ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் – அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் – இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான்.
எழுத்தாளர் கொற்றவை முதன்முதலில் இது குறித்து பேசிய அன்றிலிருந்து இன்று வரை பிரான்ஸ் தமிழச்சி என்பவர் தான் இதை தொடர்ச்சியாக முன்னெடுத்து போராடி வருகிறார். பெரியாரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி நடந்த இந்த பாலியல் கொடூரத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் இருக்கும் பெரியாரிய, முற்போக்கு, இடதுசாரிய இயக்கங்கள் எதுவும் குரல் கொடுக்கவோ போராடவோ முன்வரவில்லை என்பது எவ்வளவு வேதனையானது. மட்டுமல்லாமல் பெரியாரிய இயக்கங்கள் சில லூலூ குழுவின் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகளை காப்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னவென்று வகைப்படுத்துவது?
இதோ தோழர் பிரான்ஸ் தமிழச்சியும், தோழர் சாரதாவும் லூலூ பாலியல் கொடுமைகள் குறித்து சுருக்கமாக விவரிக்கிறார்கள்.
பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்