அவர்கள் ஏன் கதறுகிறார்கள்?

இந்த ஆண்டும் டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் நம்ம பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றிருக்கின்றார். இது இது வரை எந்த இந்தியப் பிரதமருக்கும் இல்லாத சிறப்பு..!


என்றாலும் விளம்பரத்தை உயிர்மூச்சாகக் கொண்ட மோடி பட்டாளம் மோடிக்குக் கிடைத்த இந்தத் தனிச் சிறப்பைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக குமுறிக் கொண்டும் பாய்காட் டைம் (டைம் இதழைப் புறக்கணிபோம்) எனக் கதறிக் கொண்டும் இருக்கின்றார்கள். நடுநிலைகள் என பாவனை செய்பவர்கள் கூட டைம் இதழின் அந்த அழுத்தமான ‘புகழாரங்களைக்’ கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றார்கள்.


நம்ம பிரதமர் குறித்து டைம் பதிவு செய்துள்ள வாசகங்கள் அவர் மீதான கறாரான கண்டனஙகளாய் இருப்பதுதான் காரணம். மோடி குறித்து டைம் இதழ் பதிவு செய்துள்ள வாசகங்கள் அனைத்தும் சுளீர் சுளீர் என்று தைக்கக் கூடிய சுடுசொற்களாய் அமைந்துவிட்டன. இது வரை எவருமே இந்த அளவுக்கு டீசன்டாக, அழகாக, செம்மையாக மோடியை விமர்சித்தது கிடையாது எனலாம். இந்திய உணர்வுகளுக்கும் இந்தியாவின் ஆன்மாவுக்கும் நேர் எதிரான வெறுப்பு சித்தாந்தத்தின் மீதும் எவருமே இந்த அளவுக்கு துல்லியத் தாக்குதல் நடத்தியதில்லை எனலாம்.

டைம் இதழ் பொன்னெழுத்துகளால் பொறித்திருக்கின்ற கண்டன வாசகங்கள் வருமாறு:

The key to democracy is not, in fact, free elections. Those only tell who got the most votes. More important is the rights of those who did not vote for the winner.

India has been the world’s largest democracy for more than seven decades. Its population of 1.3 billion includes Christians, Muslims, Sikhs, Buddhists, Jains and other religious sects. All have abided in India, which the Dalai Lama (who has spent most of his life in refuge there) has lauded as “an example of harmony and stability.”


Narendra Modi has brought all that into doubt. Though almost all of India’s Prime Ministers have come from the nearly 80% of the population that is Hindu, only Modi has governed as if no one else matters. First elected on a populist promise of empowerment, his Hindu-­nationalist Bharatiya Janata Party rejected not only elitism but also pluralism, specifically targeting India’s Muslims.


The crucible of the pandemic became a pretense for stifling dissent. And the world’s most vibrant democracy fell deeper into shadow.

இதன் தமிழாக்கம்

மக்களாட்சியின் அடிநாதமே சுதந்திரமான தேர்தல்கள்தாம். இந்தத் தேர்தல்களோ யாருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன என்பதை மட்டும்தான் விவரிக்கின்றன. ஆனால் அதனை விட முக்கியத்துவம் மிக்கது வெற்றியாளருக்கு வாக்களிக்காத மக்களின் உரிமைகள்தாம்.

கடந்த எழுபதாண்டுகளாய் உலகத்தின் மிகப் பெரும் மக்களாட்சியாக இந்தியா இருந்து வந்துள்ளது. இந்தியாவில் வாழும் மக்களில் – 130 கோடி மக்களில் – கிறித்துவர்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும், புத்தர்களும், ஜெயின்களும் பிற மதப் பிரிவுகளையும் சார்ந்தவர்களும் அடக்கம். எல்லாத் தரப்பினரும் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றார்கள்.


இதனால்தான் இந்த நாட்டை ‘இணக்கத்துக்கும் நிலைத் தன்மைக்கும் முன்மாதிரியான தேசம்’ என தலாய் லாமா வெகுவாக சிலாகித்திருக்கின்றார். (தலாய் லாமா தம்முடைய வாழ்வின் பெரும் பகுதியை இந்த நாட்டில்தான் கழித்திருக்கின்றார்).


நரேந்திர மோடி இவையெல்லாவற்றையும் சந்தேகத்துக்குரியனவாய் ஆக்கிவிட்டிருக்கின்றார்.
இது வரை இந் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அனைவருமே இந்த நாட்டின் மக்கள் தொகையில் 80% – ஆக இருக்கின்ற இந்துக்களிலிருந்தே வந்திருக்கின்றார்கள். என்றாலும் நரேந்திர மோடி மட்டுமே இந்துக்களைத் தவிர மற்ற தரப்பினர் எவருமே பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்லர் என்கிற உணர்வுடன் ஆட்சி செலுத்தி வருகின்றார்.


அவர் சார்ந்திருக்கின்ற இந்து மதவாத பாரதிய ஜனதா கட்சி மேட்டிமையை (elitism) மட்டுமின்றி நாட்டின் பன்மைத் தன்மையையும் (pluralism) முற்றாக ஒதுக்கியிருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம்களை குறி வைத்து இயங்கி வருகின்றது. கொரோனா போன்ற பேரிடரும் கொள்ளை நோயும் எதிர் குரலை ஒடுக்குவதற்கான வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளப் பட்டிருக்கின்றது. உலகத்தின் மிகத் துடிப்பான ஜனநாயகம் கரிய நிழலின் குழியில் சறுக்கி விழுந்துவிட்டது.

கார்ல் விக், முதன்மை ஆசிரியர், டைம் ஏடு.

முதற்பதிவு: அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் முகநூலில்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s