
செய்தி:
சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.4,321 கோடியை விரைவில் வழங்க உறுதி அளித்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியின் பின்னே:
ஒன்றிய அரசு இருந்த பல வரி முறைகளை ஒழித்து ஜி.எஸ்.டி கொண்டுவந்தது யாருடைய தேவைக்காக என்ற கேள்வியோடு இனைக்காமல் நிலுவைத் தொகை சிக்கலை புரிந்து கொள்ள இயலாது. (விரிவாக புரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கலாம்)
மக்களோ, மாநிலங்களோ இப்படி ஒரு வதிவிதிப்பு முறை வேண்டும் என்று கோரவில்லை, போராடவில்லை. இந்த வரிவிதிப்பினால் பலனடைந்தது ஒன்றிய அரசும், கார்ப்பரேட்டுகளும் தான்.
இந்த வரிவிதிப்பு முறையை செயல்படுத்த பல மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட (ஜெயலலிதா இருந்தவரை) கடுமையாக எதிர்த்தன. அப்போது மநிலங்களுக்கான தொகை முழுமையாக வழங்கப்படும் என உறுதியளித்தது ஒன்றிய அரசு. ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்று இருந்ததை பல மாநிலங்கள் கடுமையாக போராடி நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து தான் 2 மாதங்களுகு ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தது.
ஆனால் தற்போது 2017-18 ம் நிதி ஆண்டிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு சொல்லும் மூன்று காரணங்கள், 1. நிதி நெருக்கடி, 2. கொரோனாவால் கூடுதல் செலவுகள், 3. கொரோனாவல் வருவாய் பாதிப்பு. இந்த காரணங்கள் ஒன்றிய அரசுக்கு மட்டும் தானா? மாநில அரசுகளுக்கு இல்லையா?
மாநிலங்களை கடன் வாங்கச் சொல்லும் ஒன்றிய அரசு, தானே கடன் பெற்று அதை மாநில அரசுகளுக்கு பிரித்தளித்தால் என்ன?
ஒரே காரணம் தான். கொரோனாவுக்கு முன்பிருந்தே நிலவிவரும் சந்தை தேக்கம், நிதி நெருக்கடியை சமாளிக்க காரப்பரேட்டுகளுக்கு தனித்தனி மாநில அரசுகளாக இல்லாமல் முழு அதிகாரம் பெற்ற ஒற்றை அரசு தேவைப்படுகிறது. பார்ப்பனியத்துக்கு தங்கள் லட்சியமான அகண்ட இந்தியாவை அமைக்க மாநில அரசுகள் பலமிழக்க செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஜி.எஸ்.டி மட்டுமல்ல ஒன்றிய அரசு செயல்படுத்தும், செயல்படுத்த முனையும் அனைத்து திட்டங்களிலும் இந்த இரண்டு காரணங்கள் தான் இருக்கின்றனவே அன்றி வேறொன்றுமில்லை.
அதாகப்பட்டது, “எரியுறத புடுங்கிட்டா கொதிக்கிறது அடங்கிடும்னு நெனக்குறாங்க” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 21/2020