இந்து எனும் சொல் பார்ப்பனிய அரசியலைக் குறிக்கும் சொல் என்று இடதுசாரிகள் தொடங்கி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி ஏமாற்றுவோர்கள் எல்லா மதங்களிலும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. இந்து என நம்பப்படுகின்ற பார்ப்பனிய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசமே இது தான். பிறவற்றில் மதத்தை சொல்லி கடவுளைச் சொல்லி ஏமாற்றுவார்கள். இங்கே மதமே மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப் பட்டிருக்கிறது. இதற்கு பலரும் பல விதங்களில் அன்றிலிருந்து இன்றுவரை ஆதாரங்களை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். செவிமடுப்போர் யார்?
இதோ, இங்கே சவுக்கு சங்கர் ஒரு ஊழலை விவரிக்கிறார். இது எண்ணிக்கை கணக்கில் இன்னுமொரு ஊழலல்ல. ஊழல் எனும் செயலும், பார்ப்பனிய மதத்தின் தத்துவங்களும் ஒன்றிணைவதை கவனியுங்கள். இது தான் முதன்மையானது. இது தான் பேசப்பட வேண்டியது.
தங்களை இந்துவாக நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இதற்கான பதிலை தங்களுக்குள்ளே தேடியாக வேண்டும்.
பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்