ஒரே நூலில் உலகப் புகழ் பெற முடியுமா? என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கு விடையாக ஜான் பெர்கின்ஸ்சை சொல்லலாம். ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் அவரின் முதல் நூல் உலகம் முழுவதும் அரசியல் நூல்களை வாசிக்கும் அனைவரையும் சென்றடைந்தது.
அந்த நூலின் தொடர்ச்சியாக அவர் எழுதியது தான், அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு எனும் நூல். ‘பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள் மற்றும் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்’ என்று கொடுக்கப்பட்டிருக்கும் துணைத் தலைப்பு நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை கூறுகிறது.
நூலின் முன்னுரையிலிருந்து,
உலகெங்கும் நிறுவன அதிகார வர்க்கத்தின் (Corporatocracy) ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், அவர்களின் சிலரின் பெயர்கள் மட்டுமே செய்திகளில் வெளிவருகின்றன. பலர் ஊர்வலங்களில் பங்கேற்கின்றனர், பதாகைகளைத் தொங்க விடுகின்றனர், வெளிப்படையாக பேசுகின்றனர், மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர், ஆக்கபூர்வ மாறுதலுக்காக வாக்களிக்கின்றனர், தன்னுணர்வுடன் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். இன்று எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றின் உண்மையான நாயகர்கள் அவர்கள் தான்.
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.