இந்தியா மதச் சார்பற்ற நாடா?

செய்தி:

72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவத்தின் ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்றது. அப்போது முதன்முறையாக சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒலிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 15ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஏவுகணை பிரிவு வீரர்கள் துர்கா மாதாகி ஜெய், பாரத் மாதாகி ஜெய் ஆகிய கோஷங்களுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் எழுப்பினர்.

செய்தியின் பின்னே:

குடியரசு நாளில் பண்பாட்டு அலங்கார ஊர்திகளுடன் இராணுவ அணிவகுப்பு ஏன் நடத்தப்படுகிறது? குடியரசு நாளில் இராணுவ வலிமையை காட்டுவது பொருத்தமாக இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த அணிவகுப்பில் மதம் சார்ந்த முழக்கங்கள் ஏன் எழுப்பப்படுகின்றன? இந்தியா மத சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனம் கூறுகிறது. என்றால், மத முழக்கங்களை எழுப்பியதும், அதை அனுமதித்ததும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்லவா?

அரசு விழாக்களுக்கு மதச் சாயம் பூசுவது, அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டி வைப்பது, திட்டங்களை தொடங்கும் போது மதச் சடங்குகளை செய்வது என ஏற்கனவே அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவே செயல்படுவது நடந்து கொண்டிருக்கிறது. இதை கேள்விக்கு உட்படுத்தும் போதெல்லாம் இவைகளெல்லாம் பண்பாட்டு நிகழ்வுகள் என்று பிறழ் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த துர்கா, ஐயப்ப முழக்கங்களுக்கு என்ன கூறுவார்கள்?

குறிப்பாக பாஜக அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் தொடர்ச்சியாகத் தான் இந்த ஐயப்ப முழக்கங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தங்களை தேச பக்தர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்கள் தான் இதற்கு பதில் கூற வேண்டும்.

அதாகப்பட்டது, “உள்ளத சொல்லிட்டோம், ஊர் பார்த்துச் சொல்லுங்க” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s