
இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் போல, ஆதிகாலப் பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கந்தர் சஷ்டி கவசத்துக்கு பொருள் சொன்ன கருப்பர் கூட்டத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்றார்கள். மனுசாத்திரத்துக்கு பொருள் சொன்ன ஆ.ராசாவை இழிவுபடுத்தி விட்டார் என்றார்கள். ஆனால் பார்ப்பனர்களின் வேதங்களும், உபநிடதங்களும், இதிகாசங்களும் இன்னும் பலவும் ஏன் மக்களை இழிவுபடுத்துகிறது என்பதற்கு மட்டும் பதில் கூற மாட்டார்கள்.
ஆசீவகம், சார்வாகம் தொடங்கி பௌத்தம் சமணம் வரை உண்டு செரித்தவர்கள். நந்தன் தொடங்கி அம்பேத்கர் வரை செரிக்கத் துடிப்பவர்கள். இதற்கு பொய்களை மட்டுமே தங்கள் கருவிகளாக கொண்டிருக்கிறார்கள். இவை எதுவும் உடைக்கப்படாத பொய்களல்ல என்றாலும் மீண்டும் மீண்டும் கூறப்படுவதால், நாமும் மீண்டும் மீண்டும் எதிர்ப்புரை செய்ய வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் ம.ஆறுமுகம் எழுதி திராவிடர் கழகம் வெளியீடாக வந்த இந்த சிறு நூலை இங்கு வெளியிடுவது காலப் பொருத்தம் கொண்டதாக இருக்கிறது.
பின்குறிப்பு: அம்பேத்கர் குறித்தும், அம்பேத்கரின் கம்யூனிசப் புரிதல் குறித்தும் மாற்றுக் கருத்து இருக்கிறது என்றாலும் இங்கு பார்ப்பனிய எதிர்ப்பு மட்டுமே இங்கு முதன்மையாய் கொள்ளப்படுகிறது.
படியுங்கள் .. .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. .. பரப்புங்கள்