அன்புமிக்க நண்பர்களே வணக்கம்.
தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது.
1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து மாநாடு நடத்தப்படுகிறது. முன்பதிவு செய்து வருபவர்கள் மட்டுமே நிகழ்வில் அனுமதிக்கப் படுவார்கள்.அவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை, குறிப்பேடு, எழுதுகோல், உணவு, சிற்றுண்டி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்கிறோம்.
மேலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, 6381471330 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள். ஒரு நபருக்கு ஒரு படிவம் தான். இதை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இதிலுள்ளவற்றை ஒரு வெள்ளை தாளில் எழுதி, போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பலாம். நுழைவுக்கட்டணம் ரூ.50 ஐ நேரில் வந்து செலுத்தினால் போதுமானது. இம்மாதம் 20 ம் தேதிக்குள் படிவத்தை அனுப்பி வையுங்கள்.
மேலும் விபரம் கேட்ட விரும்பினால் அலைபேசி எண்ணில் இரவு 10 மணிக்கு முன்பு அழைத்துப் பேசுங்கள்.
இப்படிக்கு
பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு விழாக்குழு,
திருநெல்வேலி