செய்தி:
.. .. .. போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தியின் பின்னே:
செய்திகள் நம்மை ஒரு பக்கச் சார்புள்ளவர்களாக மெல்ல மெல்ல மாற்றுகின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனிய சார்பு உடையவர்களாக நம்மை மெல்ல மெல்ல மாற்றுகின்றன. இந்த செய்தியை கவனியுங்கள். இரயில் பெட்டிகளை தீவைத்து எரித்து போராடியதால் ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சொல்கிறது. இதைப் படிக்கும் பலர், போராட்டம் செய்வதாக இருந்தால் உண்ணாவிரதம் இருக்கலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஏன் பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்க வேண் என்றுடும் என்று கேட்கிறார்கள்.
இதில் முதல் விதயம் என்னவென்றால், அவ்வாறு அமைதியான வழியில் போராட்டம் நடத்தினால், அதை எந்த ஊடகமாவது இந்த அளவுக்கு செய்தியாக்கி இருக்குமா? நெருப்புப் பாதி திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்று ஊடகங்கள் பதிவு செய்யுமா? இப்போது அமைதிப் போராட்டம் குறித்து பேசும் பலருக்கு அப்போது நெருப்புப் பாதை திட்டத்துக்கு இப்படி எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிந்திருக்குமா?
அடுத்து, ஆயிரம் கோடி இழப்பு என்பது உண்மையாகவே இருக்கட்டும். அரசின் திட்டங்களால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எவ்வளவு கோடி இழப்பு என்று இந்த ஊடகங்கள் செய்தி வெளியிடுமா? ஊழல்களை விட்டுவிடுவோம், எல்.ஐ.சி விற்பனையில் அரசுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் இழப்பு?, மூன்றாம், நான்காம், ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் அரசுக்கு எத்தனை லட்சம் கோடிகள் இழப்பு?. வாராக் கடன் தள்ளுபடி அறிவிப்புகளால் அரசுக்கு எத்தனை லட்சம் கோடிகள் இழப்பு? ஏர் இந்தியா விற்கப்பட்ட போது அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எத்தனை லட்சம் கோடி?. இதுவரை விற்கப்பட்ட அத்தனை பொதுத்துறை நிறுவனங்களும் அரசுக்கு நட்டத்தை தானே ஏற்படுத்தி இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தனியார் நிறுவனம் நாட்டில் தொழி தொடங்கும் போதும் ஒப்பந்தம் என்ற பெயரில் அவர்களின் லாபத்துக்காக அரசுக்கு பல இழப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவைகளை கணக்கெடுக்கவல்ல, இத்தனை லட்சம் கோடிகள் இழப்பு என்று அறிவிக்கக் கூட முடியாது. அதற்குத் தான் ரகசிய காப்பு உறுதி மொழி என்ற ஒன்றை எடுக்கிறார்கள்.
இவ்வாறான திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கணக்கெடுக்கவே முடியாது. அந்த ஆளவுக்கு அது மலைப்பாகவும் வீரியமாகவும், சோகமாகவும் இருக்கும்.
இந்த அரசின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளும் நட்டம் ஏற்படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நடந்த போராட்டத்தில் ஆய்இரம் கோடி இழப்பு என்று செய்தி வெளியிடுகிறார்களே. இவர்களை எதால் அடிக்க .. .. ?
அதாகப்பட்டது, “ஒரு கண்ண பொத்திக்கிட்டா ஒலகம் தெரியாதாடே ஒண்டக்குடியே” அம்புட்டுதேன்.