மாபெரும் விவாதம்

இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போராட்டங்கள், தத்துவ விவதங்கள் பெரிய அளவில் நடந்ததில்லை. நடக்கவே இல்லை என்பது இதன் பொருளல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கையையும் அவை கடந்து வந்த நீண்ட காலத்தையும் சிந்தையில் கொண்டால், நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்கள் மிகமிகக் குறைவே. நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்களில் கூட, சரிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் என்பதைக் கடந்து, குற்றம் சாட்டும் வாதச் சண்டைகளாக முடிந்தவையே அதிகம்.

அண்மையில் தமிழ்நாட்டில் SOC உடைதல்களுக்குப் பிறகு இந்த வாதச் சண்டைகள், தன்மையில் எல்லை கடந்து முற்றி இருப்பதாகவே  தோன்றுகிறது. நான் செவியுற்ற ஒரு நிகழ்வு சற்றே திடுக்கிடச் செய்தது. ஒரே பகுதியில் ஒரே வேலையை செய்த தற்போது இரண்டு பிரிவுகளிலுள்ள இரண்டு தோழர்கள் சந்திக்க நேர்ந்த போது, ஒரு தோழர் சொன்னாராம், “உங்களை ஒழிப்பது தாண்டா எங்களுடைய முதல் வேலை” என்று. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

உலக கம்யூனிச அரங்கில் இது போன்ற அகம் பிடித்த மோதல்களுக்கு இடமில்லை. சீன ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே சித்தாந்தப் போராட்டம் நடந்த போது அவை எல்லா வடிவிலும் சித்தாந்தப் போராட்டமாகவே இருந்தது. முதலில் நடந்த கமுக்க விவாதம் அனாலும், பின்னர் நடந்த வெளிப்படையான விவாதம் ஆனாலும் அவை பொதுவுடமை தத்துவத்தையே சுற்றிச் சுழன்றது. இங்குள்ளவர்களுக்கு அதை நினைவூட்டும் தேவை இருப்பதால், இந்த நூல் இன்றியமையாததாகிறது.

சீன, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே நடந்த சித்தாந்தப் போராட்டம் மாபெரும் விவாதம் எனும் நூலாக .. .. ..

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

மின்னூலாக (பி.டி.எஃப்) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s