வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.