சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொடங்கி தமிழர்களின் அடையாளமாக, மாமன்னர்களாக காட்டப்படும் யாரும் திருவள்ளுவர் குறித்து எந்தக் குறிப்பையும் தரவில்லை. திருக்குறளை அறியச் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் வரவேண்டியிருந்தது. முதன்முதலில் சீகன் பால்கு பாதிரியார் தான் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய குறிப்பைத் தந்திருக்கிறார். வீரமாமுனிவர் தான் திருக்குறளை முதன்முதலில் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இதன் பின்னர் தான் தமிழறிஞர்கள் திருக்குறளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதும் கூட திருவள்ளுவர் யார்? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் எனும் ஆய்வுகள் தான் நடந்திருக்கின்றன, நடந்து கொண்டிருக்கின்றன. திருவள்ளுவரா? திருக்குறளின் கருத்தா? எது முதன்மைப்படுத்தப்பட வேண்டும்?
திருவள்ளுவர் மயிலாப்பூரி வாழ்ந்த பார்ப்பனர் என்பதில் தொடங்கி, பறையருக்கும் பார்ப்பனருக்கும் பிறந்த மகன் என்பது வரை இங்கே ஆய்வுகள்(!) கிடைக்கின்றன. அவைகளிலிருந்து மாறுபட்ட பார்வையை வழங்குகிறது இந்த நூல்.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்