டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருளடைவு:
- ஆசிரிய உரை
- இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு – கட்டுரை – தமிழ்நாடு
- ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் – தொடர் கட்டுரை – அறிவியல்
- நகராட்சியும் வீட்டாட்சியும் – நாட்டு நடப்பு
- அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் – கட்டுரை – இந்தியா
- ஆளுனர் என்ன ஆண்டவரா? – கட்டுரை – தமிழ்நாடு
- பெருவெளியின் தூசு – கவிதை
- பொருளாதாரம் + அரசியல் விழிப்புணர்வு = முன்னேற்றம் – நேர்காணல்
- வறட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வறட்டுத்தனம் – கேள்வி பதில்
- நெருக்கடியில் ஐரோப்பிய யூனியன் – கட்டுரை – உலகம்
மற்றும் மீம்ஸ் மாமே, மிஸ்டர் குடிமகன்.
இணைய இதழை இலவயமாக கொடுக்கலாம் என்றும் எண்ணி இருந்தேன். அதைவிட சிறு மதிப்பு கொடுப்பது, உழைப்பின் மதிப்பாகவும், வாசகர்களின் மதிப்பாகவும் இருக்கும் என்பதால் ஆண்டுக் கட்டணமாக ரூ 50 (12 இதழ்களுக்கு) என தீர்மானித்திருக்கிறேன். இதையும் செலுத்த இயலாது என எண்ணுவோர் பகிரி எனும் வாட்ஸ் ஆப்பிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கு இலவயமாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம் செலுத்த எண்ணுவோர் பகிரியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்க.
பகிரி: 8903271250
மின்னஞ்சல்: sollulisolluli@gmail.com
வணக்கம் தோழர். வரட்டுத்தனம் அல்ல வறட்டுத்தனம். ர வராது தோழர் ற தானே வரும்.
நன்றி தோழர்,
இலக்கண விதிகள் தெரியாதது தான் காரணம். இந்தப் பதிவில் திருத்தி விடுகிறேன். ஆனால் இதழ் அனைவருக்கும் அனுப்பபட்டு விட்டது தோழர். அடுத்து இது போல் பிழைகள் நேர்ந்து விடாதவாறு கவனம் கொள்ள முயல்கிறேன்.