இவ்வளவும் ஸ்டெர்லைட்டை திறக்கத்தானா?

ஆக்சிஜனை விலைக்கு வாங்குங்கள் அல்லது கடனுக்கு வாங்குங்கள், உற்பத்தி செய்யுங்கள் அல்லது இறக்குமதி செய்யுங்கள், திருடுங்கள், கொள்ளையடியுங்கள் அல்லது பிச்சை எடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜனை வழங்கி விடுங்கள். என்று பதறுகிறார் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி. ஆக்சிஜன் கிடைப்பதற்கு தடையாக இருந்தால் அவரை தூக்கில் போடவும் தயங்க மாட்டோம் என ஆவேசப்படுகிறார் இன்னொரு நீதிபதி. இன்னும் சில மணி நேரத்துக்குத் தான் ஆக்சிஜன் இருப்பு தாக்குப்பிடிக்கும் என்று கதறுகின்றன மருத்துவமனைகள். ஆக்சிஜன் கிடைக்கவில்லையென்றால் தில்லியே … இவ்வளவும் ஸ்டெர்லைட்டை திறக்கத்தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காறித் துப்பும் உண்மைகள்

தெருவில் திரியும் அல்லது வலியுடன் உயிர்பிடித்து மூச்சுவிடமுடியாமல் இருக்கும் அத்தனை நோயாளிகள் சார்பாகவும், நோயாளிகள் சாவதை அருகில் நின்று கையறு நிலையில் வேடிக்கைப்பார்க்கும் அவர்களது நண்பர்கள் & உறவினர்கள் சார்பாகவே கேட்கிறேன். என் கேள்விகள் மத்திய அரசை பார்த்து மட்டும் அல்ல. அவர்களை ஆதரிக்கும் மூடர்களைப் பார்த்தும் தான். 1. நுரையீரல் தொற்றை ஓரளவிற்குச் சரி செய்யும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை 4500 ரூபாய்க்கு விற்கும் தருவாயில் , ஒரு மருந்து கம்பெனி தானாய் முன்வந்து 1500 … காறித் துப்பும் உண்மைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் ஆசீவகர்கள்

‘ஆசீவகம்’ தமிழ்ப் பரப்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் தற்போது அதிகம் உச்சரிக்கும் சொல் இதுவாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஆசீவகம் குறித்த கவனம் கல்வியாளர்கள் இடையே பரவி வருகிறது. கிமு ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் நிலவில் இருந்தது இந்த வாழ்வியல் நெறி. அதன் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும், அறிவியல் பார்வையும் மெய்யாகவே ஈர்க்கும் படியாக இருகின்றன. ஆனாலும், ஆசீவகம் குறித்த தரவுகள் அதிகம் கிடிக்காததும், கிடைத்தவையும் கூட ஆசீவகத்துக்கு எதிராக … தமிழகத்தில் ஆசீவகர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த … மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்

பெரியாரின் பெருந்தொண்டர், பெரியாரிய மார்க்சிய அறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று புதுச்சேரியில் இதயம் இயங்க இயலாமல் போனதால் காலமானார்கள். அவரது சொந்த ஊரான இரும்புலியூரில் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். பெரியாரின் தொண்டராக தன்னை அறிவித்துக் கொண்ட ஆனைமுத்து அய்யா, பெரியாரின் மறைவுக்குப் பின் திக விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பெரியார் சம உரிமைக் கழகம் எனும் அமைப்பை 1975ல் தோற்று வித்தார். அதையே … பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைஞர் கடந்த தடங்கள்

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர், நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால், அது ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். காற்று, தண்ணீர், உணவு, உடை, உறைவிடம், மொழி, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, சாலைவசதி, மின்சாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழிற்சாலை, தொலைத் தொடர்பு. தண்ணீர் / Water 1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது … கலைஞர் கடந்த தடங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை

தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்

கோவை டவுண்ஹால் பகுதியில், பாஜக வானதியை ஆதரித்து பேச வருகிறார் யோகி என்பதை சாக்கிட்டு வானரக் கூட்டம் ஒரு வன்முறை வெறியாட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈருருளி (இருசக்கர வண்டி) ஊர்வலம் என்ற பெயரில் அந்த விலங்காண்டிகள், கடைகளை மூடச் சொல்லி அடாவடி செய்ததுடன், கேள்வி எழுப்பியவர்களை தாக்கி, கல்லெறிந்து அச்சமூட்டி இருக்கிறது. பள்ளிவாசல்கள் முன்னின்று வெறிக்கூச்சல் இட்டிருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து பேயாட்டம் ஆடியிருக்கிறது. இவை எதுவும் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே வட மாநிலங்களில் … கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னிலை விளக்கம்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, கடந்த ஒரு மாதமாக செங்கொடி தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் இடப்படவில்லை. அதற்கான காரணமோ விளக்கமோ எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இது குறித்து தோழர்கள் சிலர், “என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியதால், அதுகுறித்த சிறு தன்னிலை விளக்கமே இந்தப் பதிவு. முன்னர் சிலமுறை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் எனும் அளவுக்கு பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு வலைப்பதிவில் இயல்பாக வரும் இடைவெளி என்பதாக கடந்து விடும். மாதக்கணக்கிலும் … தன்னிலை விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.