பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
தனித்தனி நிகழ்வுகளுக்கு கொடுக்கும் முதன்மைத் தன்மையின் அதே அளவில் ஆணாதிக்கம் குறித்த புரிதலுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறான புரிதலுக்கு எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இந்த நூல் ஓரளவுக்கு உதவும்.
நூலின் முன்னுரையிலிருந்து,
பெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறில்லை. காலம் காலமாக மனித குலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும் வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப் பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிருத்தி சொல்லப்பட்டிருக்கவே இல்லை.
.. .. .. இந்நாள், இருபத் தொன்றாம் நூற்றாண்டை நோக்கி நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும், உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள். இது உண்மை. ஏன் இப்படி?
ஆண், பெண் இருவருமே இவ்வுலகுக்கு இன்றியமையாதவர்கள். ஒருவரின்றி மற்றவர் தனித்து வாழ முடியாது. அவ்வாறிருக்கையில் பெண்ணுக்கு மனிதப் பிறவிக்குரிய மதிப்புகளே ஏன் அளிக்கப்படவில்லை? மண் பொன் போல பெண்ணும் அவனுக்கு ஒரு சாதனம். உழைப்புச் சாதனம், வாரிசு தரும் சாதனம். எட்டும் அறிவினில் ஆற்றலில் ஆணுக்கிங்கே இளைதவர்களில்லை என்று நிரூபணமான பின்னரும் அவர் வெறும் சாதனமாகவே கழைக்கப்படுவதற்கும், அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே? இது ஒரு தருமமாகவே பாலிக்கப்பட்ட கதைகள் புராணங்கள் காவியங்கள் எல்லாம், எல்லாம் .. .. .. ஏன்?
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.
வணக்கம் தோழர்
நீங்கள் குறிப்பிட்டபடி இக்கட்டுரையுடன் ராஜம் கிருஷ்ணன் மின்னூல் இல்லை. பெரியார் அம்பேத்கர் குறித்து உள்ளது.
சனி, 5 ஜூன், 2021, முற்பகல் 8:24 அன்று, செங்கொடி எழுதியது:
> செங்கொடி posted: ” பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் > கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் > பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே > இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் ” >
இல்லை தோழர். இந்திய சமுதாய வரலாற்றில் பெண்கள் எனும் நூல் தான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் பெரியார் அம்பேத்கர் குறித்த நூல் கடந்த வாரம் வெளியிட்ட நூல்.