கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு 150 என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, அதற்காக அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது, போராடுவது என்பது ஒரு பக்கம். மக்களின் இயல்பான பொது சிந்தனை முறையும், சமூகம், ஆணாதிக்க சமூகமாக இருப்பதை ஏற்றுக் கொண்டிருப்பதும் சிக்கலாக தெரியவே இல்லை என்பது இங்கு முதன்மையான விதயமாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கும் நாம் குறிப்பிடத்தக்க இடம் வழங்க வேண்டியதிருக்கிறது.
பெண்களை நாம் எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் உள்வசமாய் சிந்தித்துப் பார்த்திருகிறோமா? அப்படி சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த நூல் உதவும் என்று கருதுகிறேன்.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்