ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது பலரும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நின்றனர், குறிப்பாக இடதுசாரிகள். ஒரு மதப் பழக்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா? என்று அந்த நிலைப்பாடு அப்போது விவாதத்துக்கு உள்ளாகியது. கர்நாடக கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியலாமா கூடாதா அந்த வழக்கில் நீதிமன்றமே இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அந்த வழக்கு தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியலாமா எனும் கேள்வி மதப் பழக்கம் எனும் … ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் ஒரு விவாதம்

கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி

சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை சிற்றிதழ்களின் காலம். குறிப்பாக இடதுசாரி இதழ்களின் காலம் என்று கூறலாம். இன்று அவ்வாறு இல்லை. ஆனால், அப்படி கூறுவதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இணையம் வந்ததும் பரவியதும் பெருங்காரணம். என்றாலும், அந்த சிற்றிதழ்களின் அடர்த்தி வெகுமக்களிடம் போய்ச் சேர்வில்லை என்பது முதன்மையான காரணம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன் முதல் கல்கண்டு, தேவி வரையிலான ஏராளமான இதழ்கள் வெகுமக்களை ஈர்த்தன. … சொல்லுளி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவிப்பு

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். புரட்சி நாளான இன்று ஓர் இணைய மாத இதழையும், ஒரு யூடியூப் சன்னலையும் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.  இதன் பொருட்டு தான் அறிவிப்பும் வெளியிட்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாக இதற்காக வேலை செய்து கொண்டிருந்தோம். உள்ளடக்கத்தை நானும் ஏனைய தொழில்நுட்ப வடிவமைப்பு வேலைகளை நண்பர்கள் மூன்று பேரும் பிரித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தோம். இதில் ஒருவர் குறித்த நேரத்தை விட தாமதித்து விட்டார். இன்னும் இரண்டு பேரோ முடியாது என்று … அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பணி முடிவுக்கு வந்தது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகவும் பணியாற்றி  ஓய்வுபெற்ற எழுத்தாளர் க.நெடுஞ்செழியன் இன்று முடிவெய்தியிருக்கிறார். திராவிட கழக மேடைகளில் முழங்கி வந்தவர் பேராசிரியர். திருக்குறளுக்கு வலதுசாரி முத்திரையை ஒருவர் (நாகராஜனோ, ராமசாமியோ ஏதோ ஒரு பெயர் வரும் நினைவில் இல்லை) குத்திய போது முதன் முதலில் பொங்கி எழுந்து சினத்துடன் உரையாற்றியதை கேட்ட போது சிலிர்த்துப் போனேன். பேராசிரியரின் உரைகளிலிருந்து தான் … பேராசிரியர் க. நெடுஞ்செழியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்

செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி பேச்சின் நஞ்சு

உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.