ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?

கடந்த ஒரு வாரமாகவே கோவை கலவர பூமியாக திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக அலுவலகங்களிலும், பாஜகவினரின் வீடுகள் சிலவற்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில். வெடிகுண்டு வரலாற்றிலிருந்து பார்ப்பதாக இருந்தால் நட்டின் எந்த மூலையில் வெடிகுண்டு வெடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஐ தான் முதலில் ஐயப்பட வேண்டும். நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் கை இருக்கிறது என்பது மாலேகான் … பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு

இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் … வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புண்பட்ட / புண்படாத இந்துக்கள்

கடந்த 15.9.2022 வியாழனன்று சங்கரன் கோவில் அருகே சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த தீண்டாமைக் குற்றம் நிகழ்ந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மட்டுமல்லாது ஆறு மாதத்துக்கு அவர்கள் ஊருக்குள் வரக் கூடாது எனும் சிறப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறையாக இருக்கக் கூடும் என எண்ணுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் ஆ.ராசா வேதங்களில் சூத்திரர்கள் குறித்து … புண்பட்ட / புண்படாத இந்துக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆ.ராசா அதிர்வேட்டு ராசா

இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று ஆ.ராசா மீது காவி பயங்கரவாதிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆ.ராசா பேசிய அந்தப் பேச்சை கேட்காதவர்களைக் கூட, அப்படி என்ன பேசி விட்டார் ராசா என்று கேட்க வைத்து விட்டார்கள். அதற்கு அந்த பயங்கரவாதிகளுக்கு நன்றி சொல்லலாம். இந்துக்களை இழிவு படுத்தி விட்டார் என்று பயங்கரவாதிகள் கூக்குரல் போடுவதே இந்துக்களை இழிவுபடுத்துவது தான். அனைவரும் அர்ச்சகர் ஆகும் உரிமை என்று இந்து உரிமை பேசினால், பார்ப்பான் மட்டும் தான் … ஆ.ராசா அதிர்வேட்டு ராசா-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி … மீண்டும் நான்-ஐ படிப்பதைத் தொடரவும்.