அண்டப் புழுகையும் அழ வைக்கும் பாஜக

அண்மையில் சமூக ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கும் படம் இது. மதுரையில் மோடி கட்டியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையும், வைகை நதியில் மோடி கட்டியிருக்கும் நீருக்கடியில் செல்லும் பாலமும்.

பாஜக என்ற சொல்லுக்கு பொய் என்பது தான் பொருள் என்பது சற்றேறக்குறைய அனைவருக்குமே தெரிந்த உண்மை தான். ஆனாலும் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதோ, அல்லது, அப்படி பச்சையாக புழுவதை குறைத்துக் கொள்வதோ கூட இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும்.

காந்தியைக் கொல்ல வந்த கோட்சே விருத்த சேதனம் (ஆணுறுப்பு முன் தோலை நீக்கும் இஸ்லாமிய வழமை) செய்து கொண்டு, இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்தியிருந்தான் என்பது வரலாறு.

காமராஜரை கொல்ல போட்ட திட்டத்துக்கு பசு ஊர்வலம் என்று பெயரிட்டிருந்தார்கள் என்பதும் வரலாறு. ஆனால் கோவையில் அமித்ஷா பேசிய கூட்டத்தில் காமராஜருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

இதே போல் பாஜக இன்று கொண்டாடும் சர்தார் வல்லபபாய் படேலும் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரித்தவர் அல்ல. மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸ தடை செய்வதில் முனைப்புடன் இருந்தவர்.

சாவர்க்கர் யார்? அந்தமான சிறையில் அவர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இன்றைய பொழுதில் சமூக ஊடகங்களில் வரும் செய்தி என்ன? அவர் இந்திய சுதந்திரத்துக்காக அந்தமானில் செக்கிழுத்தார் என்று பரப்புகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் என்பதில் தொடங்கி, பண மதிப்பிழப்பு ஊடாக, இன்றைய விவசாய சட்டங்கள் வரை அவர்கள் பரப்பும் அனைத்தும் பொய்கள் தான். பொய்களைத் தவிர வேறொன்றுமில்லை.

இதில் இரண்டு விதயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1. இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் கூட அவர்களுக்கு சொல்வதற்கு உண்மை ஒன்றும் இல்லை என்றால் இந்து .. .. இந்து .. .. என்ற பொயரில் அவர்கள் கூப்பாடு போடுவதும் பொய் தான். இதை தங்களை இந்து என கருதிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

2. ‘அடி முட்டாள்களாக இருக்கும் மடையர்கள்’ என்பது தான் மக்கள் குறித்து அவர்கள் வைத்திருக்கும் மதிப்பீடு. இல்லையென்றால் ஏன் இவ்வாறு பொய் சொல்ல நேர்ந்தது என்று ஒரு சிறு விளக்கமாவது அளித்திருப்பார்களே. அப்படி ஏதாவது விளக்கம் அளித்து அது உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறதா? இதை பாஜகவை, ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

அவ்வாறு சிந்திக்கத் தொடங்குவோருக்கு மேற்கண்ட இந்தப் படம் காணிக்கை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s