பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா?
என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் சென்று கேள்விகளை எழுப்ப வேண்டியது தானே. ஆம் நான் இந்த இதழிலிருந்து தான் வர்ந்திருக்கிறேன், என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று கிடுக்கிப்பிடி போட்டு இவர்களை சந்தி சிரிக்க வைக்க முடியாதா? செய்தியாளர்களுக்கான சங்கங்களில் இணைந்து குறைந்த அளவிலான ஜனநாயகத்தையாவது காப்பாற்ற முயலக் கூடாதா?
செய்யவேண்டியதை செய்ய வேண்டிய இடத்தில் செய்யாமல் பின்னர் கட்டுரைகள் தீட்டிக் கொண்டிருப்பதால் என்ன விளைவு ஏற்பட்டு விடப் போகிறது?
பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்.