தங்கம் என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதும், உலகின் எந்தப் பகுதி மக்களுக்கும் வேறு எந்த விளக்கமும் தேவையில்லாமல் அதன் முதன்மை புரிந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்ற அடிப்படையில் மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரத்தின் ஒரு கருவி எனும் அடிப்படையிலும் தங்கம் பற்றிய முழுமையான விளக்கம் மக்களுக்கு தேவை.
அந்த வகையில் சோவியத் பொருளாதார அறிஞர் தோழர் அ.வி. அனிக்கின் அவர்களால் எழுதப்பட்டு நா. தர்மராஜன் அவர்களால் தமிழில் பெயர்க்கப்பட்ட “மஞ்சள் பிசாசு – தங்கத்தின் கதை” எனும் இந்நூல் அத்தகைய முழுமையான விளக்கத்தை உங்களுக்கு வழங்கும்.
நூலிலிருந்து,
உலகத்தில் தங்க விலையேற்றத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியமான விசயங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. பொருளாதாரத் துரையிலிருந்து ஒரு உதாரணத்தைக் கூறுவதென்றல், எண்ணெய் விலைகளின் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி இதைக் காட்டிலும் அதிக முக்கியமானது, மிக அதிகமான விளைவை ஏற்படுத்தக் கூடியது.
தொழில் துறையில் தங்கம் மிக அடக்கமான, குறைவான அளவில் தான் உபயோகிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு ஒருவர் சிந்திக்கக் கூடியதைக் காட்டிலும், அதன் பொருளாதார (மற்றும் அரசியல்) முக்கியத்துவம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனோடு பௌதீக மற்றும் இராசயன ரீதியில் சம்பத்தப்பட்டிருக்கும் உலோகங்களான வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டிலும் அது மிகவும் அதிகமாக இருக்கிறது
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.