அம்பேத்கர் கொல்லப்பட்டாரா?

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேதமையும், சிந்தனைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு, இன்றைய காலங்களில் ஒருபுறம் அவரை சாதித் தலைவராகவும், மறுபுறம் இந்துத்துவ அம்பேத்கராகவும் உருவகப்படுத்தப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறமோ தொடர்ச்சியாக அம்பேத்கரின் குறியீடுகள் சிலைகள் உடைப்புக்கும், இழிவுபடுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

அந்த மேதையின் மரணம் குறித்து தமிழ் விக்கிபீடியா பக்கம் இப்படிக் கூறுகிறது,

\\ 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. 1956 திசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது//

பெரும்பாலானவர்கள் அம்பேத்கரின் மரணம் குறித்து இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவரின் மரணத்தில் ஐயம் இருக்கிறது என்று அவர் மரணமடைந்த அந்தக் காலத்திலேயே காவல் துறையில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. என்பதும், இன்னும் அவரின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் அறிக்கை இன்று வரை வெளிவராமல் தடுக்கப்பட்டிருக்கிறது எனும் தகவலும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. முதன்மையாக அம்பேத்கரின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் சதி இருக்கக் கூடுமோ எனும் ஐயம் தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று.

ஆர்.எஸ்.எஸ் பாசிசங்கள் அம்பேத்கரையும் தங்கள் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில், அம்பேத்கரின் மரணம் குறித்தான ஐயமும், அதில் தொழிற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்தும் தெளிவுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் இந்துப் பாசிசங்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கும் இது முதன்மையானதாக இருக்கிறது.

பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s