மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

செய்தி:

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.

முகநூல் செய்தி

செய்தியின் பின்னே:

இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது.

கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து 300 அடிக்கு அப்பால் தான் மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு விதி இருக்கிறது. எங்காவது இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறதா? ஆனால், இறைச்சி கடைகளுக்கு இப்படி எந்த விதியும் கிடையாது. சரி இதே இடத்தில் காய்கறி கடை வைத்திருந்தால் என்ன நடக்கும்?

காந்தி பிறந்த நாள், மகாவீர் பிறந்த நாள் என்று எதாவது நாளைச் சொல்லிக் கொண்டு, அன்று காய்கறி கடைகள் திறக்கக் கூடாது என்று சொல்வார்களா? ஆனால், இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் அப்படியான நாட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் பொருள் என்ன?

இந்து முன்னணி எனும் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதாலோ, அவர்கள் இரண்டு முறை சாலை மறியல் போராட்டம் நடத்தி விட்டார்கள் என்பதாலோ முறைப்படி நடத்தப்படும் ஒரு கடைக்கு அனுமதி மறுக்க முடியுமா? முதன்முறை எதிர்ப்பு தெரிவிக்கும் போதே முறைப்படி நடக்கும் ஒரு கடை எந்த விதி மீறலையும் செய்யதிருக்கும் போது நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று ஏன் அறிவுறுத்தப்படவில்லை. இரண்டு முறை சாலை மறியல் நடத்த அனுமதி அளித்தது யார்? அனுமதி இல்லாமலேயே சாலை மறியல் நடத்தினார்கள் என்றால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இது அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சைவ உணவு உயர்ந்தது அசைவ உணவு இழிவானது. இஸ்லாமியர்களுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும் இடங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்வது. இதற்கு நிர்வாக அதிகாரிகள் தொடங்கி காவல்துறை அதிகாரிகள் வரை துணையாக இருப்பது என்று திட்டமிட்ட முறையிலும் நைச்சியமாகவும் நடந்து கொண்டே இருக்கிறது. விளைவு, சைவ உணவு மேலானது அசைவ உணவு இழிவானது எனும் கருத்து விதைக்கப்படுவதும், அசைவ உணவு உண்ணும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர் உள்ளிட்டோர் மீதான வெறுப்பும், இவர்கள் நம் மதத்துக்கு எதிரானவர்கள் என்பன போன்ற திரிப்பும் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. இது சமூகத்துக்கு மிகுந்த அச்சம் தரும் போக்கு என்பதை சமூக நீதியின் பெயரால் ஆட்சி நடத்துவோர்கள் உணர்ந்து கொள்ளவும், களையெடுக்கவும் வேண்டும்.

அதாகப்பட்டது, “வானத்துல பறந்தாலும் கீழ இருக்குற இரையிலயும் ஒரு கண்ணு இருக்கணும்லே” அம்புட்டுதேன்.

2 thoughts on “மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

  1. நீதிமன்றங்களுக்கு உள்ளேயே நீதிமன்ற ஒப்பந்ததாரர்கள் கூடவே ஒரு கோவிலையும் கட்டுகிறானுக!எந்த நீதிபதியும் இதைக் கேட்பதில்லை

  2. முழுநிலவு
    ஒன்று இரண்டல்ல அத்து மீறல்கள், உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் என எல்லாம் இங்கே பக்கச் சார்பாக எளிமைப்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s