
அண்மையில் ஜெயலலிதாவுக்கு நினைவு நாள் வந்தது. அது என்ன நோயோ தெரியவில்லை. ஒருவர் இறந்து விட்டால் அவரைப் பற்றி நல்லவிதமாகத் தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என நினைக்கும் பொதுப்புத்தி இங்கே பலருக்கும் இருக்கிறது. இந்த நோய்க்கு எப்படி, எங்கு மருத்துவம் செய்வது?
2ஜி குறித்து எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பேசுகிறார்கள். அது ஊழலாக இருந்திருந்தால் அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், பலனடைந்தவர்களாகவும் இருக்கும் கார்ப்பரேட் பெருச்சாளிகள் குறித்து மூச்சுவிடக்கூட மறுக்கிறார்கள். ஆனால் திமுக என்று விரல் நீட்டுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை 2ஜி என்பது திமுகவை தாக்குவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு அவ்வளவு தான், அதற்கு மேல் ஒன்றுமில்லை.
2ஜியில் தொடர்புடையவரான அ.ராசா, அதை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படாத திமுக ஊழல் கட்சி என்பதும், நீதி மன்றம் காரித் துப்பிய பிறகும் என்ன இருந்தாலும் ஜெயா இரும்புப் பெண்மணி, நிர்வாகப் புலி என்பதெல்லாம் அரசியல் சார்ந்ததே தவிர ஊழல் சார்ந்ததல்ல.
அண்மையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அ.ராசாவுக்கும் இடையே அப்படியான எதிர்கொள்ளல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதில், மேற்குறிப்பிட்ட நோய்க்கு நல்ல மருத்துவம் செய்திருக்கிறார் அ.ராசா. என்ன சொல்வது..? பழைய பாக்யராஜ் படத்தில் வரும் ஒரு பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. ராசா ராசா தான் .. .. வெத்து கூஜா கூஜா தான்.
பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.