
செய்தி:
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள்,மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான பிறகு தற்போதுதான் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வைரஸ் அச்சமும் ஒரு காரணம். முதலில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
செய்தி: மின்னம்பலம்
செய்தியின் வழியே:
இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டனர். இந்திய மக்கட்தொகையில் கணக்கில் இது 80 விழுக்காட்டை நெருங்குகிறது. 80 விழுக்காடு மக்கள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பை பெற்றுவிட்டனர் என்றால் அதன் பொருள் கொரோனா பரவாமல் முடக்கப்பட்டு விட்டது என்பது தான். தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களில் அதிகமானோர் இன்னும் வாய்ப்புகள் கிடைக்காததால் போடாமல் இருப்பவர்களே. தொடரும் காலங்களில் இவர்களும் போட்டுக் கொண்டால் மொத்தம் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாகிவிடும். அப்படியென்றால் .. .. ..
- கொரோனாவின் புதிய வேரியண்டான ஒமிக்ரான் குறித்து ஏன் பீதி கிளப்பப்படுகிறது?
- தடுப்பூசி என்பது கட்டாயமா? ஆம் என்றால் ஏன் அதை முறைப்படி அறிவிக்கவில்லை. இல்லை என்றால் ஏன் மறைமுகமாக கட்டாயப்படுத்தப் படுகிறது?
- இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா வருகிறதே, தடுப்பூசியை மறைமுகமாக கட்டாயப்படுத்தும் அரசு இதற்கு கூறும் பதில் என்ன?
- கொரோனா தடுப்பூசி என்பதன் மூலம் தோலுக்கடியில் நிரந்தரமாக வைக்கப்படும் அடையாள குறியீடு என்று செய்தி அதிகாரபூர்வமாகவே தடுப்பூசி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டதே, இதற்கு அரசின் பதில் என்ன?
- உலகளாவிய அளவில் எந்த ஒரு தடுப்பூசியும், அதன் விளைவுகளைக் கூறி அனுமதி பெற்ற பிறகே போடப்பட வேண்டும் என்று நெறிமுறை இருக்கும் போது, இந்தியாவில் அது குறித்த விழிப்புணர்வோ, அனுமதியோ பெறப்படவில்லையே ஏன்?
- எந்தவொரு தடுப்பூசியும் கட்டாயமில்லை என்பது உலக அளவில் ஏற்றுக் கொண்டிருக்கும் போது இந்தியா அதை மறுக்கிறதா? இல்லையென்றால் ஆட்யர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இப்படி சுற்றறிக்கை வெளியிடுவதற்கும், சீல் வைக்கப்படும் என்று மிரட்டி புதிய வடிவத்தில் ஒரு தீண்டாமையை உருவாக்குவதற்கும் எப்படி அதிகாரம் வந்தது?
- தடுப்பூசி போட விருப்பமில்லை என்றால் ஆயிரம் கேள்வி கேட்டு கொரோனா வந்தால், “அது என் சொந்தப் பொறுப்பு” என்று எழுதிக் கேட்கும் அதிகாரிகள் (இது என் சொந்த அனுபவம்) தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பிறகு ஏதும் நேர்ந்தால் அதற்கு அரசோ, அதிகாரிகளோ பொறுப்பேற்றுக் கொள்வார்களா?
அதாகப்பட்டது, “அரசாங்க கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லையும் உடைக்கும்” அம்புட்டுதேன்.