அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: செப்ரெம்பர் 2021
இந்தியாவில் அடிமைகள்
மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில் இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற … இந்தியாவில் அடிமைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திகைத்து நிற்கிறோம்
இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள் … திகைத்து நிற்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்
தமிழ்நாட்டு நிலைமை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஒரு விதமான ஆறுதலைத் தந்துள்ளது என்று கூறலாம். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. … இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.