இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன.

 1. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதே, அதை எப்படி எதிர் கொள்வது? எனும் தயக்கம்.
 2. பதிப்பகங்கள் ஏதேனும் வெளியிட முன்வருமா? அல்லது சொந்தமாக வெளியிட வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? அதை எப்படி சரி செய்வது? என்பன போன்ற கேள்விகள்.

மறுபக்கம் தோழர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எப்போது அதை நூலாக கொண்டு வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

சில பதிப்பகங்களை கேட்ட போது, அவர்கள் விதித்த நிபந்தனைகள் மலைப்பாக இருந்தன. குறைந்தது ஆயிரம் படிகள் அச்சிட வேண்டும், மொத்த செலவில் பாதியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், முன்னூறு படிகளை விற்பதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பன போன்ற வற்புறுத்தல்கள், இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்து விடலாமே எனும் எண்ணம் தான் ஏற்பட்டது.

பின்னர், தோழர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, – தற்போது குறைந்த அளவிலேயே படிகள் எடுத்துக் கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது என்று கூறி – எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

செங்கொடி வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் திருத்தி கூடுதல் விவரங்கள் சேர்த்து, ஒரு சில அத்தியாயங்கள் கூடுதலாக இணைத்து, இடையில் நிறுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து முடித்து, இறுதி செய்து தற்போது ஐநூற்றுக்கும் அதிகமான பக்கங்களுடன் உங்கள் கைகளில் தவழ ஆயத்தமாக இருக்கிறது.

நூலின் விலை 400 ரூபாயாகவும், முன்பதிவு செய்வோருக்கு 10% கழிவு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உடனடியாக முன்பதிவு செய்வோருக்கு எதிர்வரும் சீனப் புரட்சி நாளான அக்டோபர் முதல் நாளில் கைகளில் கிடைக்கும். பெரியாரின் பிறந்த நாளில் அறிவிப்பு வெளியாகி, சீனப் புரட்சி நாளில் கைகளில் கிடைக்கும் என்பது நூலின் உள்ளடக்கத்துக்கு கவித்துவமான அழகைக் கொடுப்பதாக கருதுகிறேன்.

நூலைப் பெறுவதற்கு:

பகிரி (வாட்ஸ் ஆப்) : 8903271250

மின்னஞ்சல் : senkodi002@gmail.com

வாய்ப்புள்ளவர்கள் மொத்தமாக வாங்கி தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யுமாறு / விளம்புமாறு கேட்டுக் கொள்கிறேன். மட்டுமல்லாது முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளிட்ட தங்களின் சமூக வலைத்தள கணக்குகளில் இந்நூல் குறித்து விளம்பரம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

தோழமையுடன்,

செங்கொடி.

நூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்

 1. நுழைவுவாயில்                                      
 2. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளியஅறிமுகம்             
 3. அல்லாவின் ஆற்றலிலுள்ளஇடர்பாடுகள்                     
 4. விதிக் கொள்கைக்கும் அல்லாவுக்குமான உறவுஎன்ன?            
 5. வாழ்வும் சொர்க்கமும்நரகமும்                          
 6. குரானின் சவாலுக்குபதில்                              
 7. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டதுதானா?                 
 8. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்                 
 9. ஹதீஸ்களும் அதன்பிரச்சனைகளும்                           
 10. குரான் கூறுவதுஅறிவியலாகுமா?                          
 11. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்தகுரானும்                 
 12. புமி உருண்டை என யார் சொன்னது அல்லாவாமனிதனா?          
 13. கடல்கள் பற்றிய அல்லாவின்புனைகதைகள்                  
 14. குரானின் மலையியல்மயக்கங்கள்                           
 15. விண்வெளி குறித்த அல்லாவின்பண்வெளிகள்                  
 16. கோள்களும் அதன் விசையும் அல்லாவின்தேற்றங்கள்             
 17. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின்பாடுகள்                  
 18. விந்து குறித்த குரானின்விந்தைகள்                          
 19. கருவறை குறைத்த அல்லாவின்கதையாடல்கள்                  
 20. பிர் அவ்னின் உடல் எனும்கட்டுக்கதை                      
 21. நூஹின் கப்பல் நிறைய புராணப்புழுகுகள்                      
 22. சூரத்துல் கஹ்புவுக்கும் புத்தருக்கும் என்னதொடர்பு?               
 23. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள்உண்மையா?         
 24. குரான் குறிப்பிடும் .. .. .. இறைப்பார்வையா?                  
 25. குரானின் காலப்பிழைகள்                              
 26. காலவெளியில் சிக்கிக் கொண்டஅல்லா                      
 27. ஆதி மனிதன் மொழியறிந்தவனா அல்லாவின் பதில்என்ன?          
 28. நிலவை உடைத்து ஒட்டியஅல்லா                          
 29. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப்பிழைகள்                  
 30. தடயமில்லாத அல்லாவின்அத்தாட்சிகள்                      
 31. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பதுசாத்தியமா?         
 32. மீனின் வயிற்றில் மனிதனை பாதுகாத்தஅல்லா                 
 33. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின்மிஹ்ராஜ்          
 34. ஜம் ஜம் நீரூற்றும்குரானும்                            
 35. மனிதன் அல்லாவின் அருளா? பரணாமத்தின் பரிசா?1               
 36. மனிதன் அல்லாவின் அருளா? பரணாமத்தின் பரிசா?2              
 37. மனிதன் அல்லாவின் அருளா? பரணாமத்தின் பரிசா?3              
 38. மனிதன் அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?4              
 39. அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1.புர்கா                 
 40. அல்லாவின் பார்வையில் பெண்கள்: 2.சொத்துரிமை              
 41. அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3.விவாகரத்து              
 42. அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4.மணக் கொடை               
 43. அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5.ஆணாதிக்கம்              
 44. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்1                  
 45. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்2                 
 46. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்3                 
 47. அல்லாவின் சட்டங்கள் .. .. .. 1. மணச்சட்டம்                  
 48. அல்லாவின் சட்டங்கள் .. .. .. 2. குற்றவியல்சட்டம்              
 49. அல்லாவின் சட்டங்கள் .. .. .. 3. சொத்துரிமைசட்டம்            
 50. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும்மாயை             
 51. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள்1                 
 52. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள்2                  
 53. முகம்மதின் மக்கா வாழ்வும், அவரின் புலப்பெயர்வும்           
 54. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா?ஆன்மீகமா?              
 55. முகம்மது கடிதங்கள் .. .. .. மதத்தையா?ஆட்சியையா?              
 56. முகம்மது நல்லவரா?கெட்டவரா?                         
 57. தன்னுடன் தானே முரண்பட்டமுகம்மது                     
 58. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்துகொண்டார்?         
 59. முகம்மதும்ஆய்ஷாவும்                                  
 60. முகம்மது தேன் குடித்தகதை                             
 61. முகம்மதின் மரணத்திற்கு பிறகு நடந்தகுழப்பங்கள்             
 62. முகம்மதின்அல்லா                                 
 63. இஸ்லாத்தை முகம்மது தான்உருவாக்கினாரா?                  
 64. முகம்மதியம் தோன்றியதற்கான அக புறகாரணிகள்             
 65. ஆண்டான் அடிமைக் .. .. .. தீர்வை தரமுடியுமா?                
 66. சமகாலப் .. .. .. தீர்வைக்கொண்டிருக்கிறதா?                  
 67. வாருங்கள் இஸ்லாமியர்கள் .. .. .. அழைத்துக்கொள்வோரே!         
 68. வாருங்கள் இஸ்லாமியர்கள் .. .. .. கொள்வோரே!2               
 69. வாருங்கள் இஸ்லாமியர்கள் .. .. .. கொள்வோரே!3              
 70. இடிபாடுகளின் பின்னால்.. .. .. 

One thought on “இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

 1. வாழ்த்துக்கள் தோழர். சிறப்பான பணி. 2008 இல் இருந்து இஸ்லாமிய மத விமர்சனங்களை வாசித்து வருகிறேன். புத்தகமாக கொண்டு வருவது சிறப்பு.

  சனி, 18 செப்., 2021, முற்பகல் 7:37 அன்று, செங்கொடி எழுதியது:

  > செங்கொடி posted: ” அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் > கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். > மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் > அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட” >

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s