பொருளாதாரக் குழுவின் வரலாறு பல்லிளிக்கிறது

திமுக தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் சட்டமன்றக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்தக் கூட்டத்தின் ஆளுனர் உரையில் தமிழ்நாட்டு நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு ஆலோசனை கூறுவதற்காக ஐந்து பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்திக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மாற்றுக் கண்ணோட்டத்திலும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திமுக பொறுப்பேற்ற பிறகு அது வெளியிடும் அறிவிப்புகளியெல்லாம் சிக்சர்களாக கருதி புழகமடையும் கூட்டம் ஒன்று இருக்கிறது. … பொருளாதாரக் குழுவின் வரலாறு பல்லிளிக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதிலிருந்து படிப்பினை பெறலாமா?

எது சைத்தானின் படை? பகுதி 2 ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ எனும் இஸ்லாமிய பரப்புரை வலையொளி கம்யூனிஸத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. மட்டுமல்லாமல், அதில் இஸ்லாம் தான் உயர்ந்தது என கூறப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். அதற்கு மறுப்பாக கடந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பதிவான இதில், “உழைக்காதவர்கள் உண்ணத் தகுதியில்லாதவர்கள் என்றால், உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?” என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் குறித்து விரிவாக பார்க்கலாம். மேலோட்டமாக பார்த்தால் … இதிலிருந்து படிப்பினை பெறலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறியப்படாத தமிழ் மொழி

மொழி சார்ந்த மிகையுவப்புகள் (மிகை + உவப்பு = மிகையுவப்பு : பெருமிதம்) உலகெங்கும் உண்டு. ஆனாலும், தமிழர்களின் மிகையுவப்புக்கு அருகில் கூட ஏனையவை ஒரு போதும் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதில் தவறும் இல்லை. ஏனென்றால், புதிது புதிதான செய்திகள் அதனுள்ளிருந்து கிளைத்து வந்து கொண்டே இருக்கிறது. திராவிடம் எனும் சொல் குறித்த விவாதங்கல் இங்கு அதிகம். திராவிடம் எனும் சொல்லை தமிழுக்கு எதிராக நிறுத்தி ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிடம் … அறியப்படாத தமிழ் மொழி-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து … எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது சைத்தானின் படை? 1

கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா … எது சைத்தானின் படை? 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது.  பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ஒரே நூலில் உலகப் புகழ் பெற முடியுமா? என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கு விடையாக ஜான் பெர்கின்ஸ்சை சொல்லலாம். ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் அவரின் முதல் நூல் உலகம் முழுவதும் அரசியல் நூல்களை வாசிக்கும் அனைவரையும் சென்றடைந்தது. அந்த நூலின் தொடர்ச்சியாக அவர் எழுதியது தான், அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு எனும் நூல். ‘பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள் மற்றும் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்’ என்று கொடுக்கப்பட்டிருக்கும் துணைத் … அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு

நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் பாஜக எனும் விலங்கு தற்போது லட்சத் தீவை நோக்கி தன் பார்வையைத் திருப்பி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. கேரள நடிகர்கள் தொடங்கி, சற்றேறக் குறைய பாஜக மற்றும் அதனைச் சார்ந்த கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின, வெளிப்படுத்தி வருகின்றன. அந்த விலங்கு தொடர்ந்து இப்படி வேட்டையாடிக் கொண்டிருப்பதை எப்படி … லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 29 மாபெரும் தனித்தனி உதாரணங்களான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய உதாரணங்களிலே குல அமைப்பு கலைந்து மறைந்து போனதை அடையாளங் கண்டு கூறினோம். முடிவாக, அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஏற்கனவே சமுதாயத்தின் குல அமைப்பை பலவீனப்படுத்தி வந்த, நாகரீக நிலை தோன்றியதும் முழுமையாக ஒழித்தும் விட்ட பொதுவான பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்போம். இதற்கு மார்கன் எழுதிய நூல் தேவைப்படுகின்ற அளவுக்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலும் தேவைப்படும். குலம் என்பது … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.