பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து…

நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்

கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில்,…

இன்று கருப்பு நாள்

வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும்…

இவர்களை எதால் அடிப்பது?

இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது…

மஞ்சள் பிசாசு

தங்கம் என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதும், உலகின் எந்தப் பகுதி மக்களுக்கும் வேறு எந்த விளக்கமும் தேவையில்லாமல் அதன் முதன்மை புரிந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்ற அடிப்படையில் மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரத்தின் ஒரு கருவி எனும் அடிப்படையிலும் தங்கம் பற்றிய முழுமையான விளக்கம் மக்களுக்கு தேவை. அந்த வகையில் சோவியத் பொருளாதார அறிஞர் தோழர் அ.வி. அனிக்கின் அவர்களால் எழுதப்பட்டு நா. தர்மராஜன் அவர்களால் தமிழில் பெயர்க்கப்பட்ட “மஞ்சள் பிசாசு – தங்கத்தின் கதை”…

ஸ்டெர்லைட்: என்ன செய்யலாம்?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்குதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்களை வைத்து கலவரத்தை தூண்டி சதித்தனமாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம்பட்ட சிலருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலைகளை ஒதுக்கி உள்ளீர்கள். கைது செய்யப்பட்டு காவல் துறையால் கொடும் தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவித்திருக்கிறீர்கள். இதை…

1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2 முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும். போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே…

ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு. கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று…

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு…

பொதுக் கல்வி – லெனின்

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்கு எதிராக கல்வியை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு, அதன் வரைவை வெளியிட்டபோதே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒரு கொடுந்தொற்று காலத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவை இந்தியா முழுவதிலுமிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்ப்புகள் என எதையும் கணக்கில் கொள்ளாமல் சட்டமாக்கியது. இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் பிணக் குவியல்களுக்கு நடுவே அந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்…