
அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் தான் சீர்குலைக்கப்படுகின்றன.
தனியார் தான் சிறந்த சேவை அளிக்க முடியும் என்று நம்பும் பரப்பும் தனியார்மய தாசர்கள் எவரும் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூற முன்வர மாட்டார்கள். அதேநேரம் மக்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும். அரசு என்பது என்ன? நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கங்கள் எதை குறிவைத்து இயங்குகின்றன? என்பதை நோக்கி அந்த சிந்தனை விரிய வேண்டும்.
டாட்ஸ் மீடியாவுக்கு BSNL தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் செல்லப்பா அவர்கள் வழங்கிய செவ்வி இது.
பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்