கல்விக்கான கூட்டமா? கட்டளையா?

இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான கூட்டம் நடக்கவிருக்கிறது. இதற்கு, மாநிலங்களின் கல்வித்துறைச் செயலர்கள் அனைவரும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் மாநிலங்களின் கல்வித்துறை செயலர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்? மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் அல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்றொரு வாதத்தை தமிழ்நாடு முன்வைத்திருக்கிறது. இது சரியான வாதம் தான். செயலர்கள் போதுமென்றால் இந்தக் கூட்டத்தை ஒன்றிய கல்வித்துறை செயலர் தலைமையில் நடத்தி இருக்க … கல்விக்கான கூட்டமா? கட்டளையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் … இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண வியாபாரி

"உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்." ******** இந்தியா கோவிட்டின் மரணக் கிணறாக மாறி வருகிறது. முற்றிலும் செயலற்ற ஒரு பிரதமரும் அவரைச் சுற்றி இருக்கும் அமைச்சர்களும் எந்தக் குற்றவுணர்வும் இன்றி அடுத்து இந்தியாவின் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை அம்பானிக்கும் அதானிக்கும் விற்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தெற்கு பரவாயில்லை. … மரண வியாபாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

35 ஆயிரம் புத்தகங்கள்

அண்மையில் சென்னை சென்றிருந்த போது பழங்காசு. சீனிவாசன் ஐயாவை சந்தித்திருந்தேன். அதுவரை, அவரின் சேகரிப்பில் அரிய நூல்கள் பல இருக்கின்றன என்பது தெரியும் என்றாலும், நேரில் பார்த்த போது பெருவியப்பாக இருந்தது. எத்தனையெத்தனை தலைப்புகளில், எவ்வளவு நூல்கள் .. .. ஒரு தனி மனிதரால் சாத்தியமா? என்பதைவிட அவரின் மன ஓட்டம், அதற்கு முழுமையாய் ஒத்துழைக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என யாராலும் வியக்காமல், நம்மிடம் இது போன்ற உத்வேகம் இல்லையே எனும் ஏக்கம் எழாமல் தவிர்க்கவே … 35 ஆயிரம் புத்தகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உங்கள் மகனிடம் சொல்லுங்கள்

நூல்களில் எனக்கு பிடிக்காத வகை என்றால் அது சுய முன்னேற்ற நூல்கள் எனும் தலைப்பில் வருபவை தாம். ஏனென்றால் அந்த வகை நூல்களைக் கையில் எடுக்கும் போதே நாம் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறோம் எனும் உணர்வைத் தந்து விடுகிறது. மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சூழலின் தாக்கத்தினாலேயே உருவாகிறான் எனும் பொருள்முதவாத பேருண்மைக்கு எதிராக செல்வது தான் சுய முன்னேற்ற நூல்கள். இந்த நூலும் அந்த எல்லையைத் தொட்டு நிற்கும் நூல் தான். என்றாலும், ஒரு … உங்கள் மகனிடம் சொல்லுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 28 நமக்குக் கிடைத்திருக்கும் செய்திகளில் மிகப் பெரும்பான்மை கோல் பற்றியவையே.  அங்கே கொலோன்களுக்குப் பக்கத்திலேயே சுதந்திரமுள்ள சிறு விவசாயிகளும் இன்னும் இருந்தார்கள். அதிகாரிகள், நீதிபதிகள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியவர்களின் கொடுமையான கட்டாய வசூல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அதிகாரத்திலிருந்த நபர்களின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் பெரும்பாலும் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் தனித்தனியாக மட்டுமல்ல, முழு கூட்டுச் சமூகங்களாக இப்படி செய்தார்கள். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் இந்தச் செயலைத் தடை … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?

தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள் … தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிசத்தின் இந்திய முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும். போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் … பாசிசத்தின் இந்திய முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்

கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் .. கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் … கொரோனாவில் மே நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.