திகைத்து நிற்கிறோம்

இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள்…