எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் எல்லாவிதமான சான்றுகளும் இருக்கும் மாபெரும் மன்னனான திப்புவின் வரலாறு, இது கற்பனைக் கதை என்ற அறிவிப்புடன் ஒளிபரப்பட்டது. மக்களை நேசிக்கும் அனைவரின் முகத்திலும் அப்பப்பட்ட சாணி இது.
இன்றும் சங்கிகள் புதிய கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். திப்பு கோவில்களை அழித்ததாக ஒரு கதை சமூக ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற இழிபிறவிகளின் அவதூறுகளுக்கு மாறாக வரலாற்றில் ஒரு புலியைப் போல் உலவியிருக்கிறான் திப்பு. வெள்ளையனுக்கு எதிராக தம் சொந்த இழப்புகளிலிருந்து தனிப்பட்டு எதிர்க்கத் துணிந்த மன்னர்களுக்கு இடையே உலகளாவிய கூட்டை சிந்தித்தவன் திப்பு. வெள்லையனின் செருப்பை தங்கள் நாவால் துடைத்தவர்களுக்கு திப்பு எப்போதுமே எதிரானவன் தான்.
ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு திப்பு குறித்து எந்த அளவுக்கு தெரியும்? இதோ அந்த மைசூர் புலியைப் பற்றி பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒரு கதை போல் இல்லாமல், பல்வேறு தலைப்புகளில் தனித்தனி ஆய்வர்கள் எழுதிய கட்டுரையை தொகுத்திருப்பது திப்புவை எளிதாக புரிந்து கொள்ள உதவும் வலிமையான நூலாக இத் தொகுப்பை ஆக்கியிருக்கிறது.
நூலிலிருந்து
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்