ராம்குமார் கொலை வழக்கு

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் காவி … ராம்குமார் கொலை வழக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண் என்றால் அவ்வளவு இழிவா?

அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை

(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்) பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே … இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களின் அந்தரங்கம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.