ஊரடங்கு எனும் நிதித் தொற்று

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில்…