மொழி சார்ந்த மிகையுவப்புகள் (மிகை + உவப்பு = மிகையுவப்பு : பெருமிதம்) உலகெங்கும் உண்டு. ஆனாலும், தமிழர்களின் மிகையுவப்புக்கு அருகில் கூட ஏனையவை ஒரு போதும் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதில் தவறும் இல்லை. ஏனென்றால், புதிது புதிதான செய்திகள் அதனுள்ளிருந்து கிளைத்து வந்து கொண்டே இருக்கிறது.
திராவிடம் எனும் சொல் குறித்த விவாதங்கல் இங்கு அதிகம். திராவிடம் எனும் சொல்லை தமிழுக்கு எதிராக நிறுத்தி ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிடம் எனும் சொல் குறித்து இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் செய்திகள் பலருக்கும் புதிதாகவே இருக்கும் என எண்ணுகிறேன். இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
நூலிலிருந்து,
தொல்காப்பியர் முதல் தொ. பரமசிவன் வரை .. .. ..
ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை .. .. ..
அறிஞர்கள் அளவிலேயே தங்கி விட்ட தமிழ் உண்மைகளை,
உங்கள் வீதிக்கு எடுத்து வருவதே இந்நூலின் நோக்கம்,
உங்கள் வீட்டுக்கு எடுத்து வருவதே இந்நூலின் நோக்கம்.
கால் வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர்வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க்குளத்தை உங்களோடு சேர்ந்து தூர்வாரும் புத்தகமே இது. வாங்க, மகிழ்ச்சியா ஒரு கை கொடுங்க.
கே.ஆர்.எஸ் என்று பதிவுலகில், சமூக ஊடக வெளியில் பரவலாக அறியப்படும் முனைவர் கண்ணபிரான் ரவி சங்கள் எழுதி தடாகம் வெளியீட்டில் வந்த நூல் இது.
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.