இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, புதிய வேளாண் கொள்கை, புதிய தொழிலாளர் கொள்கை, அயோத்தி கோவில் உள்ளிட்டு பல திருத்தங்களும், கொள்கை முடிவுகளும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதத்தை நோக்கியும், கார்ப்பரேட்டுகளின் கேள்வி கணக்கற்ற சுரண்டலை நோக்கியும் நாலுகால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருக்கிறது. இந்த விரைதலுக்கான அடிப்படை 2019 தேர்தலில் பாஜக பெற்ற அறுதிப் பெரும்பான்மையான வெற்றியில் அடங்கி இருக்கிறது.
அனைத்து ஊடகங்களையும் கையில் வைத்துக் கொண்டு தேர்தலுக்கு முன்பே பாஜக தான் வெல்லும் எனும் முன்னறிவிப்பை கருத்துக் கணிப்பு என்ற பெயரில் திணித்தது தொடங்கி தேர்தலுக்கு பிறகு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் முடிவுகளும் வாக்கு எந்திரத்தின் முடிவுகளும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வித்தியாசமாக இருக்கின்றன என்பது வரை பல ஐயங்கள் எழுப்பபட்டு விட்டன. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது தொடங்கி, தேர்தல் கமிசனின் இணைய தளத்தில் ஆதரபூர்வ தகவல்களை அழித்தது ஏன்? எனும் கேள்வி வரை பலவற்ருக்கு விடை தெரியாமல் மக்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசு நிறுவனங்களோ இது குறித்து கணத்த மௌனத்தையே எப்போதும் பதிலாக வைத்திருக்கின்றன.
இதோ அந்த வரிசையில் மீண்டும் ஒரு ஆதார ஐயமாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து குயிண்ட் இணைய தளத்தில் 23 ஆகஸ்ட் 2020 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம். இதன் சான்றாதாரங்களும் கணொளிக் காட்சியாகவும் குயிண்ட் வெளியிட்டுள்ளது.
படியுங்கள் புரிந்து கொள்ளுங்கள் பரப்புங்கள்.
வாக்குப்பதிவு, ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் ஆபத்து
ஒப்பந்த பொறியாளர்கள் EVM, VVPAT (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்களின் வடிவமைப்பு குறித்த தகவல்களையோ தேர்தல் நடைமுறை மற்றும் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை எளிதாக வெளியே சொல்லிவிட முடியும். ஒருவேளை, சுரேஷிடம் EVM இன் உற்பத்தி குறித்த அறிவு இருக்குமானால் அவரைப் போன்ற பல பொறியாளர் குழுவை வேலைக்கு அமர்த்தி எந்த ஒரு நிறுவனமும் EVMகளை உற்பத்தி செய்யத் தொடங்கலாம். இது தேர்தல் நடைமுறைகளை மோசமாக பாதிக்கும்.
சுரேஷ் (மாற்றப்பட்ட பெயர்), ECIL முன்னாள் ஒப்பந்த பொறியாளர்.
மேற்கூறியவை தேர்தல் கமிஷனின் EVM மற்றும் VVPAT உற்பத்தியில் ஈடுபடும் ECIL (Electronic Corporation of India Limited), PSU (Public Sector Unit) ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்த ஒப்பந்த பொறியாளரின் கூற்று.
பெயர் குறிப்பிட விரும்பாத அவர் குயிண்ட் இனயதளத்துக்கு அளித்த பேட்டியில் தனியார் பொறியாளர்களால் எவ்வாறு இந்தியாவின் தேர்தல் நடைமுறைக்கு தீவிரமான பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்படுகிறது என்று கூறினார்.
ஆகஸ்ட் 2019 இல் குயிண்ட் இனயதளம், தேர்தல் கமிஷன், தனியார் நிறுவனம் மூலம் (T&M Services Consulting Private Limited) மாநில தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல்களில் EVM மற்றும் VVPAT இயந்திரங்களை கையாள ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர்களை நியமித்தது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தது. மட்டுமல்லாது, T&M Services நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி வழங்கவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

வெளியிலிருந்து எந்த பொறியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படவில்லை என ECIL உறுதியளித்ததாக தேர்தல் கமிஷன் அந்த நேரத்தில் கூறியிருந்தது.
ஆனால் நாங்கள் பேசிய பொறியாளர் அவரின் ECIL ஒப்பந்தத்தை காட்டினார் அதன் படி அவர் நவம்பர் 2018 இல் இளநிலை தொழில்நுட்ப அலுவலராக 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
ECIL நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம் என்று குறிப்பிட எங்களை தடுத்தது
T&M யின் பட்டயப்படிப்பு பெற்றவர்களால் சிறிதளவு பயிற்றுவிக்கப்பட்டோம். அவர்கள் EVM மற்றும் VVPAT தொடர்பானவற்றை செய்து காட்டினார்கள். அவை அடிப்படையான பயிற்றுவிப்புகளே, எவ்வாறு Control Unit (CO) இல் நேரத்தை சரிசெய்வது மற்றும் சிறிதளவு EVM மற்றும் VVPATயை சரிசெய்வது குறித்து. வேலையில் இவற்றயே பெரும்பாலும் கற்றோம்.
சுரேஷ் (மாற்றப்பட்ட பெயர்), ECIL முன்னாள் ஒப்பந்த பொறியாளர்.
கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் ஒப்பந்த பொறியாளர்களாலே நிறைவேற்றப்பட்டது, ECIL இன் நிரந்தர பொறியாளர்களால் அல்ல என சுரேஷ் குறிப்பிடுகிறார். மேலும் அவரும் அவரது சகாக்கள் அனைவரும் ஒப்பந்த பொறியாளர்கள் என்பதை மறைக்க ECIL கண்காளிப்பாளர்களால் வலியுறுத்தப்பட்டார்கள்.
பயிற்றுவிப்பின் போது, ECIL இயதிரங்களை பற்றி கூறியதை விட அதிகமாக எங்களை எவ்வாறு மற்றவர்கள் முன் ECIL பொறியாளர்களாக காட்டிக்கொள்வது என பயிற்றுவித்தார்கள். ECIL, நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம் என்று குறிப்பிட எங்களை தடுத்தது. நீங்கள் இந்தியா முழுக்க உள்ள மாவட்ட நீதிபதிகளிட கேட்டுப் பார்க்கலாம் நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.
சுரேஷ் (மாற்றப்பட்ட பெயர்), ECIL முன்னாள் ஒப்பந்த பொறியாளர்.
அலட்சியப்படுத்தப்பட்ட EVM & VVPAT யின் குறைபாடுகள்
இது பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொறு முன்னாள் ECIL ஒப்பந்த பொறியாளரால் உறுதிப்படுத்தப்பட்டது.
குயிண்ட் பேசிய இரு பொறியாளர்களும் 2019 பொதுத்தேர்தலிலும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலிலும் பணிபுரிந்தவர்கள்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அவர்களின் முதல் வேலை EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் முதல் கட்ட பரிசோதனை செய்வது. இந்த வேலை தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பு நடைபெரும். ஆனால் 2019 மக்களவை தேர்தலில் முதல் நிலை பரிசோதனை கணிசமானவற்றில் முறையாக பரிசோதனை செய்யப்படவில்லை என எங்களுக்கு (குயிண்ட் இணையதளம்) தெரியவந்தது.
முதல் நிலை பரிசோதனையின் போது 96 முறை வாக்களித்து பரிசோதிப்பது என்பது கட்டாயமான நடைமுறை. சில சமயங்களில் அவர்கள் (T&M பொறியாளர்கள்) 75 முறையிலேயே அதை அனுமதித்து விட்டனர். மேலும் அவர்கள் குறையுள்ள இயந்திரங்களையும் அலட்சியமாக பயன்பாட்டுக்கு அனுமதித்தனர்.
அஷோக் (மாற்றப்பட்ட பெயர்), ECIL முன்னாள் ஒப்பந்த பொறியாளர்.
முதல் நிலை பரிசோதனையின் போது EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் முற்றிலுமாக முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும். குறைபாடுடைய இயந்திரங்கள் அடையாளப்படுத்தபடாமல் சரி செய்யாமல் விட்டால் தேர்தலின் போது அதிக அளவு EVM-VVPAT யில் குறைபாடுகள் ஏற்படும்.
ஒப்பந்தம் ஏன் நீட்டிக்கப்படவில்லை என தெரியவில்லை
நவம்பர் 2019 இல் பெற்ற நீட்டிப்புக்கு பிறகு மே 2020 இல் நாங்கள் பேசிய அவர்கள் இருவர் உட்பட 187 பேரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அவர்கள் ஏன் எனக்கு நீட்டிப்பு வழங்கவில்லை என தெரியவில்லை. ECIL இடம் வேறு திட்டம் ஏதும் இல்லை ஆகையால் நீட்டிப்பு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தியதால் நாங்கள் வேறு வேலை தேடி பார்க்குமாறு எங்களிடம் கூறினர்
சுரேஷ் (மாற்றப்பட்ட பெயர்), ECIL முன்னாள் ஒப்பந்த பொறியாளர்.
ஆனால், அவர்கள் வெளியேற்றப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு ECIL பொறியாளர் தேவை எனும் விளம்பரத்தை மீண்டும் வெளியிட்டது.
நிருபர்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களா?
சுரேஷ்: அனுபவமுடையவர்கள் அல்லர். விளம்பரத்தில் ஒரு வருடம் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருப்பார்கள் ஆனால் அதை பின்பற்ற மாட்டார்கள். நான் பணிபுரியும் சமயத்திலும் முற்றிலும் புதியவர்கள் பலர் இருந்தனர்.
நிருபர்: புது நபர்களும் 1-2 நாள் பயிற்சி தான் பெருவார்களா?
சுரேஷ்: ஆம், அதே அடிப்படையான பயிற்சிதான் – இது Control Unit, இது Ballot Unit, இது VVPAT என்பன போன்றவையே. மேலும் நிர்வாகத்திலிருந்து யாரேனும் கேட்டால் நாங்கள் ஒப்பந்த பொறியாளார் அல்ல நிரந்தர பொறியாளர்களே என சொல்லுமாறு கூறுவர். இவை தான் அவர்கள் அளிக்கும் பயிற்சி.
உங்களை ஏன் வேலை நீக்கம் செய்ய வேண்டும்? உங்கள் செயல்பாடு குறைபாடு உடையதாக இருந்ததா? என்று பொறியாளர்களிடம் கேட்கும் போது அவர்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிக்கையை காட்டுகிறார்கள், தலைமை தேர்தல் அதிகாரி கூறுகிறார், “VVPAT இயந்திரத்தின் குறைபாடுகள் மக்களவை தேர்தலில் 12.5% மாக இருந்தது டெல்லி தேர்தலில் 1% ஆக குறைந்தது என்று. அதுவும் பொறியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளால்”
ஆனால், பதிலளிக்கப்படாத கேள்விகள் மிச்சமிருக்கின்றன.
அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களே தேர்தலில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனக்கூறி உச்ச நீதிமன்றம் உட்பட அனைவரையும் ஏன் தேர்தல் ஆணையம் ஏமாற்ற வேண்டும்?
குறைந்த கால ஒப்பந்த பொறியாளர்களை பணிக்கு அமர்தியுள்ளோம் என தேர்தல் ஆணயைம் ஒப்புக்கொள்ளாதது ஏன்?
நாட்டின் பாதுகாப்பு கருதி EVM&VVPAT யின் வடிவமைப்பை வெளியிட மறுத்த தேர்தல் ஆணையம், ஏன் குறை அனுபவமுள்ள பொறியாளர்களிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்தது?
குவிண்டின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் கூறியதாவது “உற்பத்தியிலோ அல்லது பராமரிப்பிலோ பணிபுரியும் பொறியாளர்களை தேர்ந்தெடுப்பதோ, தக்கவைப்பதோ அல்லது நீக்குவதோ ECIL&BIL இன் தனியுரிமை. EVM இயந்திரத்தின் 100% பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் அவ்விரண்டு நிறுவணங்கள் செய்கின்றனர்.” இவை முழுமையான பதில்கள் அல்ல என்பது படிப்பவர்களுக்கு புரியும்.
ECIL இடமும் இது குறித்த கேள்விகள் அனுப்பியுள்ளோம். பதில் வந்ததும் மறுபதிப்பு செய்கிறோம்.
இது தி குயிண்ட் இணைய தள கட்டுரையின் தமிழாக்கம்