நான் இந்துவல்ல.. .. .. நீங்கள்?

பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியம். சமூகத்தில் பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதன் அரசியல் பிரிவு தான் பாஜக. ஆனால் அது தன்னை இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்கிறது.

இந்து என்பது யாரைக் குறிக்கும்? இஸ்லாம் என்பது போல், கிருஸ்துவம் என்பது போல் இந்து என்பது ஒரு மதமல்ல. யார் இந்து? எனும் கேள்விக்கு அரசியல் சாசனம் கத்தரிக்காய் வணிகம் செய்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். நடைமுறையில் யார் இந்து என்றால் அதன் பொருள், பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு, பார்ப்பானைத் தவிர ஏனைய அனைவரும் அவனுக்கு கீழானவர்களே என ஒப்புதல் கொடுப்பவர் அனைவருமே இந்துக்கள் தாம்.

பார்ப்பன பாசிசத்தின் அரசியல் அடிப்படையே இது தான். இந்து எனும் போர்வையில் அனைவரையும் இணைத்துக் கொண்டு அவர்களை பார்ப்பனிய நலன் பேச வைப்பது. சாதியப் படிநிலை இல்லாமல் இந்து மதம் இல்லை. பார்ப்பனிய நலன் பேசும் வரை அனைவரும் இந்து, உரிமைகளை பெறுவது எனும் போது அங்கு பார்ப்பனர்கள் மட்டும். நடைமுறையில் இருக்கும் அனைத்திலும் இதைக் காணலாம்.

பாஜக அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்து உட்பட அனைவரையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. கல்வி வேலைவாய்ப்புகளில் தொடங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி, மக்களுக்கு விலைவாசி உயர்வு என்பது வரை மக்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின், மக்களின், உரிமைகளை பறிப்பதற்கும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடிகள், சலுகைகள் கொடுப்பதற்கும் இந்து என்பதால் கிடைக்கும் வாக்கு வங்கியை பயன்படுத்துகிறது. பாஜகவை அதாவது பார்ப்பனியத்தை தேர்தல்கள் மூலம் மட்டும் தடுக்க முடியாது. எல்லா தளங்களிலும் அது முன்வைக்கும் இந்து என்பதை விளக்க வேண்டியிருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் இந்த சின்னஞ்சிறு நூல் நான் இந்துவல்ல என்று அறிவிக்கிறது. அதாவது, நான் பார்ப்பனியத்தின் அடிமை அல்ல என்று அறிவிக்கிறது. கேள்வியும் அது தான், தலைப்பும் அது தான்.

நான் பார்ப்பனியத்தின் அடிமை அல்ல .. .. நீங்கள்?

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (பி.டி.எஃப்) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s