இந்த சமூகம் மிக நீண்ட காலமாக ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களும் ஆணாதிக்கத்திலேயே வேர் பிடித்து நிற்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரில் சிலர் பெண்ணியம் எனும் சொல்லையே கேலிக்குறியதாக்க்கி, ஆணின் பலதார வேட்கைக்கு பெண்ணை ஆயத்தப்படுத்துவதே பெண்ணியத்தின் உள்ளீடு என விளம்பித் திரிகின்றனர்.
இந்தப் போக்கிலிருந்து சமூகத்தை திசை மாற்றுவது என்பது இடையறாதும், உறுதியோடும், சமரசமின்றியும் செய்யப்பட வேண்டியதாகும். அதற்கு இந்த நூல் கொஞ்சமேனும் உதவும் எனக் கருதுகிறேன்.
பதிப்புரையிலிருந்து..
.. .. இந்நூல் ‘சரிநிகர்’ பத்திரிக்கையில் அவ்வப்போது பெண்களின் பிரச்சனைகள் குறித்து பலரால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு. .. .. .. இது வரன்முறையான ஆய்வு நிலைப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இல்லாதிருப்பினும், பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வையும், சிந்தனைத் தேடல்களையும், தெளிவுகளையும் தர முற்படுகிறது என்பதில் ஐயமில்லை.
படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்