பெரியாரின் பெருந்தொண்டர், பெரியாரிய மார்க்சிய அறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று புதுச்சேரியில் இதயம் இயங்க இயலாமல் போனதால் காலமானார்கள். அவரது சொந்த ஊரான இரும்புலியூரில் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
பெரியாரின் தொண்டராக தன்னை அறிவித்துக் கொண்ட ஆனைமுத்து அய்யா, பெரியாரின் மறைவுக்குப் பின் திக விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பெரியார் சம உரிமைக் கழகம் எனும் அமைப்பை 1975ல் தோற்று வித்தார். அதையே 1988ல் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி என பெயர் மாற்றி நடத்தி வந்தார்.
பெரியார் குறித்தும், பெரியாரிய சிந்தனைகள் குறித்தும், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இந்திய அரசியல் சட்டத்தின் மக்கள் எதிரான தன்மையையும், தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கையையும் அம்பலப்படுத்தி “அரசியல் சட்டத்தின் மோசடிகள்” என்ற அருமையான நூலையும் படைத்தவர்.
வட இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் திருக்குறள் மாநாடு, பெரியாரிய சிந்தனைகள் மாநாடு, இடஒதுக்கீடு மாநாடு என பல மாநாடுகளை நடத்தியுள்ளார். குறிப்பாக, வட இந்தியா முழுவதும் பயணம் செய்து பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டுக்காக பெரும்பணி ஆற்றியுள்ளார்.
மண்டல் கமிசன் அறிக்கை வெளிவர பெரும் தூண்டு கோலாக இருந்தார். இவரின் அறிக்கையை மையமாகக் கொண்டே மண்டல் கமிசன் அறிக்கை வெளிவந்தது.
வீர வணக்கம்.