்கள், அது எப்படிப்பட்ட கருத்தாக இருந்தாலும் சரியா தவறா என்று விவாதங்களின் வழியே முடிவெடுக்கலாம். மாறாக முத்திரை குத்த முயலாதீர்கள். அது வலதுசாரிகளின் கருவி. உங்கள் கருத்துகளிலிருந்து நீங்கள் வலதுசாரியாகத் தான் தெரிகிறீர்கள். எனவே, நீங்கள் ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் கொண்டவராகவே உங்களை மதிப்பிடுகிறேன். தவறென்றால் அதை முன்வையுங்கள். தொடர்ந்து பேசலாம்.