
காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது.
முன்னுரையிலிருந்து .. .. ..
ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் இருந்ததை எல்லாம் அறியும் போது வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய மன்னர்களை மக்களே வெறுத்து ஒதுக்கி, சமத்துவம் பேணி, கல்வியிலும் இலக்கியத்திலும் செழித்துச் சிறந்த காலமும் இருந்திருகிறது .. .. ..
தமிழன் தனது பழங்காலப் பெருமைகளை நினைத்துப்பார்க்க வேண்டாம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முன்னோர் வாழ்ந்த கேவலமான வாழ்க்கையைக் கூட நினைத்துப் பார்க்க மறுப்பது தான் மிகப் பெரிய வேதனை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து மீட்டெடுத்து இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளி இருக்கும் முன்னேற்றத்தைக் கூட நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள் .. .. ..
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்.