இந்தியா குறித்து விரிவாக பேசத் தெரிந்த பலரும் – கம்யூனிஸ்டுகளும் கூட – உலக அளவில் எத்தனை நாடுகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அது கேள்விக்குறியாகவே முடியும். உலக அறிவு பெற்றவர்களும் கூட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு என சில நாடுகளின் வரலாறுகளைத் தான் தெரிந்து வைத்திருப்பார்கள். அண்மைக் காலம் வரை நாடாக இருந்து பின்னர் பெயர் மாற்றம், உடைந்து போவது உள்ளிட்ட காரணங்களால் தற்போது இல்லாமல் போயிருக்கும் நாடுகள் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். அல்லது, பெயர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள் கூடுதல் விவரங்களோ, வரலாறோ தெரிந்திருக்காது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நூலிலுள்ள கடைசி கட்டுரையான சுவிட்சர்லாந்து கட்டுரையைக் குறிப்பிடலாம். சுவிட்சர்லாந்தை நாம் அனைவரும் செவியுற்றிருப்போம். ஆனால், அங்குள்ள அரசியல் .. .. ? வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசிக் கொண்டு மட்டுமே இருக்கும் இந்தியாவிலிருந்து அதைப் படிக்கும் போது ஒருவித ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.
நிர்மல் என்பவர் எழுதியிருக்கும் காணாமல் போன தேசங்கள் எனும் இந்த நூல் அவ்வாறான சில நாடுகளின் அறிமுகத்தை உங்களுக்கு வழங்கும். அறிமுகம் என்ற அளவில் இந்நூலிலிருந்து தொடங்கி விரிவடைவது நல்ல தொடக்கமாக இருக்கும்.
படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்