விவாதம்

bsr005

 

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

மீண்டும் ஒரு விவாத அறிவிப்பு.

வழக்கம் போல இதுவும் கடவுளோடு தொடர்புடைய விவாதம் தான். ஆனால், தான் மதவாதி இல்லை என அறிவித்துக் கொண்டுள்ள நண்பர் விவேக் அத்வைதி உடனான இந்த விவாதம் முந்திய விவாதங்களிலிருந்து சற்றே மாறுபட்டது. எவ்வாறென்றால், இதுவரை இத்தளத்தில் நடந்த விவாதங்கள் அனைத்தும் மனிதனின் நடப்பு வாழ்வில் குறுக்கிடும் கடவுள் குறித்து நடந்தவை. மாறாக, நடக்கவிருக்கும் இந்த விவாதமோ மனிதனின் நடப்பு வாழ்வில் குறுக்கிடாத கடவுள் குறித்து நடத்தப்பட இருக்கிறது. அதேநேரம், இந்தப் பொருள் குறித்து ஏற்கனவே கட்டுரை பின்னூட்டம் வடிவிலான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது, அது பொருத்தமான வடிவத்தில் இல்லை எனக் கருதியதால் தற்போது ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக் கொண்டு விவாதம் நடத்துவது என முடிவு செய்து இந்த விவாதம் நடத்தப்படவிருக்கிறது. இது குறித்த கட்டுரைகள் பின்னூட்டங்களைக் காண இங்கே சொடுக்கவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் பகுதி 1

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் பகுதி 2

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் பகுதி 3

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் பகுதி 4

இந்த விவாதத்தின் சாராம்சமான கருப் பொருள் கடவுள் என்றால் என்ன? அதனை எவ்வாறு மெய்ப்பிப்பது? எனும் இரண்டு தலைப்புகளில் தான் அடங்கியுள்ளது.  விவாதத்தின் கருப்பொருளை உள்ளடக்கிய ஒரு தரப்பின் ஒற்றைக் கேள்வியை எடுத்துக் கொண்டு அதனை மட்டுமே விவாதித்து அந்தக் கேள்வியில் ஒரு முடிவுக்கு வந்த பின், எதிர்த்தரப்பின் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு விவாதிக்க வேண்டும். இது தான் இந்த விவாதத்தின் வடிவம்.

இந்த விவாதத்தில் செங்கொடியாகிய நான் என்னுடைய வாதங்களை எள்ளலில்லாமலும், உள்ளீட்டுடனும், முடிவு காணும் நோக்கத்துடனும், நட்பு ரீதியாகவும் முன்வைப்பேன் என உறுதியேற்கிறேன். அவ்வாறே நண்பர் விவேக்கும் உறுதியேற்பார் என எதிர்பார்க்கிறேன். தொடர்புடைய எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் விவாதத்தை நகர்த்த முற்பட வேண்டாம் என வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம். அதேநேரம் தங்களுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. விரும்பியதை விரும்பியவாறு பதிவு செய்யலாம். ஆனால் அதில் தனிப்பட்ட யார் குறித்தும் கேலி கிண்டலாகவோ, அவதூறு வசைகளாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.

முந்திய அனுபவங்களைப் போலன்றி இந்த விவாதம் இறுதிவரை ஒரு முடிவைக் காணும் வரை பயணப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.

நன்றி.

விதிமுறைகள்.

 1. இந்த விவாதத்தின் அனைத்து அம்சங்களும் முடிவைக் காணும் விதத்திலேயே பயணப்பட வேண்டும். 
 2. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்கு வெளியே எதையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்படுகிறது எனக் கருதினால் என்ன விதத்தில் இந்த தலைப்புக்கு உதவியாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
 3. இந்த விவாதத்தில் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கான பதில், விவாதங்கள் இவைகளிலிருந்து ஒரு முடிவை வந்தடைந்த பின்னர் அடுத்த கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பலவிதமான கேள்விகளை எடுத்துக் கொண்டு விவாதிக்கக் கூடாது
 4. விவாதத்தில் ஈடுபடும் இருவரும் கேள்வியை முன் வைக்கும் போது எதிர்தரப்பின் நிலைப்பாட்டை எப்படி புரிந்து கொண்டு அந்தக் கேள்வியை முன் வைக்கிறார் என்பதைக் குறிப்பிடுவது சிறந்தது
 5. வைக்கப்படும் வாதங்கள் தகுந்த உள்ளீட்டுடனும் செரிவுடனும் இருக்க வேண்டும்.
 6. அவரவர் வைக்கும் வாதங்களுக்கு அவரவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
 7. விவாதிக்கும் இருவர் தவிர ஏனையோர் கூறும் கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒருவேளை அப்படி வைக்கப்படும் கருத்து சரியானது எனக் கருதினால் அதனை தன்னுடைய வாதத்தில் எடுத்துக் கூறி முன்வைக்க வேண்டும்.
 8. எதிர்த்தரப்பு முன்வைக்கும் வாதங்களை திசைதிருப்புவதோ, கண்டு கொள்ளாமல் நழுவிச் செல்வதோ கூடாது.
 9. குறிப்பிட்ட ஒரு அம்சத்துக்கு பதிலளிக்காமல் இருப்பது, சுட்டிக் காட்டிய பிறகும் அது தொடர்ந்தால் அது குறித்த எதிர்தரப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.
 10. எதிர்த்தரப்பின் வாதத்துக்கு நான்கு நாட்களுக்குள் பதிலளித்து விட வேண்டும். தவிர்க்கவியலாமல் பதிலளிக்க முடியாதிருந்தால் தகுந்த காரணங்களைக் கூறி எவ்வளவு நாட்களுக்குள் பதிலளிக்க முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும். நழுவல் போக்கில் இதைப் பயன்படுத்தக் கூடாது.

 

65 பதில்கள்

 1. நண்பர் விவேக்,

  விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என எண்ணினால் அதை குறிப்பிடுங்கள். தேவை கருதி மாற்றம் செய்து கொள்ளலாம்.

  முதற்கேள்வியைத் தொடுத்து விவாதத்தை தொடங்கி வைக்குமாறு கோருகிறேன்.அல்லது நான் தொடங்க வேண்டும் என்றாலும் தெரியப்படுத்துங்கள்.

 2. நண்பர் செங்கொடி,

  விவாதம் என்பது மற்றவரை தோற்கடிக்கும் நோக்கம் கொண்டது. அதில் எனக்கு விருப்பமில்லை. கேள்வி பதிலாக நாம் நம்முடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

  விதிமுறைகள் அனைத்தும் எனக்கு ஏற்புடையதே. ஆனால் கீழ்கண்ட விதிமுறைகள் நடைமுறைக்கு ஒத்து வராமல் போகலாம் :

  விதிமுறை 1

  அனைத்து அம்சங்களுக்கும் முடிவை காணமுடியாது. ஒரு கட்டத்தில் நாம் நம்முடைய கருத்திலேயே நிலைப்போம், அதற்குமேல் அதை குறித்து பேச வேண்டிய அவசியம் இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் கருத்துக்களை படிப்பவர்கள் அவரவர் முடிவுக்கே வரவேண்டியதுதான்.

  விதிமுறை 10

  சில முறை சொந்த வேலையின் காரணமாக பதில் அளிக்க 4 நாட்களுக்கு மேல் ஆகலாம்.

  கருப்பொருள் 1 – கடவுள் என்றால் என்ன

  இதை குறித்து நாம் விரிவாக பேசுவோம்.

  கருப்பொருள் 2- கடவுளை எவ்வாறு மெய்ப்பிப்பது

  நான் ஏற்கெனவே கூறியபடி, கடவுளின் இருப்பை வெளியே இருக்கிற ஏதோ ஒன்றாக நிரூபிக்க முடியாது. அது ஏன் என்பதை பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம்.

  நீங்களே முதல் கேள்வியுடன் தொடங்குங்கள். உங்கள் கேள்விகள் இரத்தின சுருக்கமாக இருந்தால் நன்று.

 3. நண்பர் விவேக்,

  விவாதம் என்பது மற்றவரை தோற்கடிக்க முனைவது என்பதாக கொள்ள வேண்டாம். இருவரும் தத்தமது வாதங்களின் மூலம் விவாதத்தை நடத்தி எது சரி எனும் உண்மையைக் கண்டறிவது எனும் அடிப்படையில் நடத்தலாம். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என எண்ணுகிறேன். தவிர, விவாதம் எனும் சொல் உங்களுக்கு ஏற்பில்லாததாக இருந்தால் பொருத்தமான வேறு சொல்லை நீங்களே பரிந்துரை செய்யுங்கள் மீளாய்வு செய்யலாம்.

  விதி 1 குறித்து: இது என்னுடைய கருத்து. அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று நினைத்தால் மட்டுமே முடிவை நோக்கி பயணிப்பதில் சிக்கல் ஏற்படும். மாறாக, என்னுடைய கருத்தை அதன் இலக்குகள், நிகழ்தகவுகளுடன் முன்வைப்பேன். அதற்கு எதிராக கூறப்படும் அனைத்தையும் மீளாய்வு செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன், தவறாக இருந்தால் அதனை விட்டு விலகுவேன் எனும் உறுதி கொண்டால் முடிவை நோக்கி பயணிப்பதில் எந்த சிக்கலும் வராது எனக் கருதுகிறேன். ஒருவேளை தவிர்க்க இயலாமல் அவ்வாறான நிலை தோன்றினால், இருவருமே ஒத்த கருத்தில் இருந்து அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடலாம். ஆனால் அவ்வாறு வாசகர்களின் கருத்துக்கு விடும் குறிப்பான நிலையில் அதே கருத்தை தன்னுடைய வாதமாக இருவருமே மீண்டும் முன்வைக்கக் கூடாது.

  விதி 10 குறித்து: ஏற்படலாம். ஏற்பட்டால், உடன் விவாதிப்பவரும் வாசகர்களும் தம்முடைய பதிலுக்காக காத்திருக்கிறார்கள் எனும் பொறுப்புணவோடு இத்தனை நாட்களுக்குள் பதிலளிக்க முடியும் என்பதை எழுதி தெரிவித்து விட்டால் போதுமானது.

  இனி விவாதத்தினுள் புகுவோம்.

  முதல் தலைப்பையே என்னுடைய முதல் கேள்வியாக முன்வைக்கிறேன்.
  கடவுள் என்றால் என்ன? அதாவது, கடவுளின் தன்மைகள், கடவுளின் குணங்கள், கடவுளின் திறன் ஆகியவை அல்ல என்னுடைய கேள்வி. இவைகலெல்லாம் கடவுள் என்ற ஒன்று உண்டு எனும் நிலை ஏற்பட்ட பிறகு கேட்கப்பட வேண்டியவைகள். நான் கேட்பது கடவுள் என்றால் என்ன என்பது. எடுத்துக்காட்டாக ஒரு பேனாவைக் கொள்வோம். எழுதுவது என்பது அதன் தன்மை. பேனாவின் நுனி இயைபாக இருப்பதால் தாளில் கீறாமல் எழுதிச் செல்லும், மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு எழுதும் என்பன அதன் குணங்கள். என்னென்ன அளவுகளில் இருக்கிறது, எப்படி இருந்தால் அதன் நோக்கமான எழுதுவது என்பது நிறைவேறும் போன்றவை அதன் திறங்கள். இவ்வாறன்றி பேனா என்பது இன்ன நோக்கத்துக்காக இவ்வாறாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இவ்வாறாக ஆக்கப்பட்டிருக்கிறது அல்லது இன்னின்ன பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் இதை சட்டைப்பையில் வைத்தோ அல்லது வேறு இடங்களிலோ வைத்திருந்து எளிதாக பயன்படுத்துவார்கள் என்பது தான் பேனா என்றால் என்ன என்பதற்கான பதிலாக அமையும். அதேபோல கடவுளின் தன்மை, குணம், திறன் ஆகியவைகளை விலக்கி கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுமாறு கோருகிறேன்.

  இனி உங்கள் பதில் கண்டு .. .. ..

 4. கடவுளின் தன்மை, குணங்கள் போன்றவற்றை குறிப்பிடாமல் கடவுள் என்றால் என்ன என்று கூறவேண்டும் என்கிறீர்கள். சரி, கூறுகிறேன். நாம் வாழும் பௌதீக பிரபஞ்சம் உட்பட 397 பிரபஞ்சங்கள் அடங்கிய அண்டத்தை(multiverse) படைத்த மூலாதார ஜீவன்(Source Entity) தான் நம்முடைய கடவுள்.

 5. மூலாதார ஜீவனாகிய கடவுள் பலவித தரமுடைய ஆற்றல்களினால் ஆனது(it is made up of energies of different qualities).

 6. //சரி, கூறுகிறேன். நாம் வாழும் பௌதீக பிரபஞ்சம் உட்பட 397 பிரபஞ்சங்கள் அடங்கிய அண்டத்தை(multiverse) படைத்த மூலாதார ஜீவன்(Source Entity) தான் நம்முடைய கடவுள்.//

  விவேக்… நீங்கள் கூறும் மேற்படி கூற்றுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. அதனை தாங்கள் அளித்தால் தகும். இதற்க்கு ஏதாவது பொறுப்பான அறிவியல் ஆதாரத்தை தாங்கள் அளிக்கலாம்

 7. நண்பர் விவேக்,

  மூலாதார ஜீவன், பலதரப்பட்ட ஆற்றல்களால் ஆனது ஆகிய இரண்டு சொற்களையும் நீங்கள் இன்னும் அதிகமாக விளக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், அறிவியல் ரீதியாக நான் புரிந்து வைத்திருக்கும் மேற்கண்ட சொற்கள், உங்களின் பாவனையில் பொருள் தராத சொல்லாக தெரிகிறது.

  எத்தனை அண்டங்கள்? 397 என்பது என்ன கணக்கு? நாம் வாழும் இந்த அண்டம் இருப்பது மட்டுமே பொது உண்மை. இதற்கு மேலும் அண்டங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமே இப்போதைய அறிவியல் சாத்தியம். அது அறுதியானதோ, பொது உண்மையோ அல்ல. ஆனால், நீங்களோ 397 என்றொரு இலக்கத்தைக் கூறி, அதைப் படைத்தவர் எனும் கடவுளின் குணத்தைக் குறிப்பிடுகிறீர்கள். கேட்கப்பட்ட கேள்விக்கு இது பதிலல்ல என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  ஒரு பொருள் இயங்குவதன் விளைவாக வெளிப்படும் சக்தியே ஆற்றல் எனப்படும். பலதரப்பட்ட ஆற்றல் என்றால் வெவ்வேறு அலகுகளில் ஆற்றலை வெளியிடக் கூடிய பல பொருட்கள் ஒன்றிணைந்து இருக்கின்றன எனப் பொருள்படும். இது தான் அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படும் பொருள். இந்தப் பொருளில் தான் மேற்கண்ட சொற்களை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா?

  இல்லை என்றால் அதற்கான தெளிவான விளக்கம் தர வேண்டியது உங்கள் கடமையாகிறது.

 8. நண்பர் செங்கொடி,

  நாம் வாழும் பிரபஞ்சம் உட்பட 397 பிரபஞ்சங்களை படைத்த ஜீவனை மூலாதார ஜீவன் என்று கூறினேன். ஏனெனில் இதைத்தான் மூலாதாரம், கடவுள் என்று மனிதர்கள் அழைக்கின்றனர். இதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை. அதனால் அது உங்களுக்கு பொருள் தராத சொல்லாக தெரிகிறது. மூலாதார ஜீவனின் அண்டத்தில் 397 பிரபஞ்சங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் பிரபஞ்சம்தான் பௌதீக பிரபஞ்சம். மற்ற அனைத்தும் ஆற்றல்மய பிரபஞ்சங்கள். அதனால் எதுவும் இப்போதைய குழந்தைப்பருவ அறிவியலுக்கு தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் கேட்ட கேள்வி, கடவுள் என்றால் என்ன என்பது. மூலாதார ஜீவன்தான் நம்முடைய கடவுள் என்றேன். இது கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுத்த சரியான பதில் என்றே கருதுகிறேன்.

  ஒரு பொருள் இயங்குவதால் வெளிப்படும் சக்திதான் ஆற்றல் என்பது தவறு. பொருளே ஆற்றலின் இன்னொரு வடிவம்தான். தெரியவில்லை என்றால், குவாண்டம் அறிவியலை படித்து தெரிந்துகொள்ளுங்கள். கடவுளுடைய ஆற்றல்களின் ஒவ்வொரு தரத்திற்கு ஏற்ப பல்வேறு படைப்புகள் உருவாக்கப்பட்டன. எல்லா படைப்புகளும் ஒரே வகை ஆற்றலினால் ஆனவை அல்ல. மனித இனம்(Humanoid), விலங்கினம்(Animal Kingdom), தாவர இனம்(Plant kingdom), கூட்டு மனம் வகை(Collective Mind type), இயற்கை ஆவிகள்(Nature spirits) என்று பலவகை படைப்புகள் அவற்றின் இயல்பான ஆற்றலின் தரத்திற்கு ஏற்ப கடவுளால் படைக்கப்பட்டன. இது உண்மை என்பதற்கு தற்கால அறிவியலில் நிரூபணம் கிடையாது. ஆனால் உண்மை.

 9. நண்பர் விவேக்,

  நான் இப்படிக் கேட்பதற்காக என்னை நீங்கள் தவறாக எண்னிக் கொள்ளக் கூடாது.

  நாம் வாழும் பிரபஞ்சம் உட்பட 999 பிரபஞ்சங்களை படைத்த ஜீவனை மூலாதார ஜீவன் என்று கூறலாம். இந்த மூலாதார ஜீவனைத்தான் டகபடா என்று அறிந்துணர்ந்த மனிதர்கள் அழைக்கிறார்கள். மூலாதார ஜீவனின் அண்டத்தில் 999 பிரபஞ்சங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் பிரபஞ்சம்தான் பௌதீக பிரபஞ்சமாகிய நாம் இருக்கும் இப்பேரண்டம். மற்ற அனைத்தும் ஆற்றல்மய பிரபஞ்சங்கள். அதனால் எதுவும் இப்போதைய குழந்தைப்பருவ அறிவியலுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே, கடவுள் என்று கூறப்படுவது பொய், டகபடா தான் உண்மை. என்று ஒருவர் கூறுகிறார் எனக் கொள்வோம். இதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?

  ஆற்றல் என்றால் என்ன என்பதை குவாண்டம் இயற்பியலைப் படித்து தெரிந்து கொள்ளலாம். நன்று. ஆனால் நீங்கள் கூறும் மூலாதார ஜீவன், 397பிரபஞ்சங்கள் போன்றவைகளை எதைப் படித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினால் நன்றாக இருக்கும்.

  பொது உண்மை அல்லாத பிறவற்றுக்கு நிரூபணம் தேவைப்படுகிறது. கதிரவன் இருக்கிறது என்பதற்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. ஏனென்றால் அது பொது உண்மை. இதற்கு மாற்றமாக ஏதாவது கூறினால் அதற்கு நிரூபணம் வேண்டுமா இல்லையா? குழந்தைப் பருவ அறிவியலால அந்த நிரூபணத்தை கொடுக்க முடியாது என்றே வைத்துக் கொள்வோம். கிழப் பருவ அறிவியல் என்று ஏதாவது இருந்தால் அதை விளக்குங்கள். அதனைக் கொண்டு எப்படி – பொது உண்மை அல்லாத, எந்த நிரூபணமும் இல்லாத – கடவுள் சமாச்சாரங்களை அறிவது என்பதையும் விளக்குங்கள்.

 10. நண்பர் செங்கொடி,

  எத்தனை அண்டங்கள்? 397 என்பது என்ன கணக்கு? என்று கேட்டீர்கள். விளக்குகிறேன்.

  பிரபஞ்சம், அண்டம், பேரண்டம் என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல பிரபஞ்சங்களைக்கொண்டது அண்டம்; பல அண்டங்களைக்கொண்டது பேரண்டம். முதலில் அண்டத்தைப்பற்றி விளக்குகிறேன். ஏனெனில் இதுதான் மூலாதார ஜீவனால் படைக்கப்பட்டது.

  மூலாதார ஜீவன் தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் அண்டத்தை படைத்தது. அது தன்னுடைய பகுதியை 12 முழு பரிமாணங்களாக கட்டமைத்தது. அதாவது அண்டத்தின் கட்டமைப்பு 12 முழு பரிமாணங்களைக்கொண்டது. முதல் பரிமாணம் மட்டும் பௌதீக பிரபஞ்சம். மற்ற பரிமாணங்கள் அனைத்தும் ஆற்றல்மய பிரபஞ்சங்கள். முதல் பரிமாணத்தில் மட்டும் ஒரே பிரபஞ்சம் உள்ளது. மற்ற 11 பரிமாணங்கள் ஒவ்வொன்றிலும் 36 பிரபஞ்சங்கள் உள்ளன. ஆக, 11 * 36 = 396 + 1 என்று 397 பிரபஞ்சங்கள் மூலாதார ஜீவனின் அண்டத்திற்குள் உள்ளன. முதல் முழு பரிமாணத்தை தவிர, மற்ற 11 முழு பரிமாணங்கள் ஒவ்வொன்றும் மூன்று உப பரிமாணங்களாக(sub dimensions) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. உப பரிமாணம் ஒவ்வொன்றுக்கும் 12 பிரபஞ்சங்கள் என்று மொத்தம் 36 பிரபஞ்சங்கள் ஒவ்வொரு முழு பரிமாணத்திலும் உள்ளன.

  மேலும் 12 முழு பரிமாணங்களும் மூன்று மூன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன(tritaves).
  ஒவ்வொரு பரிமாணத்திற்கும் பல அலைவரிசைகள் உள்ளன(frequency bands).

  நாம் இப்பொழுது இருப்பது முதலாவது முழு பரிமாணத்தின் மூன்றாவது அலைவரிசையில்.

 11. நண்பர் செங்கொடி,

  நாம் கடவுள் என்பதை பற்றிய நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். இதில் கேள்விகள், பதில் கேள்விகள், உதாரணங்கள் எழத்தான் செய்யும். அதை பற்றி தவறாக நினைக்க ஒன்றுமில்லை.

  கடவுள் என்பது ஒரு பெயர். அதை வேறு எந்த பெயர் கொண்டும் அழைக்கலாம். அந்த பெயர் டகபடா என்றோ அல்லது வேறு ஏதோ ஒன்றாகக்கூட நாம் வைத்துக்கொள்ளலாம். அது ஒரு பொருட்டல்ல. சரி, நீங்கள் கூறியபடி ஒருவர் கூறுகிறார் என்றால் அவருக்கு அப்படி யார் சொன்னது என்று அவர் கூறட்டும். வெறுமனே அவர் அதை கூறுகிறாரா அல்லது உயர் ஆன்மாவோ, கடவுளோ, உயர் வளர்ச்சி பெற்ற வேற்று பரிமாண ஜீவனோ இந்த தகவ்களை அவருக்கு கூறியதா என்று அவர் சொல்லட்டும்.

  நான் கூறும் ஆன்மீக விஷயங்கள் சானலிங்(chaneling) மூலம் கிடைக்கப்பெற்ற நூல்கள் மற்றும் சொந்த அனுபவம் மூலம் நான் அறிந்தவை. அது என் அறிவுக்கு, ஆன்மாவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதனால் அதை உண்மை என்று நான் ஏற்கிறேன். அதேபோல் நான் கூறும் விஷயங்கள் படிப்பவருக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்பர். இல்லையென்றால் மறுக்கட்டும். அது அவரவர் வளர்ச்சி நிலையை பொறுத்ததது.

  மூலாதார ஜீவன் 1, மற்ற 11 மூலாதார ஜீவன்கள், அவைகள் படைத்துள்ள பிரபஞ்சங்கள் மற்றும் தோற்றுவாய் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள Guy Steven Needler என்பவரின் நூல்களை படித்து அறிந்து கொள்ளலாம். நான் அவரின் நூல்கள் மட்டுமல்லாமல் மற்ற பல நூல்களையும் படித்து தெரிந்து கொண்ட ஆன்மீக விஷயங்களை பேசப்போகிறேன்.

 12. //மூலாதார ஜீவன் 1, மற்ற 11 மூலாதார ஜீவன்கள், அவைகள் படைத்துள்ள பிரபஞ்சங்கள் மற்றும் தோற்றுவாய் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள Guy Steven Needler என்பவரின் நூல்களை படித்து அறிந்து கொள்ளலாம். நான் அவரின் நூல்கள் மட்டுமல்லாமல் மற்ற பல நூல்களையும் படித்து தெரிந்து கொண்ட ஆன்மீக விஷயங்களை பேசப்போகிறேன்.//

  அப்ப அடுத்தவன் சொல்லிவச்சத தான் பேச போறிங்களா???? உங்களுக்கென்று சொந்த அனுபவமோ, அனுபூதியோ.. விபூதியோ அதெல்லாம் ஒண்ணுமில்லயா.. சரி,நாங்கள் ஏன் Guy Steven Needler புத்தகங்களை படிக்க வேண்டும். நீங்கள் தான் படித்து விட்டீர்களே, அவர் எதன் அடிப்படையில் இதனை கூறுகிறார் என்று விளக்கினால் நலமாக இருக்கும்.. அடுத்தவன் கருத்த மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறதுனு ஆயிடுச்சு அத கொஞ்சம் நேர்மையா செஞ்சா தேவலாம்.. மத்தபடி ஒண்ணுமில்ல நன்றி..

 13. சொந்த அனுபவம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் அனுபவத்தை அறிந்து கொள்வதின் மூலமும் நாம் அறிவை பெற்று வளர்ச்சி அடைய முடியும். அதைத்தான் நான் செய்கிறேன். நீங்கள் எப்படி? யார் எதை சொன்னாலும் கேட்க மாட்டீர்களா?

  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான அனுபவம், வாய்ப்பு கிடைக்கும். அதை அறிந்து அறிவை பெருக்கிக்கொள்வது எனக்கு ஏற்புடையது. அதனால் அறிவை மேலும் மேலும் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறேன். கற்றல் பல வழிமுறைகளில் பெறப்படுகிறது. பிறர் மூலம் விஷயங்களை அறிவது அதில் ஒன்று. கற்றலுக்கு எல்லையே இல்லை.

 14. நண்பர் செங்கொடி,

  பொது உண்மை அல்லாத பிறவற்றுக்கு நிரூபணம் தேவைப்படுகிறது என்கிறீர்கள். பொது உண்மை என்று எதை கூறுகிறீர்கள்? நம் ஐம்புலன்களுக்கு தெரியக்கூடியது எதுவோ அல்லது இன்றைய அறிவியல் கருவிகளால் கண்டுபிடிக்க முடிந்தது எதுவோ அதுதான் பொது உண்மை என்கிறீர்களா? அப்படி என்றால் அதுதான் நிரூபணமாக தெரிகிறதே. வேறு என்ன நிரூபணம் வேண்டும்?

  நம் ஐம்புலன்களுக்கு தெரிந்தது, தெரியாதது அனைத்தும் கடவுள்தான். இருப்பது அனைத்தும் கடவுள். கடவுளாக இல்லாமல் எதுவும் இல்லை. அனைத்தும் ஆற்றல்தான். ஆற்றல்தான் பருப்பொருளாக காட்சி தருகிறது. ஆற்றல் இருக்கிறது என்பதற்கு நிரூபணம் வேண்டும் என்கிறீர்களா? அல்லது ஆற்றல்தான் பொருளாக வெளிப்படுகிறது என்பதற்கு நிரூபணம் வேண்டுமா? என்ன நிரூபணம் வேண்டும்?

  குழந்தை பருவ அறிவியலால் முடியாவிட்டால் கிழப்பருவ அறிவியல் இருந்தால் அதைக்கொண்டு விளக்குங்கள் என்கிறீர்கள். இதை படிக்க தமாஷாக இருந்தது. நீங்கள் என்னை சிரிக்க வைத்தீர்கள். நீங்கள் சிரிப்பதற்கு நான் ஒன்று சொல்கிறேன். குழந்தை பருவம் இருக்கும், வளர்ச்சி பருவம் இருக்கும், முழு வளர்ச்சி அடைந்த பருவம் இருக்கும். ஆனால் கிழப்பருவம் என்று ஒன்று கிடையாது. என்றும் இளமைப்பருவம்தான். வயது,வயதாவது என்பது உண்மையில் கிடையாது. வயது ஆகிறது என்று கற்பனை செய்வதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது. அவ்வளவுதான்.

  முதுமைப்பருவம் இல்லாததால், வளர்ச்சி அடைந்த பருவ அறிவியலைக்கொண்டு விளக்குகிறேன். அந்த அறிவியல்தான் ஆன்மீக அறிவியல்.

 15. நண்பர் விவேக்,

  நீங்கள் கூறும் அனைத்தும் டகபடா வைப் போலவே இருக்கிறது.

  பொது உண்மை என்பது குறித்து நீங்கள் கூறுவதை எடுத்துக் கொள்ளலாம். நிரூபணம் தேவையில்லாமல் அதாவது முன்னர் பலமுறை சான்று காட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று, பொது உண்மை என்றானால் அதற்கு அப்பாற்பட்டு கூறப்படும் அல்லது பொது உண்மைக்கு எதிராக கூறப்படும் அனைத்துக்கும் நீரூபணம் வேண்டும். உங்களுக்கு இசைவானதாவே கூறுகிறேன். ஆற்றல் இருக்கிறது என்பதற்கு நிரூபணம் தேவையில்லை. பருப் பொருட்களில் ஆற்றல் உள்ளது என்பதற்கும் நிரூபணம் தேவையில்லை. ஆனால் பருப் பொருட்களில் இருக்கும் ஆற்றலும் நீங்கள் கூறும் மூலாதார ஆற்றலும் ஒன்றல்ல, வேறு வேறு அப்படித் தானே. எனவே, நீங்கள் பருப்பொருளில் உள்ள ஆற்றலை விட்டுவிட்டு நீங்கள் கூறும் மூலாதார ஆற்றலுக்கான நிரூபணத்தைக் கூறுங்கள் என்று கேட்கிறேன். தெளிவாகச் சொன்னால் பருப்பொருளின் ஆற்றலையும், நீங்கள் கூறும் மூலாதார ஆற்றலையும் குழப்பாதீர்கள் என்று கூறுகிறேன். நான் மதவாதி அல்ல என்று கூறும் உங்களின் வாதம் மதவாதியின் வாதத்தைப் போலவே இருக்கிறது என்று கூறுகிறேன்.

  ஐம்புலனுக்கு தெரிந்தது தெரியாது அனைத்தும் கடவுள் தான் என்பது குழப்பமான கருத்து. ஐம்புலனுக்கு தெரிவது, ஐம்புலன்களால் அறிவது ஆகிய அனைத்தையும் அறிவியல் வகைப்படுத்தி இருக்கிறது. அவை அனைத்தும் கடவுள் இல்லை, தனித்தனிப் பொருட்கள். ஆனால் கடவுள் என்பது என்னவென்றே தெரியாமல் நம்பிக்கையாளர்களால் கூறப்படும் ஐயத்துக்கிடமான ஒன்று. இரண்டையும் ஒன்றுபடுத்தவே முடியாது. என்வே, கடவுள் எது எனக் காட்ட வேண்டும், மூலாதார ஆற்றல் எது என நிரூபிக்க வேண்டும். இது தான் பிரச்சனையாக இருக்கிறது. இருக்கும் ஒன்றைக் காட்டி இது இப்பதை ஏற்றுக் கொண்டால் அதையும் ஏற்றுக் கொள் என்று கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

  அறிவியல் என்பதே பலரது அனுபவங்களை உள்ளடக்கியது தான். சரியாக இருக்கும் வரை மட்டுமே நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும். குவாண்டம் இயற்பியல் என்பது அறிவியல் துறை. ஆனால் நீங்கள் கூறும் சானலிங் என்பது அறிவியலல்ல. சிலர் கூறும் கற்பிதம். அடுத்த ஆண்டு அதிக மழை பொழியும் என்று வானியல் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாம் – மழை பொழியாவிட்டாலும் கூட – ஏனென்றால் அது அறிவியல் ஆய்வு முறை. இமயமலை முனிவர் மழை பொழியும் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது – மழை பொழிந்தாலும் கூட – ஏனென்றால் அதில் எந்த அறிவியல் ஆய்வு முறையும் இல்லை. எனவே ஒருவர் கூறுவதை ஏற்றுக் கொள்வதா மறுப்பதா என்பது அனுபவமா இல்லையா என்பதைப் பொருத்ததல்ல. அவர் அதை எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பதே. இந்த அடிப்படையில் பார்த்தால் நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் ஆன்மீக அறிவியல் என்பதற்கே அடிப்படை தேவைப் படுகிறது, நிரூபணம் தேவைப்படுகிறது.

  நாம் இன்னும் தொடங்கிய இடத்திலேயே தான் நின்று கொண்டிருக்கிறோம். கடவுள் என்றால் என்ன? என்பதற்கு நீங்கள் கூறிய அனைத்தும் நிரூபணம் தேவைப்படும் ஒன்றாக, என்ன அடிப்படையில் இயங்குகிறது என்பதே தெரியாத வெற்றுக் கூற்றுகளாகவே இருக்கின்றன.

  ஏற்கனவே கூறிய ஒன்று தான் என்றாலும் மீண்டும் கூறுகிறேன். நீங்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் அறிவியலையே அதாவது நீங்கள் குழந்தைப் பருவ அறிவியல் எனக் குறிப்பிடும் அறிவியலையே பயன்படுத்துகின்றனர். கடவுள் என்று ஒன்றில் மட்டும் கவனிக்கவும் கடவுள் என்ற ஒன்றில் மட்டும் அறிவியலை தூக்கி வீசிவிட்டு ஆன்மீக அறிவியல் என்பது போல் எதையெதையோ கொண்டு வந்து முட்டுக் கொடுக்கப் பார்க்கிறார்கள். நான் கேட்பது எளிமையான ஒன்று தான். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அறிவியலைப் பயன்படுத்தும் போது, இருக்கிறதா இல்லையா என்று உறுதிப்படுத்த முடியாத, என்னவென்றே தெரியாத கடவுளை அறியும் அம்சத்தில் ஏன் அறிவியலை பயன்படுத்தக் கூடாது?

  பின்குறிப்பு: நண்பர் விவேக் நீங்கள் உங்கள் வாதத்தை பல பின்னூட்டங்களாக வைக்கிறீர்கள். வரவேற்கிறேன். ஆனால் உங்கள் வாதம் முடிந்து விட்டதா அல்லது இன்னும் எழுதப் போகிறீர்களா என்பது தெரியாத நிலை ஏற்படுகிறது. எனவே உங்கள் வாதம் முடிந்த பிறகு முடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக எதாவது குறிப்பெழுதினால் அடுத்து நான் தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றி.

 16. நண்பர் செங்கொடி,

  நான் கூறுவது அனைத்தும் டகபடா வைப் போலவே உங்களுக்கு தோன்றினால், அப்படியே இருந்துவிட்டு போகட்டும். எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

  எதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொது உண்மை என்று எதுவும் இல்லை. அவரவர் விழிப்புநிலை வளர்ச்சியை பொறுத்து உண்மை என்பது அவரவருக்கு மாறுபடும். நான் உண்மை என்று நினைப்பது உங்களுக்கு உண்மையாக இருக்காது. அதேபோல் உங்களுடைய உண்மை எனக்கு உண்மையாக இருக்காது. நான் என்னுடைய உண்மையை பின்பற்றுகிறேன். நீங்கள் உங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை ஏற்கிறீர்கள். அவ்வளவுதான். நம்முடைய விழிப்புணர்வு வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய உண்மை மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இறுதி உண்மை என்பது உண்டு. அதாவது உண்மை மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான் இறுதி உண்மை.

  நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. அதாவது, நாம் இப்பொழுது இருக்கிற மூன்றாம் பரிமாண உலகத்திற்கு அப்பாற்பட்ட யதார்த்தத்தில் இருக்கும் சில விஷயங்களை பற்றி கூறினேன். அதற்கு மூன்றாம் பரிமாண உலகத்தில் காணக்கூடிய நிரூபணத்தை கொடுங்கள் என்று கேட்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்? உதாரணத்திற்கு ஐந்தாம் பரிமாணத்தில் இருக்கும் ஒரு பொருளை காணவேண்டும் என்றால் நீங்கள் ஐந்தாம் பரிமாணத்திற்கு செல்ல வேண்டும். மூன்றாம் பரிமாணத்தில் இருந்துகொண்டு ஐந்தாம் பரிமாண பொருளை எவராலும் காண முடியாது. அப்படி காண முடியவில்லை என்பதால் அந்த பொருள் இல்லை என்று கூற முடியாது. அப்படி கூறினால், அது கூறுபவரின் அறியாமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. உதாரணத்திற்க்கு நான் ஐந்தாம் பரிமாண மனிதராக இருந்து உங்கள் பக்கத்தில் வந்து நின்றால் உங்களால் என்னை காண முடியாது. நம்முடைய பூமிக்கு அருகிலேயே ஒரு கோள் இருக்கிறது. அது ஐந்தாவது பரிமாணத்தில் இருப்பதால் நம் கண்களுக்கோ அல்லது இன்றைய அறிவியல் கருவிகளுக்கோ தென்படவில்லை.

 17. நண்பர் செங்கொடி,

  நம் புலன்களுக்கு தெரிந்தது, தெரியாதது அனைத்தும் கடவுள்தான் எனபதில் எந்த குழப்பமும் இல்லை. இந்த உண்மையை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, அல்லது உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்டுள்ள தடைகள் உங்கள் புரிதலுக்கு தடையாக இருக்கின்றன. அதுதான் காரணம்.

  பலதரப்பட்ட ஆற்றல்களால் ஆனதுதான் கடவுள் என்றேன். கடவுளுக்குள் அந்த ஆற்றல்கள் பல அலைவரிசைகளாக இயங்கிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பிட்ட சில அலைவரிசைகள் சேர்ந்து ஒரு பரிமாணமாக கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி மொத்தம் 12 முழு பரிமாணங்கள் கடவுளுக்கு உள்ளே இருக்கின்றன. ஒவ்வொரு அலைவரிசைக்கும் ஒரு அதிர்வு வேகம் இருக்கிறது. முதலாவது முழு பரிமாணத்தில் 12 அலைவரிசைகள் இருக்கின்றன. இந்த 12 அலைவரிசைகள்தான் பருப்பொருள்களாக வெளிப்படுகின்றன. அதாவது முதலாவது முழு பரிமாணம் மட்டுமே பௌதீக உலகமாக வெளிப்படுகிறது. மற்ற 11 முழு பரிமாணங்களும் ஆற்றல்மய உலகங்களாக இருக்கின்றன.

  நாம் இப்பொழுது இருப்பது முதல் முழு பரிமாணத்தின் மூன்றாம் அலைவரிசை உலகம். அதாவது நம்முடைய உடல் உட்பட நாம் காணும் ஜடப்பொருள்கள் அனைத்தும் மூன்றாம் அலைவரிசையில் அதிர்ந்துகொண்டு இருக்கும் ஆற்றலால் ஆனவை. ஆகையால் அவற்றை நம்மால் காண, உணர, நுகர, கேட்க முடிகிறது. இதற்கு அதிகமான அல்லது குறைவான வேகத்தில் அதிரும் ஆற்றலால் ஆன ஜடப்பொருளை நம்மால் எந்த வகையிலும் அறிய முடியாது. நம்முடைய அதிர்வு வேகத்தை நாம் மாற்றினால் தவிர.

  அதனால்தான் கடவுளின் மூன்றாம் அலைவரிசையில் அதிரும் ஆற்றல்களைக்கொண்ட பொருள்களால் ஆன இந்த உலகத்தில் உள்ள, நம்மால் அறியக்கூடிய அனைத்தும் கடவுள் என்கிறேன். மற்ற அலைவரிசைகளில் அதிரும் கடவுளின் மற்ற ஆற்றல்களால் ஆன, நம்மால் இப்பொழுது அறிய முடியாத உலகங்களும் அவற்றில் உள்ள அனைத்தும் கடவுள் என்கிறேன்.

 18. நண்பர் செங்கொடி,

  பருப்பொருளில் உள்ள ஆற்றலுக்கு நிரூபணம் தேவை இல்லை என்கிறீர்கள். உங்கள் வாதப்படி, பருப்பொருள் வேறு, அதில் உள்ள ஆற்றல் வேறு என்றாகிறது. இது தவறு. உங்களின் புரிதலில் ஏற்படும் பிரச்சினையே இதுதான்.

  குறிப்பிட்ட குறைந்த வேகத்தில் அதிரும் ஆற்றல்தான் பருப்பொருள். அதிலும் அதிரும் வேகத்திற்கு ஏற்ப ஆற்றலானது வாயு நிலையிலோ, நீர்ம நிலையிலோ, திட நிலையிலோ இருக்கிறது. மூலாதார ஆற்றல்தான், அதாவது கடவுள்தான் மூன்றாம் அலைவரிசையில் நம்முடைய உடல் உட்பட அனைத்து பருப்பொருள்களாகவும் இருக்கிறது. 12 அலைவரிசைகள்வரை பல்வேறு பருப்பொருள்களாகவும்(physical objetcs) அதற்கு மேற்பட்ட அலைவரிசைகளில் ஆற்றல்மய பொருள்களாகவும்(spiritual objects) இருக்கிறது.

 19. நண்பர் செங்கொடி,

  பருப்பொருளாக வெளிப்படுகிற ஆற்றலும் மூலாதார ஜீவனின் ஆற்றலும் வேறு வேறு அல்ல. அவை ஒன்றே. மூலாதார ஜீவனின் ஆற்றல்தான் 12 அலைவரிசைகள் வரை, அதாவது முதலாம் முழு பரிமாணம் வரை பல்வேறு நிலையில் பருப்பொருள்களாக வெளிப்படுகிறது.

  நம் ஐம்புலன்களுக்கு தெரிய வரும் பொருள்கள் தனித்தனியானவை, அவை ஒன்றல்ல, அவை கடவுள் அல்ல என்கிறீர்கள். இது தவறு. வேண்டுமானால் குவாண்டம் அறிவியல் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். குவாண்டம் அறிவியல் கூறும் பல விஷயங்கள் ஆன்மீக விஷயங்களே. உதாரணத்திற்க்கு, பருப்பொருள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருக்க முடியும் என்று அது கூறுகிறது. இதை ஏற்கிறீர்களா, இல்லையா? இதை ஆன்மீகமும் கூறுகிறது. குவாண்டம் அறிவியலே இன்னும் வளராத அறிவியல்தான். உங்கள் அளவுகோளின்படி சானலிங் அறிவியல் இல்லை என்று கூறலாம். ஆனால் அது உங்களின் அளவுகோலுக்கும் மேம்பட்ட அறிவியல் மற்றும் கலை. அது கற்பிதம் அல்ல. விரும்பினால் அதை அனுபவித்து பாருங்கள். தியானத்தில் எந்த சிந்தனையும் இல்லாமல் 10 நிமிடங்கள் இருந்து பாருங்கள்(தொடர்ந்த பயிற்சிக்கு பிறகே இது சாத்தியப்படும்). பிறகு உங்களுக்கே அது தெரிய வரும்.

 20. நண்பர் செங்கொடி,

  என்னுடைய வாதம் மதவாதிகளின் வாதத்தைப்போலவே இருக்கிறது என்கிறீர்கள். மத நம்பிக்கையாளர்கள் கடவுள் வேறு படைப்பு வேறு, படைப்புகள் படைத்தவரை, அதாவது கடவுளை வணங்கவேண்டும் என்று அல்லவா கூறுகிறார்கள். நான் கூறுவது அதற்கு நேர்மாறானது என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? கடவுளும் படைப்புகளும் வெவ்வேறு அல்ல, படைப்புகளும் படைப்பாளரும் ஒன்றே என்றுதானே நான் கூறுகிறேன். இது மதங்கள் கூறுவதற்கு நேர்மாறானதுதானே. அப்படியிருக்க, நான் மத நம்பிக்கையாளர்களை போல பேசுகிறேன் என்று எதனால் கூறுகிறீர்கள்?

  வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அறிவியலை ஏற்றுக்கொள்ளும்போது கடவுள் விஷயத்தில் மட்டும் ஏன் அறிவியலை பயன்படுத்துவதில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் கடவுள் விஷயத்திலும் அறிவியலை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிறேன். தியானம், சானலிங் போன்ற ஆன்மீக செயல்முறைகள் அறிவியல் என்கிறேன். ஆனால் அது அறிவியல் என்று உங்களை போன்ற பொருள்முதல்வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அவ்வளவுதான்.

  மூலாதார ஆற்றலுக்கு நிரூபணம் வேண்டும் என்கிறீர்கள். அறிவியல் கூறும் ஆற்றல், மூலாதார ஆற்றல் என்று தனித்தனி ஆற்றல்கள் இல்லை. அறிவியல் கூறும் ஆற்றல்தான் மூலாதார ஆற்றல். மூலாதார ஆற்றல்தான் அறிவியல் கூறும் ஆற்றல். ஆற்றல்தான் கடவுள் என்கிறேன். ஆற்றல் வேறு கடவுள் வேறு அல்ல. இப்பொழுது கூறுங்கள். ஆற்றல் இருக்கிறது என்பதற்கு, அதாவது கடவுள் இருக்கிறது என்பதற்கு உங்களுக்கு நிரூபணம் தேவைப்படுகிறதா?

  ஆற்றல்தான் கடவுள் என்று நான் கூறுவதை ஏற்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்துங்கள்.

  உங்கள் வாதத்தை தொடருங்கள்.

 21. நண்பர் விவேக்,

  தவிர்க்க இயலாத வேலைகள் இருப்பதால், நாளை மறுதினம் என்னுடைய பதிலை வெளியிடுகிறேன். நன்றி

 22. @ விவேக் அத்வைதி…

  //மூலாதார ஜீவன் 1, மற்ற 11 மூலாதார ஜீவன்கள், அவைகள் படைத்துள்ள பிரபஞ்சங்கள் மற்றும் தோற்றுவாய் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள Guy Steven Needler என்பவரின் நூல்களை படித்து அறிந்து கொள்ளலாம். நான் அவரின் நூல்கள் மட்டுமல்லாமல் மற்ற பல நூல்களையும் படித்து தெரிந்து கொண்ட ஆன்மீக விஷயங்களை பேசப்போகிறேன்…//

  நீங்கள் எந்த எந்த நூல்களை படித்து தெறித்து கொள்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா. நிஜமாக தான் கேட்கிறேன். நூல்களின் பெயரை தாங்கள் குறிப்பிட்டால் நானும் அறிந்து பயன் அடைந்து கொள்வேன்..

 23. நண்பர் விவேக்,

  கடவுள் என்றால் என்ன? இதற்கு இதுவரை நீங்கள் அளித்திருக்கும் பதில்கள் போதாமையாக இருக்கின்றன. அதாவது, அவை வெறுமனே உங்களின் கூற்றுகளாக இருக்கின்றனவே அன்றி அறுதியானவைகளாக பொதுவில் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. ஏனென்றால் அவை ஆதாரமற்றவைகளாக, எவ்வாறு இயங்குகின்றன எனும் விளக்கமற்றவைகளாக இருக்கின்றன. ஆனால் இதை தெளிவாக விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களோ மீண்டும் மீண்டும் அதே வெறுங் கூற்றுகளையே பதிலாக தந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படியே பூமிக்கு அருகின் ஐந்தாவதோ அல்லது ஏழாவதோ அல்லது பதினொன்றாவதோ அலைவரிசையில் ஒரு கோள் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஒன்று அவ்வாறு ஒரு கோள் இருக்கிறது என நீரூபிக்க வேண்டும். அல்லது இருக்கும் அந்தக் கோள் ஏன் அறிவியல் கருவிகளில் தெரிய மறுக்கிறது என்பதை விளக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் அது பதினொன்றாம் அலைவரிசையில் இருப்பதால் தெரியவில்லை என்று மட்டும் சொன்னால் போதாது என்கிறேன். இது உங்களுக்கு புரிய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு வாதத்துக்காக இப்படி வைத்துக் கொள்வோம். பூமியைச் சுற்றி வட்டப் பாதையில் எட்டுக் கோள்கல் இருக்கின்றன. நூற்றுப் ப்தினெட்டாவது அலைவரிசையை உணர்பவர்களுக்கு மடும் தான் அது தெரியும் என்று விளக்கினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இதையும் மன்னன் அம்மணமாக ஊர்வலம் சென்ற கதையையும் இணைத்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கல் கூறிக் கொண்டிருப்பதன் அபத்தம் உங்களுக்கு புரியும் என எண்ணுகிறேன்.

  \\\எதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொது உண்மை என்று எதுவும் இல்லை. அவரவர் விழிப்புநிலை வளர்ச்சியை பொறுத்து உண்மை என்பது அவரவருக்கு மாறுபடும். நான் உண்மை என்று நினைப்பது உங்களுக்கு உண்மையாக இருக்காது. அதேபோல் உங்களுடைய உண்மை எனக்கு உண்மையாக இருக்காது/// இது அப்பட்டமான திரிபுவாதம் என நான் கருதுகிறேன். உண்மை வேறு கருத்து வேறு. என்னுடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேவையில்லை, உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேவையில்லை. ஆனால் உண்மையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அது உண்மை. உண்மையையும், கருத்தையும் குழப்பக் கூடாது. பகலில் பூமிக்கு ஒளி தருவது கதிரவன் என்பது உண்மை. உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை. நீங்கள் அதை நிலவு எனக் கருதினால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் அது உங்கள் கருத்து தானே தவிர உண்மை அல்ல. எனவே, கருத்து வேறு உண்மை வேறு இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள். நீங்கள் கூறும் அனைத்தும், அலைவரிசை, பரிணாமம், மூல ஆற்றல் உள்ளிட்ட அனைத்தும் உங்களின் கருத்து. உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நீரூபிப்பதற்காகத் தான் அதாவது எது உண்மை என கண்டுபிடிப்பதற்காகத்தான் நாம் இங்கே விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிரூபியுங்கள். உங்கல் கருதையே பொது உண்மை போல் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

  உலகில் உள்ள பருப் பொருளும், ஆற்றலும், நீங்கள் கூறும் மூல ஆற்றலும் ஒன்றல்ல. உலகின் பருப் பொருட்களும், ஆற்றலும் என நீங்கள் கூறும் மூல ஆற்றலினால் ஆக்கப்படவும் இல்லை. ஏனென்றால் மூல ஆற்றல் என்றால் என்னவென்றே தெரியாது. என்னவென்றே தெரியாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவதனால் இதை நீங்கள் அறியாமை எனக் கருதினால் அதில் எனக்கு மறுப்பு ஒன்றுமில்லை. ஏனென்றால் அது உங்கள் கருத்து தான் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் நான் கூறுவது நீங்கள் மறுக்க முடியாது ஏனென்றால் அது உண்மை. அது அறிவியல். எனவே, கருத்தையும் அறிவியலை நேரெதிரே நிருத்தாதீர்கள்.

  \\\உலகத்திற்கு அப்பாற்பட்ட யதார்த்தத்தில் இருக்கும் சில விஷயங்களை பற்றி கூறினேன். அதற்கு மூன்றாம் பரிமாண உலகத்தில் காணக்கூடிய நிரூபணத்தை கொடுங்கள் என்று கேட்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?/// இந்த மூன்றாம் பரிணாமம் நான்காம் பரிணாமம் என நீங்கள் கூறுவதெல்லாம் பொது உண்மைகளல்ல. ஒன்று நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும் அல்லது அவை எந்த அடிப்படையில் இயங்குகின்றன என விளக்க வேண்டும். எப்படி சாத்தியம் என என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது ஏனென்றால் சாத்தியமில்லாத விடயங்களைக் கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் தான் அதை சாத்தியப்படுத்த வேண்டும். அறிவியலால் சாத்தியப்படாத எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. நான் மட்டுமல்ல மனிதர்கள் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. கடவுளை நம்புவோர் கூட அதை அறிவியலால் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை ஏனென்றால் அது எங்கள் நம்பிக்கை என்று தான் கூறுவார்கள். மதவாதிகள் மட்டுமே எந்த அடிப்படையும் இல்லாமல் அதை உண்மை எனக் கூறுவார்கள். நீங்களும் அப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் உங்களை ‘மதவாதியைப் போல’ என விளிக்கும் நிலை ஏற்பட்டது.

  எந்த அடிப்படையில் உங்களை ‘மதவாதியைப் போல’ என்று கூறினேன்? உங்கள் வாதம் மதவாதிகளின் வாதத்தைப் போல இருக்கிறது என்பதின் பொருள் நீங்கள் மதவாதி என்பதாக இருக்க முடியாது அல்லவா? பேரண்டம் ஒன்று இருப்பதை ஏற்றுக் கொண்டால் அதைப் படைத்த ஆற்றலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பருப்பொருட்களின் ஆற்றலை ஏற்றுக் கொண்டால் மூல ஆற்றலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்வைக்கிறீர்களே, இதைத் தான் மதவாதிகளின் வாதம் என்கிறேன். நேரடியாகச் சொன்னால், கருத்தை பொது உண்மையாக மாற்றுவது, பொது உண்மையை கருத்தாக மாற்றுவது. இந்த முறை கூட அதே உத்தியை நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள்(மேலே சுட்டிக் காட்டியுள்ளேன்). இதைத்தான் மதவாதிகளை போல என குறிப்பிட்டிருந்தேன். தெளிவாக சான்றுகளுடன் முன்வைப்பதே சரியான வாதமுறை.

  ஆற்றல் தான் கடவுளா? குவாண்டம் அறிவியல் ஆன்மீக விசயங்களைப் பேசுகிறதா? இரண்டையும் நான் மறுக்கிறேன்.

  ஆற்றல் என கூறப்படுவது குறித்த விளக்கம் என்ன? ஒரு பருப்பொருள் என்றால் அதற்கு நீளம், அகலம், உயரம், காலம் என நான்கு பரிமாணங்கள் உண்டு. ஆற்றலுக்கும் இந்த பரிமாணங்கள் உண்டு. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆற்றல் என்பது மீச்சிறு அளவுகளிலானது. எல்லாப் பொருளுக்குள்ளும் ஆற்றல் உண்டு. இந்த மீச்சிறு அளவுகளிலான ஆற்றலை பொருளாகவும், பொருளை ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்பது சார்பியல் கோட்பாடு. ஆனால், பொருள் இல்லாத ஆற்றல் என்று எதுவுமில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் காலம் எனும் நான்காவது பரிமாணம் ஆற்றலுக்கு உண்டு. அதாவது, ஆற்றலுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. அந்த தொடக்கமும் முடிவும் அது சார்ந்திருக்கும் பொருளைச் சார்ந்தது. இவைதான் ஆற்றல் குறித்த வரையறைகள். நீங்கள் கூறும் மூல ஆற்றல் இந்த வரையரைக்குள் அடங்குபவையா? ஆம் என்றால் நிச்சயம் அது கடவுளாக இருக்க முடியாது. ஏனென்றால் கடவுள் என்பது அனைத்தையும் உருவாக்கியது. புவியில் காணக் கிடைக்கும் ஆற்றல்களில் அனைத்தையும் உருவாக்கும் தன்மையுள்ள ஆற்றல் என்று எதுவுமில்லை. இந்த வரையறைகளுக்குள் மூல ஆற்றல் அடங்காது என்றால்; முதலில், இங்கிருக்கும் ஆற்றலும், நீங்கள் கூறும் மூல ஆற்றலும் வேறு வேறு என்பது உறுதியாகி விடும். இரண்டாவது, மூல ஆற்றல் என்று நீங்கள் கூறும் ஒன்றுக்கான வரையறைகளை கூற வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும்.

  குவாண்டம் அறிவியல் ஆன்மீகத்துடன் தொடர்புடையது என சில மதவாதிகள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி என்றால் வாய்ப்புள்ளது என்ற சொல்லை இருக்கிறது எனும் பொருளில் பயன்படுத்தி ஒரு பொருள் மயக்கத்தை கொண்டுவந்து அந்த பொருள் மயக்கத்தை ஆன்மீகத்து இசைவுள்ளதாக காட்டிக் கொள்கிறார்கள். தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஆன்மீகம் என்பது கருத்துமுதல்வாதம். அறிவியல் என்பது பொருள் முதல்வாதம். இரண்டும் ஒன்றல்ல என்பதோடு மட்டுமல்லாமல் இரண்டும் ஒன்றுக் கொன்று எதிரானவையும் கூட.

  பருப் பொருட்களுக்கான அறிவியல் விதிகள், அந்தப் பொருட்கள் எளிய அளவுகளில் செல்லச் செல்ல அதாவது பருப் பொருளின் அளவு மிகச் சிறிய அளவுகளில் செல்லச் செல்ல மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஒரு பந்தை ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு வீசும் போது செயல்படும் அறிவியல் விதிக்கும், ஒரு மீச்சிறு அளவிலான துகளை வீசும் போது செயல்படும் அறிவியல் விதிக்கும் இடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மீச்சிறு அளவிலான விதிகளை விளக்கத் தான் குவாண்டம் எனும் அறிவியல் துறை உருவாக்கப்பட்டது. இதை எளிமையாக இப்படி குறிப்பிடுவார்கள், “பூட்டிய அறையில் உள்ள ஒரு எலி அறைக்கு வெளியிலும் இருக்க வாய்ப்பு இருந்தால் அதன் பெயர் குவாண்டம் அறிவியல்” இது போன்று கூறுவதெல்லாம் எளிமை கருதி கொடுக்கப்படும் விளக்கங்களே அன்றி அப்படியே உண்மையில்லை. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் தியரிக்கு விளக்கம் கொடுக்கிறார்களே அதைப் போல. ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பது தான் சரியானது. கவனிக்கவும். வாய்ப்பிருக்கிறது என்பது தான் உண்மையே அன்றி இருக்கிறது அல்லது இருக்க முடியும் என்பதல்ல.

  ஒரு எடுத்துக் காட்டின் மூலம் இதைப் பார்க்கலாம். ஒரு அறையில் அ, ஆ, இ, ஈ என நான்கு பேர் இருப்பதாக கொள்வோம். இதில் அ என்பவர் இ என்பவர் மீது ஒரு துளி பெட்ரோலை எடுத்து வீசுகிறார் என்றால் அந்த பெட்ரோல் துளி ஒரு நேரத்தில் இ என்பவர் மீது மட்டுமே படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பெட்ரோல் துளி என்பது ஒரு பொருள். அது ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே இருக்க முடியும். இது தான் பொருள் குறித்த அறிவியல் விதி. இப்போது அதே அ என்பவர் அதே பெட்ரோல் துளியை எரியவைத்து வீசுகிறார் என்று கொள்வோம். அதன் வெப்பம் ஒரே நேரத்தில் நால்வரையும் சென்று அடைகிறது. வெப்பம் என்பதும் ஒரு வகையில் பொருள் தான். இது எப்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்க முடியும்? இந்த இடத்தில் பொருள் குறித்த அறிவியல் விதி முரண்பாட்டுக்கு உள்ளாகிறது. பொருள் மீச்சிறு அளவுகளில் ஆற்றல்களாக வெளிப்படும் போது அது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்க முடியும். இதை இப்படி எளிதாக முடித்து விட முடியவில்லை. ஏனென்றால் இது வெப்ப ஆற்றல் எனும் போது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே இன்னும் நுணுக்கமாக பகுக்க முடியா துகள் ஒன்றை ஒரு வேகத்தில் செலுத்தினால் அது நேர் கோட்டில் தான் பயணம் செய்கிறதா என ஆராய்ந்தார்கள். இல்லை. நேர்கோட்டில் செல்லாமல் வாய்ப்புள்ள எல்லா திசைகளிலும் சென்று மறு முனையை அடைந்தது பதிவாகியது. சரி இது எப்படி வாய்ப்புள்ள எல்லா திசைகளிலும் பயணம் செய்கிறது என்று மீண்டும் அனுப்பி கண்காணித்து பார்த்த போது அது நேர் கோட்டில் சென்றது. குழப்பமாக இருக்கிறதா? ஒரு துகளை நீங்கள் அனுப்பி விட்டு அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது வாய்ப்புள்ள எல்லா திசைகளிலும் செல்கிறது. அவ்வாறு எல்லா திசைகளிலும் செல்கிறது என்பது பதிவாகிறது. ஆனால் அதன் பயணத்தை நீங்கள் கண்காணித்தால் அது நீங்கள் செலுத்திய ஒரு திசையில் மட்டுமே செல்கிறது. இதுவும் பதிவாகிறது. இது என்ன மாயம்? ஒரு மாயையும் இல்லை. நீங்கள் கண்காணிக்கும் போது அல்லது கண்காணிப்புக்கான ஏற்பாட்டின் போது அந்த துகளின் மீது ஃபோட்டான் எனும் துகள் வினை புரிகிறது. எனவே அது ஒரே பாதையில் செல்கிறது ஃபோட்டான் வினை புரியவில்லை என்றால் அதன் இயல்புப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் செல்கிறது. இது தான் குவாண்டம் அறிவியல் என்பது. இதன் முடிவு என்னவென்றால் ஒரு பொருள் அதாவது ஒரு துகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்றால் அவ்வாறு இருப்பதை கண்காணிக்க முடியவில்லை என்பதால். இதை தான் ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியும் என்பதாக பொருள் எடுத்துக் கொண்டு மதவாதிகள் குழப்புகிறார்கள். இதில் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு பருப்பொருள் அது மிகப்பெரிய அளவுகளில் இருக்கும் போதும், மிகச்சிறிய அளவுகளில் இருக்கும் போதும் ஒரே அறிவியல் விதி பொருந்த வேண்டும் எனும் தேவை இல்லை என்பது தான். இதற்கு மேல் இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை.

  இதில் ஆன்மீகம் எங்கிருந்து வந்தது? மூல ஆற்றல் 12 பரிமாணங்கள் போன்றவைகளுக்கு இதில் இடம் இருக்கிறதா? இப்போது நீங்கள் கூறும் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம். குவாண்டம் அறிவியலில் துகளின் பாதையை கண்காணிக்க முடியவில்லை என்றாலும் அது ஒன்றுக்கும் மேற்பட்ட பாதை வழியாக பயணித்திருக்கக் கூடும் என்பதற்கு பதிவுகள் சான்றாக இருக்கின்றன. இப்போது பூமிக்கு அருகில் ஐந்தாம் பரிமாணத்தில் ஒரு கோள் இருக்கிறது. ஆனால் அது நமக்கு தெரிவதில்லை என்று கூறுகிறீர்கள். புவியில் இருக்கும் குழந்தைப் பருவ அறிவியலைக் கொண்டு அந்தக் கோளின் இருப்பை சோதித்தறிய முடியவில்லை என்றே கொள்வோம். ஆனாலும் அந்தக் கோள் இருக்கிறதல்லவா? இப்போது அதன் வழியே ஒரு பருப்பொருளை அல்லது ஒரு ஆற்றலை அதாவது ஒழியை அனுப்புகிறோம் என்று கொள்வோம். என்ன நடக்கும்? ஒளி அப்படியே ஊடுருவிச் சென்று விடுமா? அனுப்பப்படும் பருப் பொருளை தன் மீது மோதாமல் கடந்து செல்ல அந்தக் கோள் அனுமதிக்குமா? அந்தக் கோள் அங்கு இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஒரு விளைவு இருந்தாக வேண்டுமல்லவா? நிலவு இருப்பதனால் கடல்கள் ஆர்ப்பரிக்கின்றன என்பது போல் அந்தக் கோளின் இருப்பினால் ஏதாவது ஒரு விளைவு இருக்க வேண்டுமல்லவா? அப்படி ஏதாவது ஒரு விளைவு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இப்படி எதுவுமே இல்லை என்றால் அப்படி ஒரு கோள் அங்கு இருக்கிறது என்று ஏற்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? எந்த விளைவையுமே உண்டாக்காத ஒரு பொருளை இருக்கிறது என்று சொல்வதை விட இல்லை என்று சொல்வது தானே பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்?

  எனவே தான் மீண்டும் மீண்டும் உங்களைக் கேட்கிறேன். பொது உண்மைக்கு எதிரானதாக இருக்கும் நீங்கள் கூறும் அனைத்துக்கும் சான்று கூறி நிரூபியுங்கள். வெறுமனே மூல ஆற்றல், 12 பரிமாணங்கள், குழந்தப் பருவ அறிவியல் என்று கூறிச் செல்வது மட்டும் போதாது.

  வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் அறிவியலைப் பயன்படுத்தும் நீங்கள் கடவுள் என்று வரும் போது மட்டும் ஏன் அறிவியலை விலக்கி வைத்து விட்டு வேறொன்றை அடிப்படையாக கொள்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன். நீங்களோ அதுவும் அறிவியல் தான் என பதில் கூறி இருக்கிறீர்கள். இங்கு இரண்டு அறிவியல் இருப்பதாக நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒன்று குழந்தப் பருவ அறிவியல் மற்றது முதிர்ந்த அறிவியல். ஆனால் அறிவியல் மட்டுமே பொது உண்மை முதிர்ந்த அற்வியல் அல்லது ஆன்மீக அறிவியல் என்பது ஒரு கருத்து என்பது யதார்த்தம். ஆன்மீக அறிவியலும் பொது உண்மை தான் என கருதிக் கொள்ளும் ஆன்மீகவாதிகள் உட்பட அனைவரும் தங்கல் வாழ்வின் அனைத்துக்கும் அறிவியலைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆன்மீக அறிவியலை அல்ல. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் வாழ்வின் அனைத்துக்கும் அறிவியலைப் பயன்படுத்தும் ஆன்மீகவாதிகள் அதாவது உங்களைப் போன்றோர் கடவுள் என்று வந்து விட்டால் மட்டும் அறிவியலை விட்டு விட்டு ஆன்மீக அறிவியலுக்கு தாவி விடுகிறீர்களே ஏன்? என்பது தான். ஆனால் நீங்களோ ஆன்மீகமும் அறிவியல் தான் என்று பதில் கூறியிருக்கிறீர்கள். அண்மையில் கரகாட்டக்காரன் படம் பார்த்திருந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இது குறித்தும் உங்களிடமிருந்து தெளிவான பதிலை எதிர் நோக்குகிறேன்.

  இனி உங்கள் பதில் கண்டு .. .. ..

 24. @சித்தார்த்,

  சானலிங் மூலம் பெறப்பட்ட நிறைய நூல்கள் உள்ளன. முக்கியமாக Guy Steven Needler மற்றும் Neale Donald Walch ஆகிய இருவர் கடவுளிடம் கேள்வி பதில் முறையில் உரையாடிய நூல்களை படியுங்கள். அவை :

  Guy Steven Needler நூல்கள் :

  1.The History of God
  2. Communications with the Co-creators – 1
  3. Communications with the Co-creators – 2
  4. The Origin Speaks
  5. The Anne Dialogues

  Neale Donald Walch நூல்கள் :

  1. Conversations with God-Book 1
  2. Conversations with God-Book 2
  3. Conversations with God-Book 3
  4. Conversations with God-Book 4
  5. Communion with God
  6. Friendship with God
  7. Home with God
  8. The New Revelations
  9. Tomorrow’s God

 25. நண்பர் செங்கொடி,

  நீங்களும் என்னை போலவே பின்னூட்டல் முறையில் ஒவ்வொரு விஷயத்தை பற்றி தனித்தனியாக விளக்கினால் நம் கருத்து பரிமாற்றத்தை படிப்பவருக்கு புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு தனித்தனியாக பதில் அளிக்கிறேன். அதே முறையை நீங்களும் பின்பற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 26. செங்கொடி : கடவுள் என்றால் என்ன? இதற்கு இதுவரை நீங்கள் அளித்திருக்கும் பதில்கள் போதாமையாக இருக்கின்றன. அதாவது, அவை வெறுமனே உங்களின் கூற்றுகளாக இருக்கின்றனவே அன்றி அறுதியானவைகளாக பொதுவில் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. ஏனென்றால் அவை ஆதாரமற்றவைகளாக, எவ்வாறு இயங்குகின்றன எனும் விளக்கமற்றவைகளாக இருக்கின்றன. ஆனால் இதை தெளிவாக விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களோ மீண்டும் மீண்டும் அதே வெறுங் கூற்றுகளையே பதிலாக தந்து கொண்டிருக்கிறீர்கள்.

  தன்னை பற்றிய விழிப்புணர்வும் உணர்வும் கொண்ட பல வகை ஆற்றல்களின் தொகுப்பே கடவுள்.

  இதற்கு பொதுவில் ஏற்றுக்கொள்ளும் ஆதாரம் வேண்டும் என்கிறீர்கள். கடவுளின் மிக சிறிய பகுதி, அதாவது 1 % தான் பௌதீக உலகமாக வெளியே துருத்திக்கொண்டு இருக்கிறது. மீதி பெரும் பகுதி ஆற்றல்மய உலகமாக இருக்கிறது. நம் பௌதீக புலன்களால் அறியக்கூடிய பௌதீக உலகமும் கடவுளின் இருப்புக்கு ஆதாரம்தான். இதை ஆதாரமாக ஏற்பதும், இல்லை அது வெற்று கூற்று என்று நிராகரிப்பதும் அவரவர் வளர்ச்சி நிலையை ஒட்டி அவரவர் எடுக்கும் முடிவே.

  இதற்கு மேலும் நீங்கள் ஆதாரம் வேண்டும் என்று கேட்பதிலோ அதற்கு நான் இதே பதிலை திரும்ப திரும்ப தருவதிலோ எந்த பயனும் இல்லை.

  எது ஆதாரம் என்று கூறிவிட்டேன். திரும்பவும் பொதுவில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் கடவுளை பற்றிய மற்ற கேள்விகளை கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

 27. செங்கொடி : உங்கள் கூற்றுப்படியே பூமிக்கு அருகின் ஐந்தாவதோ அல்லது ஏழாவதோ அல்லது பதினொன்றாவதோ அலைவரிசையில் ஒரு கோள் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஒன்று அவ்வாறு ஒரு கோள் இருக்கிறது என நீரூபிக்க வேண்டும். அல்லது இருக்கும் அந்தக் கோள் ஏன் அறிவியல் கருவிகளில் தெரிய மறுக்கிறது என்பதை விளக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் அது பதினொன்றாம் அலைவரிசையில் இருப்பதால் தெரியவில்லை என்று மட்டும் சொன்னால் போதாது என்கிறேன். இது உங்களுக்கு புரிய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு வாதத்துக்காக இப்படி வைத்துக் கொள்வோம். பூமியைச் சுற்றி வட்டப் பாதையில் எட்டுக் கோள்கல் இருக்கின்றன. நூற்றுப் ப்தினெட்டாவது அலைவரிசையை உணர்பவர்களுக்கு மடும் தான் அது தெரியும் என்று விளக்கினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

  முதல் முழு பரிமாணம் 12 அலைவரிசைகளைக்கொண்டது. இந்த 12 அலைவரிசைகள் வரைக்கும்தான் பௌதீக உலகம். அதற்குமேல் உள்ள அலைவரிசைகள் ஆற்றல்மய உலகம்.
  அலைவரிசை என்று நான் கூறுவது ஆற்றல் அதிரும் வேகம்.

  நாம் எந்த அலைவரிசையில் இருக்கிறோமோ அந்த அலைவரிசையில் இருக்கும் பொருளைத்தான் நம் புலன்களாலோ அந்த அலைவரிசையைக்கொண்டு செய்யப்பட்ட கருவிகளாலோ கண்டுபிடிக்க முடியும். ஒரு அலைவரிசையில் இருந்துகொண்டு மற்றொரு அலைவரிசையில் இருக்கும் பொருளை கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் அதை காணவோ உணரவோ விரும்பினால் நீங்கள் அந்த அலைவரிசைக்குத்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் அது அது சாத்தியமில்லை. இதை நான் தெளிவாக ஏற்கெனவே கூறியும் நீங்கள் மூன்றாம் அலைவரிசையில் இருந்துகொண்டு மற்ற அலைவரிசையில் இருக்கும் பொருளுக்கு ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

  நான் கூறுவது எதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எனக்கு தெரிந்ததை, உண்மை என்று ஏற்றுக்கொள்வதை சொல்கிறேன். அது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

 28. நண்பர் விவேக்,

  உங்கள் பரிந்துரைப்படியே தனித்தனி பின்னூட்டமாக எடுத்துக் கொண்டு பதிலளிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் உடனுக்குடன் பதில் எனும் முறையில் இல்லாமல் வழக்கம் போல் உங்கள் பதில் பின்னூட்டங்கள் முழுதும் முடிந்தபின் நான் தொடங்கி தனிதனியாக பதிலளிக்கிறேன். சரி தானே.

 29. நண்பர் செங்கொடி,

  சரி, இதுதான் வசதியாக இருக்கும். இந்த முறையிலேயே நம் கருத்துக்களை பகிர்ந்துகொள்வோம்.

 30. செங்கொடி : இது அப்பட்டமான திரிபுவாதம் என நான் கருதுகிறேன். உண்மை வேறு கருத்து வேறு. என்னுடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேவையில்லை, உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேவையில்லை. ஆனால் உண்மையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அது உண்மை. உண்மையையும், கருத்தையும் குழப்பக் கூடாது. பகலில் பூமிக்கு ஒளி தருவது கதிரவன் என்பது உண்மை. உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை. நீங்கள் அதை நிலவு எனக் கருதினால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் அது உங்கள் கருத்து தானே தவிர உண்மை அல்ல. எனவே, கருத்து வேறு உண்மை வேறு இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்.

  முற்றுமுதல் உண்மை என்று எதுவும் இல்லை(absolute truth); என்னுடைய உண்மை உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். இதை திரிபுவாதம் என்கிறீர்கள். நம்முடைய பார்வையை(perception) பொருத்து நம்முடைய உண்மை மாறுபடும். ஒரு விஷயத்தையோ அல்லது பொருளையோ நான் எப்படி பார்க்கிறோனோ அதுதான் உண்மை என்று எனக்கு தோன்றும். அதுவே என்னை பொறுத்தவரை உண்மையாக இருக்கும். அதே விஷயத்தையோ அல்லது பொருளையோ நீங்கள் வேறு மாதிரி பார்க்கலாம். அதுவே உங்களுக்கு உண்மையாக தோன்றும். அதுவே உங்களின் உண்மையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு இளம் பெண்ணை நாம் இருவரும் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பெண் என்னை பொறுத்தவரை பேரழகியாக தோன்றுகிறாள். ஆனால் அதே பெண்ணை சுமாரான அழகுடைய பெண்ணாக நீங்கள் பார்க்கலாம். இங்கே இரண்டுமே உண்மைதான். அவரவர் பார்வை அவரவருக்கு உண்மைதான். ஆனால் நம் இரண்டு உண்மைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. என்னுடைய உண்மை உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் எப்படி பார்க்கிறோமோ அதற்கேற்ற நம்முடைய உண்மையை நாம் படைக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த உண்மையை படைக்கிறோம். நம்முடைய பார்வையை பொறுத்தே அனைத்தும் அமைகிறது.

 31. செங்கொடி : நீங்கள் கூறும் அனைத்தும், அலைவரிசை, பரிணாமம், மூல ஆற்றல் உள்ளிட்ட அனைத்தும் உங்களின் கருத்து. உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நீரூபிப்பதற்காகத் தான் அதாவது எது உண்மை என கண்டுபிடிப்பதற்காகத்தான் நாம் இங்கே விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிரூபியுங்கள். உங்கல் கருதையே பொது உண்மை போல் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

  கருத்து வேறு உண்மை வேறு அல்ல. ஒன்றை பற்றிய என்னுடைய கருத்துதான் என்னுடைய உண்மை. என்னுடைய உண்மையை மற்றவர் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய உண்மை எவருக்கு உண்மை என்று தோன்றுகிறதோ அவரும் அதை உண்மை என்று ஏற்பார். அது அவருக்கு உண்மை என்று தோன்றாவிட்டால் அதை அவர் மறுப்பார். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

  அறிவியல் கூறும் ஆற்றலும் மூலாதார ஆற்றலும் வெவ்வேறு அல்ல; அவை ஒன்றே என்று நான் ஏற்கெனவே கூறினேன். இருப்பினும் அவை இரண்டும் வெவ்வேறு என்பதாக காட்ட முயலுகிறீர்கள்.

  அலைவரிசை, பரிணாமம், ஆற்றல்(மூலாதார ஆற்றல்) என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறீர்கள். அப்படியென்றால் அவை இல்லை என்கிறீர்களா? கம்யூனிஸ்ட்கள் டார்வினின் பரிணாமக்கொள்கையை ஏற்பவர்கள்தானே? நீங்கள் பரிணாமம் இல்லை என்று கூறுகிற கம்யூனிஸ்ட்டா?

  இருப்பது அனைத்தும் ஆற்றல்தான். அதன் அதிர்வு வேகத்திற்கு ஏற்ப அது பௌதீக பொருளாகவும் வெளியே தெரிகிறது; பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் இருக்கிறது. ஆற்றலின் ஒரு குறிப்பிட்ட அதிர்வு வேகம்தான் ஒரு குறிப்பிட்ட அலைவரிசை. அலைவரிசை என்பதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள். ஆற்றல் அதிர்கிறது என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்கிறீர்களா? ஆற்றல் அதிர்கிறது என்று அறிவியல் கூறவில்லை என்கிறீர்களா?

 32. நண்பர் விவேக்,

  உங்களுடைய வாதம் முடிந்து விட்டதா? இல்லையா? என்னுடைய வாதத்தை வைத்து இன்றுடன் பத்து நாட்கள் ஆகின்றன.எதிர்தரப்பின் வாதத்துக்கு நான்கு நாட்களுக்குள் பதிலளித்து விட வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். விரைந்து உங்கள் பதில் வாதுரைகளை முடித்து இந்த விவாதம் சீராக நடைபெற உதவவும்.

  நன்றி.

 33. நண்பர் செங்கொடி,

  சொந்த வேலையின் காரணமாக சில நாட்கள் வெளியூர் சென்றதால் என்னுடைய பதில்களை நிறைவு செய்ய முடியவில்லை. இனி தொடர்கிறேன். என்னுடைய பதில் பின்னூட்டங்கள் முடிந்தவுடன் கடைசி பின்னூட்டத்தில் நீங்கள் தொடருங்கள் என்று குறிப்பு எழுதுகிறேன். அதன் பிறகு உங்கள் வாதத்தை தொடரலாம். நன்றி.

 34. செங்கொடி :உலகில் உள்ள பருப் பொருளும், ஆற்றலும், நீங்கள் கூறும் மூல ஆற்றலும் ஒன்றல்ல. உலகின் பருப் பொருட்களும், ஆற்றலும் என நீங்கள் கூறும் மூல ஆற்றலினால் ஆக்கப்படவும் இல்லை. ஏனென்றால் மூல ஆற்றல் என்றால் என்னவென்றே தெரியாது. என்னவென்றே தெரியாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை.

  மூலாதாரம்(Source) என்று நான் குறிப்பிடுவது பலவிதமான தரமுடைய ஆற்றல்களின் கூட்டு. இந்த ஆற்றல்களின் கூட்டைதான் மூலாதார ஆற்றல் என்கிறேன். இந்த ஆற்றல்களின் கூட்டுத்தான்(a collective of energies) கடவுள். அறிவியல் கூறும்/ இதுவரை கண்டுபிடித்திருக்கும் ஆற்றல்(கள்) இதில் அடக்கம். இன்னொரு வகையில் கூறுவதென்றால் ஒரே ஆற்றலை நான் மூலாதார ஆற்றல்(source energy) என்கிறேன். நீங்கள் அறிவியல் கூறும் ஆற்றல் என்கிறீர்கள். அவ்வளவுதான். ஆற்றலுக்கு மூலம்(source) இருக்கிறது. எல்லா ஆற்றல்களும் மூலத்திற்குள் அடக்கம். அதனால் மூலாதார ஆற்றல் என்கிறேன். ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒரு மூலம் இருக்கிறது என்பதை அறிவியல் மறுக்கிறது என்கிறீர்களா?

 35. செங்கொடி : ஒன்று நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும் அல்லது அவை எந்த அடிப்படையில் இயங்குகின்றன என விளக்க வேண்டும். எப்படி சாத்தியம் என என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது ஏனென்றால் சாத்தியமில்லாத விடயங்களைக் கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் தான் அதை சாத்தியப்படுத்த வேண்டும்.

  12 அலைவரிசைகள்வரை ஆற்றலானது பௌதீக பொருளாக வெளிப்படுகிறது என்றேன். நாம் இருக்கும் மூன்றாம் அலைவரிசையில் நாம் காணும் எல்லா பொருள்களும் ஆற்றலின் ஒரு வடிவம்தான். அவை அனைத்தும் ஆற்றல்தான். ஆற்றல் பொருளாக மாறும்; பொருள் ஆற்றலாக மாறும் என்பது இயற்பியல் கூறும் உண்மை. ஆற்றல்தான் கடவுள். எனவே பொருள்கள் அனைத்தும் கடவுளே. ஆற்றல்தான் பொருளாக வெளிப்படுகிறது என்பதற்கு நிரூபணம் வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் அடிப்படை அறிவியலே தெரியாமல் இருக்கிறீர்கள் என்றாகும். ஆற்றல் எப்படி இயங்குகிறது என்பதை நான் நிரூபிக்க வேண்டும் என்கிறீர்களா? கடவுள் என்றால் என்ன என்பதை பற்றித்தான் நாம் விவாதிக்கிறோம். கடவுள் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி அல்ல. ஆற்றல் எவ்வாறு இயங்குகிறது என்பதை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சி கூடத்தில் செய்முறை விளக்கம் தந்து நிரூபிக்க வேண்டும் என்று கோருவது நம் விவாத பொருளுக்கு சம்பந்தமற்றது.
  கடவுள் என்றால் எது என்று கூறுவதற்கு அது எப்படி இயங்குகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதிர்வு வேகத்திற்கு ஏற்ப ஆற்றலானது பல வடிவங்களை பெறுகிறது. உதாரணத்திற்கு, பனிக்கட்டி, தண்ணீர், நீராவி என்று பல வடிவங்களை ஒரே ஆற்றல் அதன் பல அதிர்வு வேகத்திற்கு ஏற்ப பெறுகிறது. அதேமாதிரிதான் ஆற்றலானது ஒவ்வொரு அதிர்வு வேகத்திற்கு ஏற்ப தனித்தனி பொருளாக வடிவம் பெறுகிறது. இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்?

 36. @ விவேக் அத்வைதி

  //மூலாதாரம்(Source) என்று நான் குறிப்பிடுவது பலவிதமான தரமுடைய ஆற்றல்களின் கூட்டு. இந்த ஆற்றல்களின் கூட்டைதான் மூலாதார ஆற்றல் என்கிறேன். இந்த ஆற்றல்களின் கூட்டுத்தான்(a collective of energies) கடவுள். அறிவியல் கூறும்/ இதுவரை கண்டுபிடித்திருக்கும் ஆற்றல்(கள்) இதில் அடக்கம். இன்னொரு வகையில் கூறுவதென்றால் ஒரே ஆற்றலை நான் மூலாதார ஆற்றல்(source energy) என்கிறேன். நீங்கள் அறிவியல் கூறும் ஆற்றல் என்கிறீர்கள். அவ்வளவுதான். ஆற்றலுக்கு மூலம்(source) இருக்கிறது. எல்லா ஆற்றல்களும் மூலத்திற்குள் அடக்கம். அதனால் மூலாதார ஆற்றல் என்கிறேன். ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒரு மூலம் இருக்கிறது என்பதை அறிவியல் மறுக்கிறது என்கிறீர்களா?//

  உங்கள் பேச்சிலேயே முரண்பாடு இருக்கிறதே அத்வைதி, எல்லா ஆற்றல்களும் மூலத்திற்குள் அடக்கம் என்கிறீர்கள் சரி, ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒரு மூலம் தேவை என்கிறபோது, நீங்கள் குறிப்பிடும் கடவுள் ஆற்றல் என்பது எங்கிருந்து வந்தது, அதற்க்கு எது மூலம்? இல்லை, கடவுள் ஆற்றல் என்பது எந்த மூலமும் இல்லாத சுத்த சுயம்புவாக இருப்பதா? அப்படி ஒன்று இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை, அது சுயம்புவானது என்றால் அதற்க்கு தகுந்த சான்றுகள் அளிக்கவும்.

  //கருத்து வேறு உண்மை வேறு அல்ல. ஒன்றை பற்றிய என்னுடைய கருத்துதான் என்னுடைய உண்மை. என்னுடைய உண்மையை மற்றவர் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய உண்மை எவருக்கு உண்மை என்று தோன்றுகிறதோ அவரும் அதை உண்மை என்று ஏற்பார். அது அவருக்கு உண்மை என்று தோன்றாவிட்டால் அதை அவர் மறுப்பார். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.//

  இதனை தோழர் செங்கொடி மிகவும் தெளிவாக விளக்கிய பின்னும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்வது சரியாக படவில்லை. உண்மை அல்லது சத்யம் எப்படி உங்களுக்கு ஒன்றாகவும் எனக்கு ஒன்றாகவும் இருக்க முடியும், இப்போது வெளியே மே மாதம், நடு மத்தியம் சூரியன் 110 டிகிரி காய்கிறது என்று கூறினால், பகல் என்று தான் அர்த்தம், இல்லை இரவு என்று நீங்கள் கூறுகிறீர்கள், என் மனதுக்கு அப்படி தான் படுகிறது என்று கூறினால், இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நெருப்பு சுடும் என்பது தான் உண்மை, நீங்கள் எனக்கு எது உண்மை என்று படுகிறதோ அதனை தான் ஏற்பேன் என்று கூறி “நெருப்பு குளுமையாக இருக்கிறது” என்று கூறினால் அதனை ஏற்க முடியுமா. இல்லை ஏற்றே தான் ஆக வேண்டுமென்றால் அதனை நீங்கள் தான் அதனை நிரூபித்து காட்ட வேண்டும். இதனை போன்று தான் தாங்கள் கூறும் கடவுள் ஆற்றல், மூல ஆற்றல் போன்ற வாதங்களும். வெறும் வாய்பந்தல் போடாமல் நிரூபிக்கவும்.

 37. //அறிவியலால் சாத்தியப்படாத எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. நான் மட்டுமல்ல மனிதர்கள் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. கடவுளை நம்புவோர் கூட அதை அறிவியலால் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை ஏனென்றால் அது எங்கள் நம்பிக்கை என்று தான் கூறுவார்கள். மதவாதிகள் மட்டுமே எந்த அடிப்படையும் இல்லாமல் அதை உண்மை எனக் கூறுவார்கள். நீங்களும் அப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் உங்களை ‘மதவாதியைப் போல’ என விளிக்கும் நிலை ஏற்பட்டது.//

  அறிவியல் என்பது என்றுமே முழுமை அடையாத ஒன்று. மனித இனம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தாலும் 12 அலைவரிசைகள் அடங்கிய முதல் முழு பரிமாணத்தின், அதாவது பௌதீக பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே ஆராய முடியும். இப்படி இருக்க, இப்போதைய பௌதீக அறிவியலில் அறிய முடியவில்லை என்பதால் ஆன்மிகம் மூலம் அறிந்த உண்மைகளை மறுப்பேன் என்பது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக தோன்றலாம். என்னை பொறுத்தவரை அது அறிவுக்கு ஏற்புடையது அல்ல.

  கடவுளை நம்புவோர் மட்டுமல்ல, நீங்கள் கூறும் மதவாதிகளும் அவர்கள் உண்மை என்று நம்புவதை அறிவியல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் கூறுவார்கள். கடவுளை நம்புவோருக்கும் மதவாதிகளுக்கும் என்ன பாரிய வேறுபாடு உள்ளது என்று கூறவும்.

  வெறும் கடவுள் நம்பிக்கை மட்டும் உள்ளோரும் மதவாதிகளும் மட்டும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவர்களல்ல. கடவுள் இருப்பை மறுப்போரும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவர்களே. தனியாக கடவுள் என்ற ஒன்று பௌதீக புலன்களுக்கு புலனாகாவிட்டாலும் கடவுள் இருக்கிறார் என்பது எப்படி ஒரு நம்பிக்கையோ அதேபோல்தான் அதே காரணத்திற்காக கடவுள் இல்லை என்று நினைப்பதும் ஒரு நம்பிக்கையே. ஆத்திகமும் நாத்திகமும் வெவ்வேறு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவைதான். பல விதிகளுக்கு உட்பட்டு பிரபஞ்சம் சீராக இயங்குவதால் மேலான அறிவு உடைய சக்தி இருக்க முடியும் என்று நம்புவது அறிவுக்கு ஏற்புடையதுதான். ஆனால் இதை எல்லாம் அவதானித்து பார்த்த பிறகும் அறிவுக்கூர்மை உடைய சக்தி இல்லை என்று கூறுவது குருட்டு பிடிவாதம் என்றே தோன்றுகிறது.

  கடவுள் உண்டு என்பவர்களும், கடவுள் இல்லை என்பவர்களும் நம்பிக்கையாளர்களே. இரண்டு பிரிவினரின் கொள்கைக்கும் அவரவர் நம்பிக்கையே அடிப்படை. கடவுள் உண்டு என்பது மத நம்பிக்கை என்றால் கடவுள் இல்லை என்பதும் மத நம்பிக்கையே. ஆத்திகம் என்பது மதம் என்றால் நாத்திகமும் மதம்தான். அந்த வகையில் நாத்திகம் பேசும் நீங்களும் மதவாதிதான்(!).

 38. // எந்த அடிப்படையில் உங்களை ‘மதவாதியைப் போல’ என்று கூறினேன்? உங்கள் வாதம் மதவாதிகளின் வாதத்தைப் போல இருக்கிறது என்பதின் பொருள் நீங்கள் மதவாதி என்பதாக இருக்க முடியாது அல்லவா? பேரண்டம் ஒன்று இருப்பதை ஏற்றுக் கொண்டால் அதைப் படைத்த ஆற்றலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பருப்பொருட்களின் ஆற்றலை ஏற்றுக் கொண்டால் மூல ஆற்றலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்வைக்கிறீர்களே, இதைத் தான் மதவாதிகளின் வாதம் என்கிறேன். நேரடியாகச் சொன்னால், கருத்தை பொது உண்மையாக மாற்றுவது, பொது உண்மையை கருத்தாக மாற்றுவது. இந்த முறை கூட அதே உத்தியை நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள்(மேலே சுட்டிக் காட்டியுள்ளேன்). இதைத்தான் மதவாதிகளை போல என குறிப்பிட்டிருந்தேன். தெளிவாக சான்றுகளுடன் முன்வைப்பதே சரியான வாதமுறை.//

  உங்கள் அளவுகோளின்படி பார்த்தால், உங்களின் வாதமும் மதவாதிகளின் வாதத்தைபோல்தான் உள்ளது. பேரண்டம் இருப்பதால் அதை படைத்தவர்
  இருக்க வேண்டும் என்று நம்புவது மதவாதம் என்றால், பேரண்டம் இருந்தாலும் அதை படைத்தவர் என்று எவரும் இருக்க முடியாது என்று நம்புவதும் ஒருவித மதவாதம்தான்.

  பொது உண்மை என்று எதுவும் இல்லை என்று நான் ஏற்கெனவே கூறினேன். பல பேருடைய ஒத்த கருத்தைத்தான் நீங்கள் பொது உண்மை என்கிறீர்கள். எப்படி என்னுடைய கருத்து பொது கருத்துக்கு(பல பேருடைய ஒத்த கருத்து) மாறுபட முடியுமோ அதேபோல் என்னுடைய உண்மையும் பொது உண்மைக்கு(பல பேருடைய உண்மை) மாறுபட முடியும்.

  கடவுள் இருக்கிறது என்பதற்கு தெளிவான சான்று கேட்கிறீர்கள். கடவுள் இல்லை என்பதற்கு தங்களால் சான்று தர முடியுமா? உங்கள் புலன்களுக்கு தெரியவில்லை என்பது சான்று ஆகாது. தெளிவான சான்று வேண்டும்!

 39. //ஆற்றல் தான் கடவுளா? குவாண்டம் அறிவியல் ஆன்மீக விசயங்களைப் பேசுகிறதா? இரண்டையும் நான் மறுக்கிறேன்.//

  மறுப்பது உங்கள் உரிமை. நீங்கள் எதை வேண்டுமானாலும் மறுக்கலாம். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு என்று நினைப்பதே அறியாமை. அறியாமையில் இருந்துகொண்டு உண்மைகளை மறுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உண்மையான ஆன்மிகம் எது என்பதே உங்களுக்கு தெரியவில்லை. மத கருத்துக்களை ஆன்மிகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

 40. //ஆற்றல் என கூறப்படுவது குறித்த விளக்கம் என்ன? ஒரு பருப்பொருள் என்றால் அதற்கு நீளம், அகலம், உயரம், காலம் என நான்கு பரிமாணங்கள் உண்டு. ஆற்றலுக்கும் இந்த பரிமாணங்கள் உண்டு. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆற்றல் என்பது மீச்சிறு அளவுகளிலானது. எல்லாப் பொருளுக்குள்ளும் ஆற்றல் உண்டு. இந்த மீச்சிறு அளவுகளிலான ஆற்றலை பொருளாகவும், பொருளை ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்பது சார்பியல் கோட்பாடு. ஆனால், பொருள் இல்லாத ஆற்றல் என்று எதுவுமில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் காலம் எனும் நான்காவது பரிமாணம் ஆற்றலுக்கு உண்டு. அதாவது, ஆற்றலுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. அந்த தொடக்கமும் முடிவும் அது சார்ந்திருக்கும் பொருளைச் சார்ந்தது. இவைதான் ஆற்றல் குறித்த வரையறைகள். //

  மூன்றாம் அலைவரிசை பௌதீகத்தில்தான்(third frequencial physicality) பருப்பொருளுக்கு நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்கள் இருக்கும். வேறு அலைவரிசையை கொண்ட பௌதீகத்தில் அதில் உள்ள பருப்பொருளுக்கு வேறு பரிமாணங்களும் இருக்க கூடும். காலம் என்பதை நான்காவது பரிமாணம் என்கிறார்கள். உண்மையில் அப்படி ஒரு பரிமாணம் இல்லை. காலம் என்ற ஒன்று கிடையாது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூறுவித காலங்கள் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் நாம் உருவாக்கிக்கொண்ட மாயை. காலம் என்பது நம் மூளையில்தான் உள்ளது. அதாவது நம்முடைய கற்பனையில்தான் உள்ளது. இப்பொழுது(Now) என்பது மட்டுமே இருக்கிறது. எது நடந்தாலும் அது இப்பொழுதுதான் நடக்கிறது. ஆகையால் இப்பொழுது என்பது மட்டுமே காலம். அதாவது நிகழ்காலம் மட்டுமே உள்ளது. எப்பொழுதும் நிகழ்காலம் என்பதால் கடந்த காலம், எதிர்காலம் என்பது கிடையாது.

  கடந்த காலமாகவும் எதிர்காலமாகவும் பார்ப்பது நம்முடைய மாயை. நடக்கும் சம்பவங்களை வரிசைப்படுத்தி அதன் அடிப்படையில் வரிசைப்படியான காலம்(Linear time) என்று கணிப்பது ஒரு மாயை. வரிசைப்படியான காலம் என்பது கிடையாது. காலம் என்பது ஒரே நேரத்தில் இருப்பது(Time is simultaneous). நடக்கும் சம்பவங்களை வரிசைப்படுத்துவதால்தான் கடந்த காலம், எதிர்காலம் என்ற மாயையை உருவாக்குகிறோம். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில், அதாவது இப்பொழுது என்ற நேரத்தில் நடக்கிறது.

  பருப்பொருளுக்கும் ஆற்றலுக்கும் காலம் என்ற பரிமாணம் இருக்கிறது என்கிறீர்கள். இல்லாத காலம் அவற்றுக்கு எங்கிருந்து வந்தது?

  ஆற்றலை பொருளாகவும், பொருளை ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்பது சார்பியல் கோட்பாடு என்கிறீர்கள். சரிதான். இந்த கோட்பாட்டை ஏற்கிறீர்களா? இது வெறும் கோட்பாடு மட்டுமல்ல. இந்த கோட்பாடு கூறுவதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.

  எல்லாப் பொருளுக்குள்ளும் ஆற்றல் உண்டு என்கிறீர்கள். இந்த கருத்துப்படி, ஆற்றல் வேறு, பொருள் வேறு; இரண்டும் சேர்ந்து இருக்கிறது என்றாகிறது. அதாவது, பானைக்குள் தண்ணீர் இருப்பது போல. பானையும் தண்ணீரும் வெவ்வேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று இருக்கிறது. அதைப்போல பொருளுக்குள் ஆற்றல் இருக்கிறது என்கிறீர்கள். பானையிலிருந்து தண்ணீரை வெளியே எடுத்துவிடலாம். இருப்பினும் பானை அப்படியே இருக்கும். அதேபோல், பொருளுக்குள் இருக்கும் ஆற்றலை அதிலிருந்து வெளியேற்ற முடியுமா? அப்படி வெளியேறிய பின்னும் பொருளானது முன்பிருந்த அதே நிலையில் இருக்குமா? அல்லது ஆற்றல் இருந்தால்தான் பொருள் பொருளாக இருக்குமா?

  பொருள் வேறு, ஆற்றல் வேறு என்றால் பொருள் எதனால் ஆனது என்று விளக்குங்கள். அது எங்கிருந்து வருகிறது என்று கூறுங்கள்.

  பொருள் என்பது ஏதோ ஒன்று; அதற்குள் வேறு ஏதோ ஒன்றான ஆற்றல் குடிகொண்டிருக்கிறது என்பது முற்றலிலும் தவறு.

  ஆற்றல்தான் குறிப்பிட்ட அதிர்வில் திடமான/நீர்ம/வாயு நிலை பொருளாக இருக்கிறது.

  ஆற்றலுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு என்கிறீர்கள். இது தவறு. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
  என்பதை நீங்கள் படித்ததில்லையா? ஆற்றலின் அழியாமை கோட்பாடு(conservation of energy) நீங்கள் அறியாததா?

  பொருள் சார்ந்து ஆற்றல் இருக்கிறது; பொருள் அழிந்தால் ஆற்றலும் அழியும் என்கிறீர்கள். என்ன அறியாமை! ஒரு பொருள் இருக்கிறது. ஆற்றலின் அதிர்வு வேகம் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்ததால் அது ஒரு திட பொருளாக இருக்கிறது. அதை நாம் எரித்தால் அதனுடைய அதிர்வு வேகம் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலக்கூறுகள் பிரியும். மேலும் வெப்பம் அதிகரிக்கும்போது அது ஆற்றல் நிலைக்கு திரும்பிவிடும். எந்த ஆற்றல் பொருளாக இருந்ததோ அது இப்பொழுது மறுபடியும் ஆற்றலாக இருக்கும். அது ஒருபோதும் அழியாது. திரும்பவும் அதனுடைய அதிர்வு வேகத்தை குறைத்தால் அது பொருளாக இருக்கும். இதை எல்லாம் பள்ளி கூடத்திலேயே சொல்லி கொடுப்பார்கள். இது தெரியாதா உங்களுக்கு?

 41. //நீங்கள் கூறும் மூல ஆற்றல் இந்த வரையரைக்குள் அடங்குபவையா? ஆம் என்றால் நிச்சயம் அது கடவுளாக இருக்க முடியாது. ஏனென்றால் கடவுள் என்பது அனைத்தையும் உருவாக்கியது. புவியில் காணக் கிடைக்கும் ஆற்றல்களில் அனைத்தையும் உருவாக்கும் தன்மையுள்ள ஆற்றல் என்று எதுவுமில்லை.//

  ஆற்றலுக்கு நீங்கள் கூறிய வரையறையே தவறு. நீங்கள் ஆற்றல் குறித்து அறிவியலுக்கு புறம்பாக கூறுகிறீர்கள்.
  ஆற்றல்தான் அதன் அதிர்வுக்கு ஏற்ப புவியில் மட்டுமல்ல, முழு பௌதீக பிரபஞ்சமாக, அதாவது அனைத்து பொருள்களாக உள்ளது.

  //இந்த வரையறைகளுக்குள் மூல ஆற்றல் அடங்காது என்றால்; முதலில், இங்கிருக்கும் ஆற்றலும், நீங்கள் கூறும் மூல ஆற்றலும் வேறு வேறு என்பது உறுதியாகி விடும். இரண்டாவது, மூல ஆற்றல் என்று நீங்கள் கூறும் ஒன்றுக்கான வரையறைகளை கூற வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும். //

  பல்வேறு ஆற்றல்கள், அதாவது பலவேறு தரமுடைய(energies of different grades) ஆற்றல்கள் உள்ளன. அவைகளின் கூட்டுதான்(a collective of different energies) கடவுள். ஆற்றல் என்பதை நிகழ்வு வெளி(Event Space) முழுதும் இருக்கிற சக்தி என்று வரையறுக்கலாம். அதை இருப்பது(That which is) என்றும் அனைத்துமானது(The All) என்றும் வரையறுக்கலாம்.

 42. @ சித்தார்த்,

  //உங்கள் பேச்சிலேயே முரண்பாடு இருக்கிறதே அத்வைதி, எல்லா ஆற்றல்களும் மூலத்திற்குள் அடக்கம் என்கிறீர்கள் சரி, ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒரு மூலம் தேவை என்கிறபோது, நீங்கள் குறிப்பிடும் கடவுள் ஆற்றல் என்பது எங்கிருந்து வந்தது, அதற்க்கு எது மூலம்? இல்லை, கடவுள் ஆற்றல் என்பது எந்த மூலமும் இல்லாத சுத்த சுயம்புவாக இருப்பதா? அப்படி ஒன்று இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை, அது சுயம்புவானது என்றால் அதற்க்கு தகுந்த சான்றுகள் அளிக்கவும்.//

  மூலம் என்று தனியாக இருந்து அதிலிருந்து ஆற்றல்கள் அதைவிட்டு வெளியேறுவதில்லை. தோற்றுவாய்க்குள்(Origin) ஆற்றல்கள் இருக்கும் ஒரு பகுதியைத்தான் மூலம் என்றேன். தோற்றுவாய் தனக்குள் 12 பகுதிகளை பிரிந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மூலம். ஆக 12 மூலங்கள் உள்ளன. இந்த மூலாதாரங்கள் மெய்யுணர்வு கொண்ட ஜீவன்கள்(Conscious Entities). இந்த மூலாதாரங்களை தோற்றுவாய் தனக்குள் படைத்தது. தோற்றுவாய் நிகழ்வு வெளியில்(Event Space) உருவானது.

 43. @ சித்தார்த்,

  //இதனை தோழர் செங்கொடி மிகவும் தெளிவாக விளக்கிய பின்னும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்வது சரியாக படவில்லை. உண்மை அல்லது சத்யம் எப்படி உங்களுக்கு ஒன்றாகவும் எனக்கு ஒன்றாகவும் இருக்க முடியும், இப்போது வெளியே மே மாதம், நடு மத்தியம் சூரியன் 110 டிகிரி காய்கிறது என்று கூறினால், பகல் என்று தான் அர்த்தம், இல்லை இரவு என்று நீங்கள் கூறுகிறீர்கள், என் மனதுக்கு அப்படி தான் படுகிறது என்று கூறினால், இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நெருப்பு சுடும் என்பது தான் உண்மை, நீங்கள் எனக்கு எது உண்மை என்று படுகிறதோ அதனை தான் ஏற்பேன் என்று கூறி “நெருப்பு குளுமையாக இருக்கிறது” என்று கூறினால் அதனை ஏற்க முடியுமா. இல்லை ஏற்றே தான் ஆக வேண்டுமென்றால் அதனை நீங்கள் தான் அதனை நிரூபித்து காட்ட வேண்டும். இதனை போன்று தான் தாங்கள் கூறும் கடவுள் ஆற்றல், மூல ஆற்றல் போன்ற வாதங்களும். வெறும் வாய்பந்தல் போடாமல் நிரூபிக்கவும்.//

  இறுதி யதார்த்தம் ஒன்றுதான். அதன் அனுபவம்தான் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஏன் ஒரே நபருக்கே வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு அனுபவம் கிடைக்கலாம். அதுதான் அவ்ருடைய உண்மை. ஒரே யதார்த்தம் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப அவரவர் உண்மையாக இருக்கும். உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் காதலியுடன் உல்லாச சுற்றுப்பயணம் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் தனியாக சென்று கொண்டிருக்கும்போது மழை பெய்கிறது. உங்கள் காதலி மழையில் நனைந்த ஆடைகளுடன் இருக்க, நீங்கள் இருவரும் கைகோர்த்து மழையில் கிளுகிளுப்பாக நடந்துகொண்டு இருக்கிறீர்கள். அந்த நேரத்தில் அந்த மழை உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும் ஆகையால் மழை என்பது மகிழ்ச்சி தரக்கூடியயது என்பது உங்கள் உண்மை. இனனொரு நாள் நீங்கள் அவசரமாக வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது திடீரென்று மழை பெய்கிறது. உங்களின் பயணம் தடை பெறுகிறது. அப்பொழுது அந்த மழை உங்களுக்கு எரிச்சலை கொடுக்கிறது. அந்த நேரத்தில் மழை என்பது எரிச்சல் தரக்கூடியயது என்பது உங்கள் உண்மை. மழை எனப்து ஒன்றுதான். ஆனால் வெவ்வேறு நேரத்தில் அதை நீங்கள் வெவ்வேறாக அனுபவித்தீர்கள். நீங்கள் அனுபவித்துத்தான் அந்த நேரத்தில் உங்களுக்கு உண்மையாக இருந்தது. இப்படித்தான் உண்மை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் இறுதி யதார்த்தம் மாறாதது.

  உங்கள் உதாரணத்திற்கு வருவோம். மே மாத வெயில் சுடும் எனப்து யதார்த்தம். நீங்கள் அதிக சூட்டை உணர்கிறீர்கள். ஆனால் அதிக காய்ச்சலில் இருக்கும் ஒருவர் குளிரால் நடுங்கிக்கொண்டு இருப்பார். அந்த நேரத்தில் மே மாத வெயிலிலும் அவர் சூட்டை உணரமாட்டார். குளிரையே அனுபவிப்பார். அவரை பொறுத்தவரை அன்றைக்கு மே மாத வெயிலும் குளிரானதுதான்.

  நெருப்பு சுடுமா குளிருமா என்று கேட்டீர்கள். ஒருவித தியானான நிலையில் நெருப்பு சுடுவதை உணர முடியாது என்பதை சில புத்த பிட்சுக்கள் செய்து காட்டியுள்ளனர். அதை பார்க்க வேண்டுமானால் நீங்கள் வலை தளத்தில் தேடிப்பாருங்கள்.

 44. // குவாண்டம் அறிவியல் ஆன்மீகத்துடன் தொடர்புடையது என சில மதவாதிகள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி என்றால் வாய்ப்புள்ளது என்ற சொல்லை இருக்கிறது எனும் பொருளில் பயன்படுத்தி ஒரு பொருள் மயக்கத்தை கொண்டுவந்து அந்த பொருள் மயக்கத்தை ஆன்மீகத்து இசைவுள்ளதாக காட்டிக் கொள்கிறார்கள். தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஆன்மீகம் என்பது கருத்துமுதல்வாதம். அறிவியல் என்பது பொருள் முதல்வாதம். இரண்டும் ஒன்றல்ல என்பதோடு மட்டுமல்லாமல் இரண்டும் ஒன்றுக் கொன்று எதிரானவையும் கூட.//

  உண்மையான ஆன்மீக விஷயங்கள் எவை என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நான் ஏற்கெனவே கூறினேன். பெரும்பாலான மக்களை போன்று நீங்களும் மத நம்பிக்கையாளர்கள் சொல்வதை ஆன்மீக கருத்துக்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்படுகிறது.

  குவாண்டம் அறிவியல் வாய்ப்புள்ளது(potential) என்று கூறுவதை இருக்கிறது என்று ஆன்மீகவாதிகள்(மதவாதிகள் அல்ல) பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கிறீர்கள். வாய்ப்புள்ளது என்றால் அது ஏதோ ஒன்று இருப்பதற்கான வாய்ப்பு மட்டும் இருக்கும், ஆனால் அது ஒருபோதும் இருப்பு நிலைக்கு வராது என்று குவாண்டம் அறிவியல் கூறுகிறதா? ஒன்று இருக்கவே முடியாது; ஆனால் அது இருப்பதற்கான வாய்ப்பு மட்டும் இருந்துகொண்டே இருக்கும் என்றால் அதற்கு பேர் வாய்ப்பு அல்ல; மாறாக சாத்தியமல்ல(impossible) என்பதுதான். வாய்ப்பு(potentiality) என்றாலே அது வேறு வடிவத்தில் ஏற்கெனவே இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது அது மறைந்து இருக்கிறது; வேறு ஒரு நிலையில் இருக்கிறது என்று பொருள்.

  ஒரு ஆன்மீக உண்மையை கூறுகிறேன். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அது ஏற்கெனவே இருக்கிறது. எல்லா சாத்தியங்களும்(all possibilities) ஏற்கெனவே உள்ளன. இல்லை என்று எதுவேமே இல்லை. அனைத்துமே வாய்ப்புள்ளதாக(potentials) ஏற்கெனவே இருக்கின்றன.

  ஆன்மீகத்தில், அதாவது இறுதி யதார்த்தத்தில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்று வித்தியாசங்கள் எதுவும் இல்லை. கருத்து பொருளாக மாறும் என்பது ஆன்மீக உண்மை.

 45. // ஒரு மீச்சிறு அளவிலான துகளை வீசும் போது செயல்படும் அறிவியல் விதிக்கும் இடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மீச்சிறு அளவிலான விதிகளை விளக்கத் தான் குவாண்டம் எனும் அறிவியல் துறை உருவாக்கப்பட்டது. இதை எளிமையாக இப்படி குறிப்பிடுவார்கள், “பூட்டிய அறையில் உள்ள ஒரு எலி அறைக்கு வெளியிலும் இருக்க வாய்ப்பு இருந்தால் அதன் பெயர் குவாண்டம் அறிவியல்” இது போன்று கூறுவதெல்லாம் எளிமை கருதி கொடுக்கப்படும் விளக்கங்களே அன்றி அப்படியே உண்மையில்லை. //

  Quantum என்ற சொல்லை மீச்சிறு என்று தமிழ் படுத்தி இருக்கிறீர்கள். இது மிக சரியானது அல்ல. குவாண்டம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய பிளாங்க் அதை ஆற்றலின் தனி அலகுகள் என்பதை குறிக்கத்தான் பயன்படுத்தினார்(Planck wrote a mathematical equation involving a figure to represent individual units of energy. He called the units quanta ).

  ஆற்றல் வெளிப்படுத்தும் கதிர்வீச்சினுடைய அலைவரிசையின் அளவுக்கு ஏற்ப அந்த ஆற்றலின் தனித்தியங்கும் அளவு (a discrete quantity of energy proportional in magnitude to the frequency of the radiation it represents ) என்று குவாண்டம் என்பதை குறிப்பிடலாம்.

  நீங்களோ பருப்பொருள்(துகள்) மீச்சிறு அளவில் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கத்தான் குவாண்டம் துறை உருவாக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். இது முழு உண்மை அல்ல. அணுவை உருவாக்கும் அடிப்படை துகள்கள் அதற்கு அப்பாற்பட்ட ஆற்றல் நிலையில் எப்படி செயலாற்றுகின்றன என்பதை ஆராய்வது தான் குவாண்டம் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆற்றல் நிலை என்பது ஆவி நிலை, அதாவது ஆன்மீக நிலை. நீங்கள் பொருளும் ஆற்றலும் வெவ்வேறு என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் பொருளின் ஆற்றல் நிலையை ஆராயும் குவாண்டம் துறைக்கு தவறான பொருள் தருகிறீர்கள். உண்மையை இருட்டடிப்பு செய்கிறீர்கள்.

  பூட்டிய அறைக்குள் இருக்கும் எலி அறைக்கு வெளியேயும் இருக்க வாய்ப்பு இருக்கு என்று சும்மா ஒரு விளக்கத்துக்காகத்தான் குவாண்டம் அறிவியலாளர்கள் விளக்கம் என்ற பேரில் புருடா விடுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். ஒரு பொருளோ அல்லது நிகழ்வோ நடக்க வாய்ப்பு இருக்கும் ஆனால் அந்த வாய்ப்பு வாய்ப்பாகத்தான் இருக்கும், ஒருபோதும் நடக்காது என்றால் அதற்கு பேர் வாய்ப்பு அல்ல. மாறாக சாத்தியமற்றது என்பதுதான் அதற்கு பொருள்.

 46. // ஒரு துகளை நீங்கள் அனுப்பி விட்டு அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது வாய்ப்புள்ள எல்லா திசைகளிலும் செல்கிறது. அவ்வாறு எல்லா திசைகளிலும் செல்கிறது என்பது பதிவாகிறது. ஆனால் அதன் பயணத்தை நீங்கள் கண்காணித்தால் அது நீங்கள் செலுத்திய ஒரு திசையில் மட்டுமே செல்கிறது. இதுவும் பதிவாகிறது. இது என்ன மாயம்? ஒரு மாயையும் இல்லை. நீங்கள் கண்காணிக்கும் போது அல்லது கண்காணிப்புக்கான ஏற்பாட்டின் போது அந்த துகளின் மீது ஃபோட்டான் எனும் துகள் வினை புரிகிறது. எனவே அது ஒரே பாதையில் செல்கிறது ஃபோட்டான் வினை புரியவில்லை என்றால் அதன் இயல்புப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் செல்கிறது. இது தான் குவாண்டம் அறிவியல் என்பது. இதன் முடிவு என்னவென்றால் ஒரு பொருள் அதாவது ஒரு துகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்றால் அவ்வாறு இருப்பதை கண்காணிக்க முடியவில்லை என்பதால். இதை தான் ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியும் என்பதாக பொருள் எடுத்துக் கொண்டு மதவாதிகள் குழப்புகிறார்கள். இதில் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு பருப்பொருள் அது மிகப்பெரிய அளவுகளில் இருக்கும் போதும், மிகச்சிறிய அளவுகளில் இருக்கும் போதும் ஒரே அறிவியல் விதி பொருந்த வேண்டும் எனும் தேவை இல்லை என்பது தான். இதற்கு மேல் இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை.//

  ஒரு துகளை செலுத்தினால் அது ஒரே நேரத்தில் பல திசைகளிலும் செல்வது உறுதியான பிறகு, அந்த பொருள் ஒரே நேரத்தில் பல இடங்களின் இருந்தது என்பது தெளிவாகிறது. பிறகு ஏன் அது வாய்ப்புதான், உண்மையில் இல்லை என்கிறீர்கள்? அந்த துகள் பல இடங்களில் இருந்ததை காண்பதற்கு அறிவியல் கருவி இல்லை என்ற காரணத்தால் அது அப்படி இருந்ததை மறுக்க முடியாது. காண முடியவில்லை என்பதால் அது வெறும் வாய்ப்பு என கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த உண்மையை மறுத்து அல்லது மறைத்து நீங்கள்தான் குழப்புகிறீர்கள். மதவாதிகளோ ஆன்மீகவாதிகளோ அல்ல.

  ஒரு துகள் செல்வதை அவதானிக்கும்போது அது நேர்கோட்டில் செல்வதற்கு ஒளித்துகள் காரணம் அல்ல. அவதானிப்புதான்(observation) காரணம். நம்முடைய அவதானிப்பு யதார்த்தத்தை மாற்றுகிறது/வளைக்கிறது என்பதே காரணம்(observation alters the reality). இதைத்தான் ஐன்ஸ்ட்டின் அவதானிப்பவர் இல்லை என்றால் அவதானிக்கப்படுவது இல்லை என்கிறார். அவதானிப்பவர் இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் இல்லை என்றார்(The universe does not exist without an observer). இந்த பிரபஞ்சம் இருப்பதற்கு அதை அவதானிப்பவரின் அவதானிப்புதான் காரணம். அவதானிப்பு, அதாவது மெய்யுணர்வுதான்(consciousness) இந்த பிரபஞ்சம் இருப்பதற்கு காரணம். மெய்யுணர்விலிருந்துதான் படைப்பு தோன்றுகிறது.

 47. // இப்போது பூமிக்கு அருகில் ஐந்தாம் பரிமாணத்தில் ஒரு கோள் இருக்கிறது. ஆனால் அது நமக்கு தெரிவதில்லை என்று கூறுகிறீர்கள். புவியில் இருக்கும் குழந்தைப் பருவ அறிவியலைக் கொண்டு அந்தக் கோளின் இருப்பை சோதித்தறிய முடியவில்லை என்றே கொள்வோம். ஆனாலும் அந்தக் கோள் இருக்கிறதல்லவா? இப்போது அதன் வழியே ஒரு பருப்பொருளை அல்லது ஒரு ஆற்றலை அதாவது ஒழியை அனுப்புகிறோம் என்று கொள்வோம். என்ன நடக்கும்? ஒளி அப்படியே ஊடுருவிச் சென்று விடுமா? அனுப்பப்படும் பருப் பொருளை தன் மீது மோதாமல் கடந்து செல்ல அந்தக் கோள் அனுமதிக்குமா? அந்தக் கோள் அங்கு இருக்கிறது என்பதற்கு ஏதாவது ஒரு விளைவு இருந்தாக வேண்டுமல்லவா? நிலவு இருப்பதனால் கடல்கள் ஆர்ப்பரிக்கின்றன என்பது போல் அந்தக் கோளின் இருப்பினால் ஏதாவது ஒரு விளைவு இருக்க வேண்டுமல்லவா? அப்படி ஏதாவது ஒரு விளைவு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இப்படி எதுவுமே இல்லை என்றால் அப்படி ஒரு கோள் அங்கு இருக்கிறது என்று ஏற்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? எந்த விளைவையுமே உண்டாக்காத ஒரு பொருளை இருக்கிறது என்று சொல்வதை விட இல்லை என்று சொல்வது தானே பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்?//

  எல்லா பரிமாணங்களும் ஒரே வெளியில்தான் இருக்கின்றன. ஒரு பரிமாணத்தில் இருந்துகொண்டு இன்னொரு பரிமாணத்தில் இருப்பதை எந்த வகையிலும் காணவோ உணரவோ முடியாது. ஒரு பரிமாணத்தில் இருப்பதை காணவேண்டுமென்றால் அந்த பரிமாணத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஐந்தாம் பரிமாணத்தில் இருப்பதை நீங்கள் காண விரும்பினால் நீங்கள்தான் அந்த பரிமாணத்திற்கு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அது சாத்தியம். மூன்றாம் பரிமாண ஆற்றலை ஐந்தாம் பரிமாண பொருளின் மீது செலுத்தினாலும்(அந்த பொருள் எங்கு இருக்கிறது என்பதே மூன்றாம் பரிமாணத்தில் இருப்பவருக்கு தெரியாது. எனவே இது சாத்தியம் அல்ல) எந்த விளைவையும் அது ஏற்படுத்தாது, எந்த விளைவையும் நாம் காண முடியாது. அவை வெவ்வேறு இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டவை. உதாரணத்திற்கு, நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு இங்கிலாந்தில் இருக்கும் பொருளை உங்கள் கண்களால் காண முடியாது. உங்கள் கண்களுக்கு அந்த அளவு பார்வை திறன் கிடையாது. அந்த பொருளை காண நீங்கள்தான் அந்த பொருள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அதைப்போலத்தான் இதுவும்.

 48. // எனவே தான் மீண்டும் மீண்டும் உங்களைக் கேட்கிறேன். பொது உண்மைக்கு எதிரானதாக இருக்கும் நீங்கள் கூறும் அனைத்துக்கும் சான்று கூறி நிரூபியுங்கள். வெறுமனே மூல ஆற்றல், 12 பரிமாணங்கள், குழந்தப் பருவ அறிவியல் என்று கூறிச் செல்வது மட்டும் போதாது.//

  நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன். மூல ஆற்றல்தான் அறிவியல் கூறும் ஆற்றல். ஆற்றல்தான் அதன் 12 அலைவரிசைகள் வரை பௌதீக பொருளாக தோற்றமளிக்கிறது. நாம் இப்பொழுது இருக்கும் மூன்றாம் அலைவரிசை உட்பட 12 அலைவரிசைகளின் 12 வகையான பௌதீக உலகம் ஆற்றலின் ஒரு வெளிப்பாடுதான். ஆற்றல்தான் கடவுள். ஆற்றல் இருப்பதற்கு, அதாவது கடவுள் இருப்பதற்கு பௌதீக உலகமும் ஒரு தெளிவான சான்று. இது பொது உண்மை இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்கள் விருப்பப்படி அப்படி சொல்லிக்கொள்ளுங்கள். நாம் உட்பட நாம் காணும் பௌதீக உலகம் இருப்பதே ஆற்றல் இருப்பதற்கு, அதாவது கடவுள் இருப்பதற்கு தெளிவான சான்று. நான் எது சான்று என்று கூறிவிட்டேன். அதை சான்றாக ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட விருப்பம். இதற்கு பிறகும் பொது உண்மைக்கு ஏற்ற சான்று வேண்டும் என்று அரைத்த மாவையே அரைக்காதீர்கள். இது ரொம்ப போர் அடிக்குது. நான் சொல்வது கடவுள் இருப்பதற்கு சான்றா, இல்லையா என்பதை இதை படிப்பவர்கள் அவரவர்களே முடிவு செய்துகொள்ளட்டும். கடவுள் இல்லை என்பதற்கு நீங்கள்தான் தெளிவான சான்று தரவேண்டும். இருந்தாலும் அதை உங்களிடம் கேட்பதில் எனக்கு ஆர்வமில்லை.

  கடவுள் பற்றிய மற்ற சுவாரஸ்யமான கேள்விகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

 49. // ஆன்மீக அறிவியலும் பொது உண்மை தான் என கருதிக் கொள்ளும் ஆன்மீகவாதிகள் உட்பட அனைவரும் தங்கல் வாழ்வின் அனைத்துக்கும் அறிவியலைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆன்மீக அறிவியலை அல்ல. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் வாழ்வின் அனைத்துக்கும் அறிவியலைப் பயன்படுத்தும் ஆன்மீகவாதிகள் அதாவது உங்களைப் போன்றோர் கடவுள் என்று வந்து விட்டால் மட்டும் அறிவியலை விட்டு விட்டு ஆன்மீக அறிவியலுக்கு தாவி விடுகிறீர்களே ஏன்? என்பது தான். ஆனால் நீங்களோ ஆன்மீகமும் அறிவியல் தான் என்று பதில் கூறியிருக்கிறீர்கள். அண்மையில் கரகாட்டக்காரன் படம் பார்த்திருந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இது குறித்தும் உங்களிடமிருந்து தெளிவான பதிலை எதிர் நோக்குகிறேன்.//

  ஆன்மீகவாதிகள் ஆன்மீக அறிவியலை பொது உண்மை என கருதிக்கொள்கிறார்கள் என்கிறீர்கள். எல்லோரும் ஏற்கும் பொது உண்மை என்ற ஒன்று இல்லை என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். பலபேர் ஏற்கும் ஒன்றைத்தான் நீங்கள் பொது உண்மை என்ற முடிவுக்கு வருகிறீர்கள். இது சரியான முடிவு அல்ல. பல பேர் ஒன்றை ஏற்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மை என்பது அவரவர் பார்வைக்கு ஏற்ப, அறிவு நிலைக்கு ஏற்ப, புரிந்துகொள்ளும் சக்திக்கு ஏற்ப மாறும் என்பதை விளக்கியுள்ளேன். ஆன்மீக உண்மைகளை உங்களை போன்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை; அதனால் அவற்றை உண்மையில்லை என்கிறீர்கள். இதுதான் விஷயம்.

  வாழ்க்கை தேவைக்கு மட்டும் பள்ளியில், கல்லூரியில் சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலை ஆன்மீகவாதிகள் பயன்படுத்துகிறோம். கடவுள் விஷயத்தில் மட்டும் ஆன்மீக அறிவியலுக்கு தாவுகிறோம் என்கிறீர்கள். உண்மையில் அறிவியல், ஆன்மீக அறிவியல் என்று தனித்தனி அறிவியல் இல்லை. யதார்த்தத்தில் இருப்பதை பொருள் சார்ந்த புலன்களின் மூலம் சிலவற்றை அறிய முடியும். மெய்யுணர்வு சார்ந்த புலன்களின் மூலம் சிலவற்றை அறிய முடியும். மெய்யுணர்வு மூலம் அறிபவற்றை ஆன்மீக அறிவியல் என்கிறோம். மெய்யுணர்வு கருவியை பயன்படுத்தாதவர்கள் அதை இல்லை என்கிறார்கள். ஒன்றை அனுபவித்தவரின் அனுபவத்தை அனுபவிக்காதவர் இல்லை என்கிறார்.
  ஒன்றை அனுபவித்து பார்க்காமலேயே அதை இல்லை என்று மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

  எது ஆன்மிகம் என்ற தெளிவும் பெரும்பாலானோருக்கு இல்லை. பிரார்த்தனை, தியானம், பூஜை புனஸ்காரங்கள் செய்வது, கோயில்களுக்கு செல்வது, வழிபாடு செய்வது, குறிப்பிட்டவாறு உடை அணிவது, மற்ற அடையாளங்களை அணிந்து கொள்வது போன்றவைதான் ஆன்மிகம் என்று பெரும்பாலான மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  எல்லாமே ஆன்மீகம்தான். ஆன்மிகம் என்பது வாழ்வின் அனைத்து சாராம்சங்களையும் உள்ளடக்கியது. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதே உங்களின் ஆன்மிகம். நீங்கள் உங்கள் தொழிலை எப்படி செய்கிறீர்கள், உங்களின் அரசியல், சமூக, பொருளாதார கருத்துக்கள், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை போன்ற அனைத்தும் உங்களின் ஆன்மீகத்தை பறைசாற்றுகின்றன.

  நாம் அனைவரும் ஆன்மீகத்தை, அறிவியலை அவரவர் வழியில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே தாவவில்லை.

  இனி உங்கள் கருத்துக்களை/கேள்விகளை தொடரலாம்.

 50. நண்பர் விவேக்,

  நான் என்னுடைய கடந்த வாதத்தை முன்வைத்த நாள் 08/12/2017. அதற்கு மறுப்புரையாக நீங்கள் உங்கள் வாதத்தை முடித்த நாள் 29/12/2017. உங்கள் வாதத்தை வைக்க 21 நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாம் நான்கு நாட்களுக்குள் வாதத்தை வைத்து விடுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறோம். எனவே, அதற்குள் உங்கள் வாதத்தை வைத்து விடுவது தான் சரியானதாக இருக்கும். தவிர்க்கவியலாத குறுக்கீடுகள் இருந்தால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள்ளாவது உங்கள் வாதத்தை முடித்துவிட்டால் நன்றாக இருக்கும். பரிசீலிக்கவும்.

  நன்றி.

 51. பின்னூட்ட எண்: செ 6
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\தன்னை பற்றிய விழிப்புணர்வும் உணர்வும் கொண்ட .. .. .. கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.///

  நண்பர் விவேக்,

  இது அடம்பிடிக்கும் விவகாரம் அல்ல நண்பரே, நீங்கள் எதைக் கூறிக் கொண்டிருக்கிறீர்களோ அது உலகின் யதார்த்தத்துக்கு எதிராக இருக்கிறது என்பதால் அதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்திலிருந்தே ஆதாரம் எதையும் முன்வைக்காத நீங்கள், இப்போது ஆதாரம் எதையும் கேட்காதீர்கள் எனக் கூறியிருக்கிறீர்கள். தவிரவும், கேட்டால் இதையே தான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பேன் என்பதையும் உணர்த்தி விட்டீர்கள். மட்டுமல்லாது, இதேபோன்று வேறொருவர் உங்களுக்கு எதிராக கூறினால் அதை ஏற்க முடியுமா? எனும் கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, நீங்கள் பதில் கூற முடியாத நிலையில் இருக்கிறீர்கள் என்பதால் உண்மையில்லாத ஒன்றே உங்கள் வாதத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்று நான் முடிவுக்கு வருகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவாக இருக்கக் கூடாது அல்லவா? ஆகவே, இது குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த விவாதத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வாசகர்களும் இது குறித்த தங்கள் கருத்துகளைக் கூறலாம்.

 52. பின்னூட்ட எண்: செ 7
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\முதல் முழு பரிமாணம் 12 அலைவரிசை .. .. .. இல்லையென்றால் விட்டுவிடுங்கள்///

  நண்பர் விவேக்,

  விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் விட்டு விடுங்கள் என்று கூறுவது படு மோசமான கருத்து எனக் கருதுகிறேன். இது போன்ற கருத்துகள் எந்த தீர்வையும் கொண்டு வராத, தேட வழி காணாத மொன்னைத் தனத்தைத்தான் உருவாக்கும். ஏன் இந்தக் கருத்து சரியானது என்றாம் நாம் விவாதிக்க வேண்டிய தேவையே எழுந்திருக்காதே. நான் கூறிய ஒன்று தவறானது என்று கருதியதால் தானே விவாதிக்க முன் வந்தீர்கள். விவாதிக்க வந்த பிறகு எது சரி? எது தவறு? சரி என்பதற்கு ஆதாரம் என்ன? தவறு என்பதற்கு ஆதாரம் என்ன? என்பதை முன்வைக்கத் தானே வேண்டும்? அவ்வாறில்லாமல் விவாதத்துக்கு வந்து விட்டு உங்களுக்கு ஏற்புடையதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், எனக்கு ஏற்புடையதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அது மோசடி இல்லையா?

  போகட்டும் நீங்கள் கூறியிருப்பதிலேயே ஒரு முரண்பாட்டை கண்ணுறுங்கள், “நீங்கள் அதை காணவோ உணரவோ விரும்பினால் நீங்கள் அந்த அலைவரிசைக்குத்தான் செல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எந்த அலைவரிசையில் இருக்கிறீர்கள்? அந்த அலைவரிசையில் இல்லாத நீங்கள் அந்த அலைவரிசையில் இருப்பவைகளை எப்படி உணர்ந்தீர்கள்? தியானம் உள்ளிட்ட எதை நீங்கள் கூறினாலும் நீங்கள் அலைவரிசை மாறவில்லையே பின் எப்படி உணர்ந்தீர்கள்?

  எனவே, தெளிவான பதிலைக் கூற முன்வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 53. பின்னூட்ட எண்: செ 8
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\முற்றுமுதல் உண்மை என்று .. .. .. பார்வையை பொறுத்தே அனைத்தும் அமைகிறது///

  நண்பர் விவேக்,

  மீண்டும் சொல்கிறேன். இது அப்பட்டமான திரிபு வாதம், குழப்பவாதம். மீளாய்வு செய்து பார்க்க மறுக்கும் சடநிலைவாதம். உண்மை வேறு கருத்து வேறு. இரண்டையும் குழப்பாதீர்கள். உங்கள் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் எதிரே வருகிறாள் என்றால் இதில் எதிரே ஒரு பெண் வருகிறாள் என்பது உண்மை. அவள் பேரழகாக இருக்கிறாளா? சுமாரான அழகுடையவளாக இருக்கிறாளா? என்பவை உங்களுடைய என்னுடைய கருத்து. ஒரு பொருளை பயன்படுத்துவோருடைய கருத்து எதிரும் புதிருமாக எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் உண்மை ஒன்றாகத்தான் இருக்கும். இந்த எடுத்துக்காட்டில் எதிரே வருவது ஆணா பெண்ணா என்று கேள்வி எழுப்பினால், உங்களுக்கு ஆணாகத் தெரிந்தால் ஆணாக வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு பெண்ணாக தெரிகிறாள் நான் பெண்ணாக வைத்துக் கொள்கிறேன் என்று கூறுவீர்களா? அப்படி நீங்கள் கூறினால் சமூகம் உங்களை மனநிலை பிறழ்ந்தவராக பார்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

  இதே வாதத்தில் வேறொரு இடத்தில் இதையே வேறொரு எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளீர்கள். காதலியுடன் செல்லும் போது வரும் மழை, அவசரமாக அலுவலகம் செல்லும் போது வரும் மழை. இந்த இரண்டு நிகழ்வுகளில் எது உண்மை? எது கருத்து? உண்மைகளை பற்றி பேசும் போது கருத்தை உள்ளே திணித்து கருத்தையே உண்மை என விளம்புகிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.

  மற்றொரு எடுத்துக்காட்டில் காய்ச்சலில் இருக்கும் ஒருவருக்கு மே மாத வெயில் சுடுமா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஆம் குளிர் காய்ச்சலில் இருப்போருக்கு வெயிலும் குளிராக தெரியும் தான். இது விதி விலக்கு. விதி விலக்கு ஒருபோதும் பொது உண்மையாவதில்லை. ஏனென்றால் அது தனிப்பட்ட ஒருவரின் நிலை. அந்த அவருமே கூட காய்ச்சலில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் போதும் வெளியில் இருப்பது வெயிலா குளிரா என்று கேட்டால் வெயில் என்று தான் கூறுவாரே தவிர குளிர் என்று கூற மாட்டார். ஏனென்றால் அவருக்கு தெரியும் தனக்கு ஏற்பட்டிருக்கும் குளிர், காய்ச்சலினால் தானே தவிர சூரியனால் அல்ல என்பது. உங்களுக்கு இது தெரியவில்லையா?

  மீண்டும் சொல்கிறேன், உண்மை வேறு கருத்து வேறு. இரண்டையும் குழப்பாதீர்கள்.

  முற்றுமுதல் உண்மை என்று எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். சரி தான் ஆனால் அது நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த விவாதத்தில் பொருந்தாது. தேவைப்பட்டால் பின்னர் விளக்குகிறேன்.

 54. பின்னூட்ட எண்: செ 9
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\அறிவியல் கூறும் ஆற்றலும் மூலாதார ஆற்றலும் .. .. .. அறிவியல் கூறவில்லை என்கிறீர்களா?/// \\\மூலாதாரம்(Source) என்று நான் .. .. .. அறிவியல் மறுக்கிறது என்கிறீர்களா?///

  நண்பர் விவேக்,

  நான் கூறாத ஒன்றை நான் கூறியாதாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். அலைவரிசை, பரிணாமம், ஆற்றல் ஆகியவைகளுக்கு நான் எந்த இடத்தில் ஆதாரம் கேட்டிருக்கிறேன். இவைகலெல்லாம் உலகில் இருப்பவைகள் இவைகளுக்கு ஆதாரம் தாருங்கள் என்று நான் உங்களைக் கேட்கவில்லை. நான் கேட்பது நீங்கள் கூறும் மூலாதார ஆற்றலுக்கு ஆதாரம் தாருங்கள் என்பது தான். உண்மை இல்லாவிட்டால் இப்படித்தான் திரிக்க வேண்டியதிருக்கும். கவனம் கொள்ளுங்கள் நான் கூறாத எதையும் கூறியதாகவோ, கூறிய எதையும் கூறாததாகவோ உருத்திரிக்கக் கூடாது. ஐயம் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், உருத்திரிக்காதீர்கள்.

  கம்யூனிஸ்ட்கள் டார்வினின் பரிணாமக்கொள்கையை ஏற்பவர்கள்தானே? நீங்கள் பரிணாமம் இல்லை என்று கூறுகிற கம்யூனிஸ்ட்டா? அலைவரிசை என்பதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள். ஆற்றல் அதிர்கிறது என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்கிறீர்களா? ஆற்றல் அதிர்கிறது என்று அறிவியல் கூறவில்லை என்கிறீர்களா? என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் நான் கூறவே இல்லை. நான் தெளிவாகத்தான் கூறியுள்ளேன். நீங்கள் கூறுபவைகள் உலகில் இருக்கும் கலைச் சொற்கள் தாம். ஆனால் அந்த கலைச் சொல்லுக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் வேறு. ஆற்றல் இருக்கிறது ஆனால் அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருள் மூல ஆற்றல் என்று ஏதோ இருப்பதாகவும் அது குறிப்பிட்ட அலைவரிசையில் இந்த உலகில் பொருட்களாக வெளிப்படுவதாகவும் பிற வேறு அலைவரிசைகளில் மறைவாக இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கூறுவதற்குத் தான் ஆதாரம் கேட்கிறேனே தவிர உலகில் இருக்கும் ஆற்றலுக்கோ, அலைவரிசைக்கோ நான் ஆதாரம் கேட்கவில்லை. தெளிவாக இருங்கள். நீங்களும் குழம்பி பிறரையும் குழப்பாதீர்கள்.

  இந்த ஆற்றல் தான் அந்த ஆற்றல் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை மறுத்துத்தான் நான் கூறியிருக்கிறேன். உலகிலுள்ள ஆற்றல் வேறு, நீங்கள் கூறிக் கொண்டிருப்பது வேறு என்று. அதற்கான ஆதாரமாகத்தான் உலகில் உள்ள ஆற்றலுக்கு அனைத்தையும் படைக்கும் சக்தி என ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் மூல ஆற்றலோ அனைத்தையும் படைத்திருப்பதாக, அனைத்துமாய் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, உலகில் உள்ள ஆற்றலும் நீங்கள் கூறும் மூல ஆற்றலும் வேறு வேறு என்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன? மறுப்பு என்ன? அதைக் கூறுங்கள். மாறாக, நான் பரிணாமம் இல்லை என்று கூறுகிற கம்யூனிஸ்டா? என்றெல்லாம் கேள்வி கேட்டு நகைக்க வைக்காதீர்கள்.

 55. பின்னூட்ட எண்: செ 10
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\12 அலைவரிசைகள்வரை ஆற்றலானது .. .. .. இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்?///

  நண்பர் விவேக்,

  இந்த அளவுக்கு நீங்கள் நீட்டி முழக்குவது தேவையற்றது. நான் கேட்பது எளிமையானது தான். ஆற்றல் பொருளாக மாறுவதற்கோ, பொருள் ஆற்றலாக மாறுவதற்கோ நான் ஆதாரம் கேட்கவில்லை. ஆற்றல் தான் கடவுள் என நீங்கள் கூறுகிறீர்களே அதற்குத்தான் ஆதாரம் கேட்கிறேன்.

  கடவுள் என்றால் என்ன என்பது தான் நம்முடைய விவாதம். ஆனால் நீங்கள் இதற்கு பதிலளிக்க மறுத்து இங்கிருக்கும் ஆற்றல் தான் அந்த ஆற்றல் என கரகாட்டக்காரன் செந்திலாக மாறுகிறீர்கள். அதனால் தான் அது எப்படி இயங்குகிறது என்றாவது கூறுங்கள் என்று கேட்க வேண்டிய தேவை வந்தது. அப்போதும் அல்லது என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதைக் கூறுங்கள் அல்லது இதைக் கூறுங்கள் என்று தான் கேட்டிருக்கிறேன். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை நன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டு பதில் எழுதுங்கள் என்று கோருகிறேன்.

 56. பின்னூட்ட எண்: செ 11
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\அறிவியல் என்பது என்றுமே முழுமை அடையாத .. .. .. நாத்திகம் பேசும் நீங்களும் மதவாதிதான்///

  நண்பர் விவேக்,

  அறிவியல் முழுமையடைந்ததா இல்லையா? ஆத்திகம் போல் நாத்திகமும் மதம் தானா? கடவுள் இருக்கிறார் என்பது போல இல்லை என்பதும் நம்பிக்கை தானா? போன்ற கேள்விகளெல்லாம் நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தின் மையத்தை மாற்றும் தொனியில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே அவைகளுக்கு பதிலளிக்காமல் கடந்து செல்கிறேன். அல்லது நீங்கள் இவைகளும் இந்த விவாதத்தின் மையத்துக்கு உதவுபவை தான் என்பதை விளக்கினால் பின்னர் பதிலளிக்கிறேன்.

 57. பின்னூட்ட எண்: செ 12
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\உங்கள் அளவுகோளின்படி பார்த்தால், .. .. .. மாறுபட முடியும். கடவுள் இருக்கிறது என்பதற்கு .. .. .. கடவுள் இல்லை என்பதற்கு தங்களால் சான்று தர முடியுமா? உங்கள் புலன்களுக்கு தெரியவில்லை என்பது சான்று ஆகாது. தெளிவான சான்று வேண்டும்///

  நண்பர் விவேக்,

  இதுவும் முந்திய பின்னூட்டம் போலவே விவாதத்திற்கு வெளியே இருக்கிறது. என்றாலும் இறுதிப் பகுதி கொஞ்சம் விவாத நோக்கத்துக்கு நெருங்கி வருவதால் அதற்கு மட்டும் பதிலளிக்கிறேன். ஆனாலும் இந்த விசயத்தை தொடர்ந்து விவாதிப்பது மையத்தை விலக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கேட்கப்பட்டிருக்கிறது எனும் அளவில் மட்டும் இதற்கு நான் பதிலளிக்கிறேன்.

  முதலில், நான் ஆதாரம் கேட்கிறேன் என்றால் அதற்கான ஆதாரத்தை தந்து விட்டு அல்லது ஆதாரம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டுத்தான் நீங்கள் ஆதாரம் தாருங்கள் என்று கேட்க வேண்டும். அது தான் விவாத நேர்மை. ஆனால் அவ்வாறல்லாமல், நான ஆதாரம் கேட்டேன் என்பதற்காகவே நீங்களும் ஆதாரம் கேட்கிறீர்கள். இது உங்கள் புரிதலுக்காக.

  கடவுள் இல்லை என்பதற்கு அல்லது கடவுள் என கற்பிக்கப்படுவது பொய் என்பதற்கு தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
  எப்போதும் நிலைத்து இயங்கிக் கொண்டே இருக்கும் ஆற்றல் என்று எதுவும் இல்லை என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கடவுள் என்று எதுவும் இல்லை.
  பேரண்டத்தினுள் இலங்கும் அனைத்து பருப் பொருட்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிரிதொன்றிலிருந்து சார்பு பெறாமலும், பிரிதொன்றுக்கு சார்பு வழங்காமலும் எந்த ஒரு பருப் பொருளும் இப்பேரண்டத்தில் இல்லை என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கடவுள் என்று எதுவும் இல்லை.
  மனிதப் புலன்களுக்கு தட்டுப்பட்டாலும், தட்டுப்படாவிட்டாலும் அனைத்து இயக்கங்களும் ஏதோ ஒரு விளைவைக் கொண்டிருக்கின்றன. அந்தந்த விளைவுகள் மனிதர்களால் நேரடியாகவோ கருவிகள் மூலமாகவோ உணரப்பட்டிருக்கின்றன. இப்படி உணரப்படாத எதுவும் ஊகமாக இருக்க முடியுமே தவிர உண்மையாக இருக்க முடியாது என்பது அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. கடவுள் என்ற ஒன்றுக்கு அப்படியான எந்த உணர்தலும் மனிதர்களுக்கு கிடைக்கவே இல்லை. எனவே, கடவுள் என்று எதுவும் இல்லை.
  ஆதாரங்கள் போதும் என எண்ணுகிறேன். இனியும் பரிமாணம் அலைவரிசை மூல ஆற்றல் என சுற்றி வந்து கொண்டிருக்காமல் ஆதாரம் காட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

 58. பின்னூட்ட எண்: செ 13
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\மூன்றாம் அலைவரிசை பௌதீகத்தில்தான்.. .. .. இதை எல்லாம் பள்ளி கூடத்திலேயே சொல்லி கொடுப்பார்கள். இது தெரியாதா உங்களுக்கு?/// \\\ஆற்றலுக்கு நீங்கள் கூறிய வரையறையே தவறு.. .. ..என்றும் வரையறுக்கலாம்.///

  நண்பர் விவேக்,

  காலம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம். அறிவியலுக்கு எதிரானவைகளைக் கூறிவிட்டு அதற்கு எந்தவித சான்றாதாரங்களும் அளிக்காமல் ஏற்றாலும் மறுத்தாலும் அது உங்கல் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது என்று கூறிச் செல்வது உங்களுடைய வடிக்கை அதில் இதுவும் ஒன்று. எனவே, இதில் நான் விளக்கம் ஏதும் அளிக்கப் போவதில்லை. காரணம், இது நாம் எடுத்துக் கொண்டுள்ள விவாதத்தை திசைமாற்றி கொண்டு விடும் என்பதால். அதேநேரம் பொருளுக்கு நான்காம் பரிமாணமாக காலம் இருக்கிறது என்று கூறியிருந்ததன் பொருளை மட்டும் விளக்கி விடுகிறேன். நாம் காணும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது அனாதி காலம் தொட்டு இருந்து கொண்டே இருக்கிறது என்று கூற முடியுமா? இனியும் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டே இருக்கும் என்று கூற முடியுமா? நான் என்பது பொருள் தான். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் பிறந்து, குறிப்பிட்ட ஏதோ ஓர் ஆண்டில் மரணித்து ப் போகும் ஒரு பொருள் நான். குறிப்பிட்ட அந்த ஆண்டுக்கு முன் நான் எனும் பொருள் இல்லை. அதேபோல் குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு நான் எனும் பொருள் இருக்கப் போவதும் இல்லை. ஒரு பொருளுக்கு நீளம் அகலம் உயரம் என இருப்பது எப்படி திண்ணமானதோ அதேபோல அப்பொருள் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தான் இருக்கும் என்பதும் திண்ணமானது. இது தான் நான் கூறியது. இதை மறுக்க விரும்புகிறீர்களா? இதை நீங்கள் உட்பட யாராலும் மறுக்க முடியாது. உங்களால் மறுக்க முடியும் என்றால்; கூறுங்கள், கி.பி. 1319 ம் ஆண்டு நீங்கள் எங்கிருந்தீர்கள்? அல்லது 3019 ம் ஆண்டு நீங்கள் எங்கிருப்பீர்கள்? மாறாக காலம் குறித்து நீங்கள் கூறியவை இதற்கு அப்பாற்பட்டவை என்றால் அது இந்த விவாதத்தோடு எந்த விதத்தில் தொடர்புடையது?

  இப்படி இருக்கும் பொருளில் தான் ஆற்றல் உள்ளது எனக் கூறியிருந்தேன். பொருள் இல்லாமல் ஆற்றல் இல்லை என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தேன். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? ஆம் என்றால் பொருள் இல்லாமல் தனித்த ஆற்றல் என்று ஏதாவது இருக்கிறதா? என்பதை சான்றுகளுடன் கூறுங்கள். கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ளலாமா என்பதையும் கூறிவிடுங்கள். (தயவு செய்து 3ம் அலைவரிசை என்று கூறி விடாதீர்கள். ஏனென்றால் நாம் பேசிக் கொண்டிருப்பது இந்த உலகத்தின் பொருட்கள் குறித்து )

  இப்போது, காலத்தை தன்னுடைய நான்காவது பரிமாணமாக கொண்டிருக்கின்ற பொருளில் இருக்கும் ஆற்றல் கால வரம்புக்கு உட்பட்டதா இல்லையா? எடுத்துக்காட்டு: பூமியில் உள்ள அனைத்துக்கும் பெரும்பகுதி ஆற்றலை வழங்குவது சூரியன். சூரியன் உருவாவதற்கு முன்னால் இப்போது சூரியனிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் இருந்ததா? இன்னும் 300 கோடி ஆண்டுகளுக்குப் பின் (ஹீலியம் இருப்பு தீர்ந்து விடுவதால் சூரியன் செம்பூதமாய் மாறிவிடும்) அல்லது 400 கோடி ஆண்டுகளுக்குப் பின் இப்போது சூரியனிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் கிடைக்குமா? சூரியன் உருவாவதற்கு முன்னால் இந்த ஆற்றல் இருக்கவில்லை. சூரியன் முடிந்து போனபின் இந்த ஆற்றல் கிடைக்கப் போவதும் இல்லை. என்றால் காலம் எனும் நான்காம் பரிமாணம் கொண்டிருக்கும் சூரியன் எனும் பொருளிலிருந்து கிடைக்கும் அந்த ஆற்றலும் காலவரையறைக்கு உட்பட்டதா இல்லையா?

  இதனோடு நியூட்டனின் ஆற்றல் மாறாக் கோட்பாட்டையும் இணைத்து குழப்புகிறீர்கள். சூரியனிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஆற்றலை நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் அதை மின்னொளியாக மாற்றிக் கொள்ள முடியும். இதுவும், சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல் காலவரையறைக்கு உட்பட்டது என்பதும் வேறு வேறு. ஆற்றலுக்கு காலம் உண்டு என நான் கூறுவதை ஆற்றலை ஆக்கவும், அழிக்கவும் முடியும் என கூறுவதாக நீங்களே கற்பனை செய்து கொண்டு குழப்ப வேண்டாம்.

  ஆற்றல் பொருள் சார்ந்தது என நான் கூறுவதை எப்படி எல்லாம் திரிக்கிறீர்கள் பாருங்கள். \\\ஒரு பொருள் இருக்கிறது. ஆற்றலின் அதிர்வு வேகம் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்ததால் அது ஒரு திட பொருளாக இருக்கிறது. அதை நாம் எரித்தால் அதனுடைய அதிர்வு வேகம் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலக்கூறுகள் பிரியும். மேலும் வெப்பம் அதிகரிக்கும்போது அது ஆற்றல் நிலைக்கு திரும்பிவிடும். எந்த ஆற்றல் பொருளாக இருந்ததோ அது இப்பொழுது மறுபடியும் ஆற்றலாக இருக்கும். அது ஒருபோதும் அழியாது. திரும்பவும் அதனுடைய அதிர்வு வேகத்தை குறைத்தால் அது பொருளாக இருக்கும். இதை எல்லாம் பள்ளி கூடத்திலேயே சொல்லி கொடுப்பார்கள். இது தெரியாதா உங்களுக்கு?///ஒரு திடப்பொருளை எரித்தால் அது ஆற்றலை வெளியிடுகிறது. பின் அந்த ஆற்றலை அதிர்வு வேகம் குறைத்தால் மீண்டும் அது அந்தப் பொருளாக ஆகிவிடுமா? மன்னிக்கவும் என்னால் சிரிக்க முடியவில்லை. அதுவும் நான் படித்த பள்ளிக் கூடத்தில் இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்கவே இல்லை. ஏமாற்றி விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் உங்களுக்கு இவ்வாறு சொல்லிக் கொடுத்திருந்தால், எந்த வகுப்பில் என்ன பாடத்தில் என கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னால் நானும் உங்கள் அளவுக்கு படித்துக் கொள்வேன். சார்பியல் கோட்பட்டை இவ்வளவு எளிமையாக உங்களுக்கு சொல்லிக் கொடுத்த அந்த ஆசிரியரை நானும் சந்திக்க வேண்டும் போல் ஆசையாக உள்ளது.

  ஆற்றல் என்பதன் வரையறை இது தான். இதை நீங்கள் தவறு என்றால் எது தவறு? என்ன விதத்தில் தவறு? நீங்கள் கூறும் சரியான வரையறை என்ன? அது என்ன விதத்தில் சரியாக இருக்கிறது? என்பதையும் கூற வேண்டும். மாறாக 3ம் அதிர்வு 12ம் பரிமாணம் என்ற ஒற்றைப் பல்லவியை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்கக் கூடாது.

 59. பின்னூட்ட எண்: செ 14
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\ஒரு துகள் செல்வதை அவதானிக்கும்போது அ.. .. .. பிரபஞ்சம் இருப்பதற்கு காரணம். மெய்யுணர்விலிருந்துதான் படைப்பு தோன்றுகிறது///

  நண்பர் விவேக்,

  குவாண்டம் அறிவியல் குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் விளக்கியிருக்கிறீர்கள். ஒரு துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருக்கிறதா? அல்லது இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இதுவும் இதிலிருந்து நீங்கள் வந்தடையும் முடிவும் தான் இதில் சாரமானது. இருக்கிறது இல்லை என்பது இரட்டை நிலை. குவாண்டம் அறிவியலில் அறிவியலாளர்கள் இந்த நிலையை எடுக்கவில்லை. இரண்டும் அல்லாத மூன்றாம் நிலையை எடுக்கிறார்கள். இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏன் இந்த மூன்றாம் நிலை? யதார்த்தத்தை சோதித்துப் பார்த்து, அந்த சோதனையில் கிடைக்கும் முடிவுகளை உறுதிப்படுத்தி தேற்றங்களாக தருவது தான் அறிவியல். இதை குவாண்டம் சோதனைகளில் பொருத்துங்கள். துகள் பல இடங்களில் இருப்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டதா? இல்லை. இரே இடத்தில் தான் இருக்கிறது என உறுதியாக நிரூபிக்கப்பட்டதா? இல்லை. இரண்டு இல்லைகள் முடிவுகளாக கிடைத்திருக்கும் போது ஏதாவது ஒரு இல்லையை முடிவாக அறிவிக்க முடியுமா? அப்படி அறிவித்தால் அது அறிவியலாக இருக்காது. ஆகவே தான் ஏன் முடிவுகளில் இரண்டு இல்லைகள் கிடைக்கின்றன என ஆராய்கிறார்கள். ஒரு துகள், ஒரே சாலை, ஒரே விரைவு. ஆனால் கவனிக்கும் போது ஒரு முடிவு, கவனிக்காதபோது வேறொரு முடிவு. கவனிக்கும் போது என்ன நடக்கிறது என ஆராய்கிறார்கள். அதில் வந்தடைந்த முடிவு தான் ஃபோட்டான்களின் வினையாற்றல். எனவே தான் மூன்றாம் நிலையான வாய்ப்பு இருக்கிறது எனும் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் நீங்களோ ஒரு இல்லையை புறக்கணித்து விட்டு, மற்றொரு இல்லையை ஏற்று துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது எனும் நிலையெடுக்க வேண்டும் என்கிறீர்கள். இது தான் உங்களிடம் மூன்றாம் அலைவரிசை ஐந்தாம் அலைவரிசை என்று விரிகிறது. ஆனால் அறிவியல் உங்களைப் போல் ஒன்றைப் புறக்கணித்து ஒன்றை ஏற்கவில்லை. அதனால் தான் இரண்டுக்கும் சம மதிப்பு அளித்து வாய்ப்பு இருக்கிறது எனும் மூன்றாம் நிலை எடுத்திருக்கிறார்கள். நீங்களோ உங்களின் முடிவுகளுக்கு ஏற்ப அறிவியலை திரிக்க நினைக்கிறீர்கள்.

  குவாண்டம் ஆய்வுகளில் கவனிப்பு தான் பங்காற்றுகிறது என்பது உறுதி. உங்கள் சொல்லில் சொன்னால் அவதானிப்பு. ஆனால் அவதானிப்பில் என்ன நடக்கிறது? பொருள் என்பதிலிருந்து குவாண்டம் வரை நுணுக்கமாக வந்த நீங்கள், அவதானிப்பு என்பதிலிருந்து ஏன் அடுத்த நுணுக்கத்திற்கு செல்ல மறுக்கிறீர்கள்? அவதானிப்பில் அல்லது கவனிப்பில் நடப்பது ஃபோட்டான்களின் வினையாக்கல். இந்த கடைசி படிக்கு செல்லாமல் அவதானிப்பு எனும் மேற்படியில் நீங்கள் நின்று விடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. குவாண்டம் வரை நுணுக்கமாக வந்த நீங்கள் அடுத்த நுணுக்கமான ஃபோட்டானுக்கு வந்தால் நீங்கள் கற்பித்து வைத்திருகும் மாய உலகிற்கான நியாயம் இல்லாமல் போய்விடும். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் நீங்கள் அவதானிப்பு என்பதோடு நின்று விடுகிறீர்கள்.

  அடுத்து இந்த ஆய்வுகளிலிருந்து வந்தடையும் முடிவு. ஒரு பருப்பொருள் மீச்சிறிய அலகுகளின் நிலையிலும், பொருள் நிலையிலும் ஒரே விதிகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் தேவை இல்லை என்பது நான் வந்தடையும் முடிவு. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்குவது என்னுடைய கடமை அல்லவா? Yயதார்த்தமாகவே மீச்சிறு அலகுகளில் மட்டுமே வெளிப்படும் விளைவு இது. எந்தப் பொருளும் பார்க்கும் போது ஒன்றாகவும் பார்க்காதபோது வேறொன்றாகவும் இருப்பதில்லை. ஏனென்றால் பொருட்கள் அக விருப்பத்திற்கு அப்பாற்பட்டு புறநிலை யதார்த்தங்களாக விளங்குகின்றன.அவை புறநிலை யதார்த்தங்களாக இருப்பதால் தான் நம்முடைய அகநிலை விருப்பங்கள் அதை மாற்றுவதில்லை. மாற்ற வேண்டும் என்றால் வினை புரிய வேண்டும். மனிதனின் அகநிலை விருப்பத்திற்கு அப்பாற்பட்ட புறநிலை யதார்த்தம் என்பது மீச்சிறிய அலகுகளில் மாற்றம் பெறுவதற்கு ஃபோட்டான் எனும் மீச்சிறிய துகளின் மீச்சிறிய கால அளவே போதுமானதாக இருக்கிறது. இதுவே அளவிற்பெரிய பருப்பொருளில் வெளிவிசையும் காலமும் தேவைப்படுகிறது. இந்த வேறுபாடு தான் இதில் இருக்கிறது. எனவே தான் மீச்சிறிய அளவிலும், பெரும்பொருளிலும் ஒரே விதி செயல்பட வேண்டிய தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறேன். இதில் என்ன தவறு?

  ஆனால் நீங்கள் வந்திருக்கும் முடிவு என்ன? ஃபோட்டான் காரணமல்ல, அவதானிப்பு தான் காரணம் எனக் கூறிவிட்டு. இதனுடன் பொருந்தாத விதத்தில் ஐன்ஸ்டீனின் ஒரு மேற்கோளைக் கூறி உங்களின் கற்பனைகளோடு இணைக்கிறீர்கள். ஐன்ஸ்டீனின் மேற்கோள் எந்த விதத்தில் இதனுடன் பொருந்தாது? நோக்கர்கள் இல்லை என்றால் பேரண்டமே இல்லை எனும் ஐன்ஸ்டீன் மேற்கோளின் பொருள் என்ன? மனிதர்கள் தான் தம்முடைய அறிவால் பேரண்டத்தை அறிந்திருக்கின்ற்னர். மனிதர் தவிர்த்த பிற உயிர்களுக்கு பேரண்டம் குறித்த அறிவு இல்லை. எந்த விலங்குக்கும் ஆண்ட்ரோமீடா குறித்த அறிவு இல்லை. அறிவித்தாலும் அது குறித்த போதம் அவைகளுக்கு இருப்பதில்லை. ஆனால் மனிதன் அப்படி அல்லன். அவன் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை அறிந்து கொள்ள பேராவல் கொண்டிருக்கிறான். ஒருவேளை மனித இனம் என்று ஒன்று இல்லை என்றால் இந்த பேரண்டம் குறித்த அறிவு எந்த விலங்குக்கேனும் இருக்குமா? இருக்காது இதைத்தான் ஐன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். ஐன்ஸ்டீனின் மேற்கோளில் இன்னொரு உண்மையும் தொக்கி நிற்கிறது. எந்த விலங்குக்கும் அறிவு இருக்காது என்பதான் உண்மையே தவிர பேரண்டமே இருக்காது என்பது உண்மையல்ல. பேரண்டம் இருக்கும். ஆனால் அதை பேரண்டம் என தெரிந்து கொள்ள எதுவும் இருக்காது. அவ்வாறான அறிவு எதற்கும் இல்லை என்பதால் பேரண்டம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியே எழப் போவதில்லை. இது ஐன்ஸ்டீன் கூறியதன் பொருள். ஆனால் இதை திரித்து மெய்யுணர்வு தான் பேரண்டம் இருப்பதற்கான காரணம் என்று உங்கள் கற்பனைக்கு வலு சேர்க்கிறீர்கள்.

  இது தான் உங்களின் ஒவ்வொரு வாதத்திலும் வெளிப்படுகிறது. ஆற்றல் இருக்கிறது எனவே மூல ஆற்றல் இருக்கிறதென நம்பு. குவாண்டமின் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயணிக்கிறது எனவே மாய் உலகம் இருப்பதை நம்பு. இது இருப்பதே அது இருப்பதற்கான ஆதாரம். இப்பிடித்தான் உங்கள் அனைத்து வாதங்களுமே இருக்கின்றன.

 60. பின்னூட்ட எண்: செ 15
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\எல்லா பரிமாணங்களும் ஒரே வெளியில்தான் .. .. .. செல்ல வேண்டும். அதைப்போலத்தான் இதுவும்///

  நண்பர் விவேக்,

  ஒரு பருப் பொருள் ஒரு இடத்தில் இருக்கிறது. அதை பார்க்கவோ, உணரவோ, அளக்கவோ முடியாது. ஏனென்றால் அது வேறு அலைவரிசையில் இருக்கிறது. ஆனால் அந்தப் பொருள் இருக்கிறது தானே. பொருள் இருக்கிறது என்றாலே அங்கு விளைவு இருந்தாக வேண்டும். காணவோ, உணரவோ, அளக்கவோ முடியாத ஒன்று எந்த விளைவையும் ஏற்படுத்தவும் இல்லை என்றால் அது இருக்கிறது என்பதை எப்படி ஏற்பது? இதற்கு ஏதாவது ஒரு விளக்கம் உங்களிடம் இருக்கிறதா? \\\இன்னொரு பரிமாணத்தில் இருப்பதை எந்த வகையிலும் காணவோ உணரவோ முடியாது/// என்றால் அங்கு அது இருக்கிறது என்று எவ்வாறு இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள். நீங்களும் இதே அலைவரிசையில் தானே இருக்கிறீர்கள். பின் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? அதையாவது விளக்கலாமே. ஆகவே உங்களிடம் கோருவது தெளிவான விளக்கங்களே அன்றி தேய்ந்து போன பல்லவிகள் அல்ல.

 61. பின்னூட்ட எண்: செ 16
  பதிலளிக்க எடுத்துக் கொண்ட பகுதி: \\\ஆன்மீகவாதிகள் ஆன்மீக அறிவியலை பொது உண்மை .. .. .. அங்கே, அங்கிருந்து இங்கே தாவவில்லை.///

  நண்பர் விவேக்,

  அறிவியல் ஆன்மீக அறிவியல் என்று தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா? இல்லை. அறிவியல் ஒன்று தான். இப்படி இருக்கும் அறிவியலை ஆன்மீக அறிவியல் குழந்தைப் பருவ அறிவியல் அதாவது உலக அறிவியல் என பிரிப்பது யார்?

  அறிவியல் என்றால் என்ன? எதையும் சோதனை செய்து பார்த்து, மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி, அதில் கண்டறிவதை நடைமுறைக்கு கொண்டுவருவது தான் அறிவியல். இதை மறுக்க விரும்புகிறீர்களா? இப்படி எதையும் சோதனை செய்து பார்க்கும் அறிவியல் தான் கடவுள் என்று கூறப்படும் கற்பனைகளையும் சோதனை செய்து புறந்தள்ளுகிறது. மறுப்பவர்களை நிரூபியுங்கள் என்று அழைக்கிறது.

  இப்படி அறிவியல் அழைப்பதை எதிர்கொண்டு நிரூபிக்க முடியாதவர்கள் தான் அறிவியலை குறைகூற முற்படுகிறார்கள். இந்த காரணத்திற்காகக்த் தான் ஆன்மீக அறிவியல் என்று புதிதாக ஒன்றை அழைத்து வருகிறார்கள்.

  ஆன்மீக அறிவியலில் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லையா? ஆம் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமின்றி விளக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த விவாதத்தில் நீங்கள் எதையாவது நிரூபித்துள்ளீர்களா? அல்லது எதையாவது விளக்கியுள்ளீர்களா? நீங்கள் விளக்கம் தந்திருப்பதெல்லாம் உலக அறிவியல் தொடர்பாக மட்டுமே. ஆன்மீக அறிவியலில் உங்களிடமிருந்து எந்த நிரூபித்தலும் இல்லை எந்த விளக்கமும் இல்லை.

  பொதுவாக நிரூபித்தல் என்றாலே குறிப்பானது என்று பொருள். ஆனால் உங்களிடம் இருப்பதில் குறிப்பானது என்று எதுவுமே இல்லை.
  கடவுள் என்றால் என்ன? எல்லாமே கடவுள் தான்.
  ஆன்மீகம் என்றால் என்ன? எல்லாமே ஆன்மீகம் தான்.
  ஆற்றல் என்றால் என்ன? எல்லாமே ஆற்றல் தான்
  ஆனால் நீங்கள் குறிப்பானவர் என்பதை மறந்து விட்டீர்கள்.

  மெய்யுணர்வின் மூலம் அறிவது தான் ஆன்மீக அறிவியல் என்று கூறுகிறீர்கள். அனுபவித்து பார்க்காத நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என்கிறீர்கள். இது தவறு. நான் இதை அனுபவித்தேன் என்று எவர் எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? சோதித்தறிந்து பார்க்க வேண்டாமா? விண்ணில் இருந்து ஒரு வேற்றுக் கிரக மனிதர் ஒருவர் வந்து என்னுடன் விருந்து சாப்பிட்டார் என்று ஒருவர் தன் அனுபவத்தை உங்களிடம் கூறினால், அதை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அது குறித்து ஆராய்ந்து பார்க்க மாட்டீர்களா? இதைத்தான் நான் ஆன்மீக அறிவியல் குறித்து உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ 3 வது அலைவரிசை 12 வது பரிமாணம் என்று திரும்பத் திரும்ப உங்கள் அனுபவம் எனும் கற்பனையை கூறிக் கொண்டிருக்கிறீர்களே தவிர மீளாய்வு செய்ய மறுக்கிறீர்கள். நான் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அதை தவறு, அது கற்பனையைத் தவிர வேறொன்றுமில்லை எனக் கூறுகிறேன். நீங்களோ அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உங்கள் அனுபவம் என்ன? எப்படி உணர்ந்தீர்கள்? எப்படி ஆய்வு செய்தீர்கள்? எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? என கேட்கிறேன். நீங்களோ 3 ம் பரிமாணத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாது, உணர முடியாது என்கிறீர்கள். பின் எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? உங்கள் விவரங்களை முன் வைக்காமல் முடிவை மட்டுமே முன்வைத்து ஏற்றுக் கொள்ளச் சொல்லி அடம் பிடிக்கிறீர்கள். கற்பனை மூட்டை என ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர எங்களுக்கு ஏதாவது வழி இருக்கிறதா? அப்போதும் கூட ஏற்பவர்கள் ஏற்கலாம் மறுப்பவர்கள் மறுக்கலாம் என்று எதுவுமே உண்மையில்லை என்று உலகியலுக்கு எதிராக உளறுகிறீர்கள். என்ன செய்ய வேண்டும் நாங்கள், நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு சென்றுவிட வேண்டுமா?

  பிறப்பது முதல் மரணிப்பது வரை எல்லா உலகியல் விசயங்களுக்கு அறிவியலை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் வாழ்வில் கடவுளைத் தவிர வேறு எதற்காவது ஆன்மீக அறிவியலை பயன்படுத்தினோம் என்று உங்களால் கூற முடியுமா? இதை மறைப்பதற்காகத்தான் பொத்தம் பொதுவாக எல்லாமே ஆன்மீகம், எல்லாமே கடவுள் என பொதுப் போர்வைக்குள் ஒழிந்து கொள்கிறீர்கள். ஆனால் குறிப்பாக கடவுள் இருப்பதாக கூறிக் கொள்கிறீர்கள். எப்போதெல்லாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நேருகிறதோ அப்போதெல்லாம் ஆன்மீக அறிவியலை இழுத்து விட்டுக் கொண்டு தப்பிக்க எண்ணுகிறீர்கள். இங்கே நீங்கள் அவ்வாறு தப்பிக்க இயலாது. உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தே ஆக வேண்டும். ஒன்று உங்கள் கடவுளை நிரூபிக்க வேண்டும் அல்லது கடவுள் இல்லை என ஒப்புக் கொள்ள வேண்டும். இதைத்தவிர நீங்கள் கூறுவது அனைத்தும் பித்தலாட்டமே. மறுத்தால் தெளிவாக நிரூபிக்கக் காத்திருக்கிறேன்.

  கடவுள் யாருக்கானவர்? மனிதர்களுக்காகத் தானே. மனிதர்கள் இந்த உலகில் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த உலகில் இருக்கும் மனிதர்களைத் தவிர வேறு எதற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லை. அந்த மனிதர்கள் தாம் கடவுள் இருக்கிறதா இல்லையா என்று தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு நிரூபணம் தேவைப்படுகிறதோ அவர்களிடம் நிரூபிக்காமல் கடவுளை ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?

  ஆன்மீக அறிவியல் மூலம் மனிதன் இது வரை கண்டறிந்தது என்ன? மனித வாழ்வுக்கு பயன்படாத ஆன்மீக அறிவியல், எதையும் நிரூபிக்க இயலாத ஆன்மீக அறிவியல் (கற்பனையில் மட்டும் தான் இருக்கிறது என்ற போதிலும்) இருந்தால் என்ன லாபம் இல்லாமல் இருந்தால் என்ன நட்டம்?

  இது என்னுடைய கருத்து அது உங்களுடைய கருத்து என்பதினால் அல்ல. எது உண்மை என்பதை கண்டறிவதில் தான் தேடலின் நோக்கமே அடங்கியிருக்கிறது. உங்களின் அனைத்து கருத்துகளையும் பாருங்கள். அவ்வாறான உண்மையை கண்டறிவதற்கு தடையாகவே இருக்கிறது.
  உண்மை என்று எதுவும் இல்லை என்கிறீர்கள்
  அறிவியல் உதவாது என்கிறீர்கள்
  நீங்கள் போக விரும்பும் பாதையான ஆன்மீகத்தை விளக்க முடியுமா?
  எல்லாமே கூர்மையில்லாமலும், ஆழமில்லாமலுமே இருக்கின்றன.

  பல பேர் ஏற்பது தான் பொது உண்மையா? இல்லை. எது மனிதனின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதுவே உண்மை. அது அவரவர் பார்வைக்கு ஏற்ப மாறுபடுவதும் இல்லை. முரண்பாடான விசயங்களில் இந்த உண்மையைத் தான் நாம் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறிய வேண்டும் என்றால் அது அவரவர் கருத்துகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளாக, நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த நிரூபணத்துக்கு எதிராக இருந்தவர்கள் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டு உண்மையை ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள்.

  இதற்காகத் தான் நாம் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.

  இனி உங்கள் பதில் கண்டு .. .. ..

 62. நண்பர் விவேக்,

  தொடர்பில் இருக்கிறீர்களா? என்னுடைய வாதத்தை வைத்து இன்றோடு பத்து நாட்களாகிறது. விரைந்து உங்கள் வாதத்தை முன்வைக்கவும்.

 63. நண்பர் செங்கொடி,

  உங்களுக்கு அறிவியலும் சரியாக தெரியவில்லை(அல்லது தெரிந்தே அறிவியலை திரிக்கிறீர்கள்), ஆன்மீகமும் புரியவில்லை. உங்கள் வாதங்களை பார்க்கும்போது ஆன்மீக உண்மைகளை புரிந்துகொள்ளும் திறன் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று நன்றாக தெரிகிறது. பொருள்முதல்வாதியின் மனம் இப்படித்தான் செயல்படும் என்பது தெரிந்ததுதான். ஒரு சில ஆன்மீக உண்மைகளை கூறியதற்கு உங்களிடமிருந்து நய்யாண்டியும் முதிர்ச்சியற்ற திருபுவாத பதில்களும்தான் திரும்ப திரும்ப வருகின்றன. கடவுள் என்பது என்ன, அது இருப்பதற்கான ஆதாரம் எது என்று நான் பல முறை விளக்கி, இனி இதே கேள்வியை மறுபடியும் கேட்காமல் வேறு கேள்விகளை ஒவ்வொன்றாக கேட்கும்படி உங்களை கேட்ட பிறகும், நீங்கள் ஆதாரம் இல்லை என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். மேலும் கேள்விகளை ஒவ்வொன்றாக கேட்கும்படி சொன்ன பிறகும் நீங்கள் பத்தி பத்தியாக ஏதேதோ வாதம் என்ற பெயரில் இதை படிப்பவர்களை புரிந்துகொள்ளாதபடி குழப்பும் உத்தியை கையாள்கிறீர்கள். ஒரு நேரத்தில் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு பத்தி பத்தியாக பலதையும் போட்டு குழப்புகிறீர்கள். உங்களின் இப்படிப்பட்ட வாதத்திற்கு ஒவ்வொன்றாக தனித்தனி பின்னூட்டமாக நான் பதில் அளித்தேன். படிப்பவர்கள் எதை பற்றி நாம் பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இப்படி நான் பதில் அளித்ததற்கு எதிர்வினையாக, சம்பந்தமற்ற விஷயங்களை நான் பேசுவதாக நீங்கள்க கூறுகிறீர்கள். சம்பந்தமற்ற விஷயங்களை நீங்கள் கூறியதற்கு ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் பதில் அளித்தேன். ஆனால் நீங்கள் செய்த தவறை என் மீது சுமத்துகிறீர்கள். இது குழந்தைத்தனமான விளையாட்டாக இருக்கிறது. இனி உங்களுடன் மேற்கொண்டு பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று தெரிகிறது. குழந்தைகளுடன் பெரிய விஷயங்களை பேசுவது குழந்தைத்தனம். அப்படிப்பட்ட குழந்தைத்தனத்தில் எனக்கு நாட்டமில்லை. நன்றி.

 64. நண்பர் விவேக்,

  எனக்கு அறிவியல் தெரியவில்லை அல்லது தெரிந்தே அறிவியலை திரிக்கிறேன்.
  எனக்கு ஆன்மீகம் புரியவில்லை, இன்னும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை.
  நான் முதிர்ச்சியற்ற திரிபுவாத பதில்களும், நையாண்டியும் பதில்களாக கூறுகிறேன்.
  படிப்பவர் புரிந்து கொள்ளாதபடி குழப்பும் உத்தியை கையாள்கிறேன்.
  சம்மந்தமற்ற விசயங்களை நான் கூறிக் கொண்டிருந்து விட்டு உங்களை அவ்வாறு கூறுவதாக குற்றம் சாட்டுகிறேன்.

  மேற்கண்ட குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி விட்டு, குழந்தைகளுடன் பெரிய விசயங்களைப் பேசும் குழந்தைத்தனத்தில் நாட்டமில்லை எனக் கூறி முடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  வருந்துகிறேன் நண்பரே, இந்த விவாதமும் இப்படி பாதியில் முறிந்து போனது குறித்து வருந்துகிறேன். ஆனால் அதற்கு நான் காரணமா என்பது தான் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது.

  நான் என்னை எப்போதும் பெரிய ஆளாக கருதிக் கொள்வதே இல்லை. உங்களோடு ஒப்பிடுகையில் நான் குழந்தையாகவே இருந்து விட்டுப் போகிறேன், தவறொன்றும் இல்லை. ஆனால் ஒரு குழந்தைக்கு பயிற்றுவிப்பதற்காக, புரியவைப்பதற்காக, வளர்த்தெடுப்பதற்காக ஏன் இந்த விவாதத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது?

  எனக்கு அறிவியல் தெரியவில்லை என்றால், எந்த இடத்தில் நான் அறிவியலை தவறாக பயன்படுத்தி இருக்கிறேன், அது எப்படி தவறாக இருக்கிறது, எது சரியானது என்பதை சுட்டிக் காட்டலாமே. எந்த இடத்தில் அறிவியலை திரித்திருக்கிறேன், எப்படி அது திரிக்கப்பட்டிருக்கிறது, எது சரியானது என விளக்கலாமே.

  நான் குழந்தைத்தனமானவன் என்பதால் எனக்கு புரியும் விதத்தில் ஆன்மீகம் என்றால் என்ன என தெளியவைக்கலாமே.

  எது முதிர்ச்சியற்ற திரிபுவாதம், எது நையாண்டி, எது குழப்பும் உத்தி என தெளிவாக எடுத்துக் காட்டி என்னுடைய தவறுகளை எனக்கு உணர்த்தி இருக்கலாமே

  செய்ய வேண்டிய இவைகளைச் செய்யாமல், பழி சொல்லி விலகுவது தான் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு அழகா?

  நம்மிடையே நடந்த இந்த விவாதத்தில் உங்களுடைய வாதங்களையும் என்னுடைய வாதங்களையும் தொகுத்துப் பாருங்கள். எது தெளிவாக இருக்கிறது, எது குழப்பமாக இருக்கிறது, எது பொதுவாக இருக்கிறது, எது குறிப்பாக இருக்கிறது, எது விளக்கமாக இருக்கிறது எது போதாமையாக இருக்கிறது என்பது தெரிய வரும்.

  கடவுள் குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது அப்படி ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பது விவாதம். இருக்கிறது என்பதை ஏதாவது ஒரு வகையில் நிரூபித்தாக வேண்டுமா இல்லையா? நேரடியாகவோ மறைமுகமாகவோ இருத்தலை விளக்க நிரூபித்தல் இன்றியமையாதது. நீங்களோ உங்கள் நம்பிக்கைகளை கூறி அதை ஏற்றுக் கொண்டு அடுத்த கேள்விக்கு நகர்ந்து விட வேண்டும் என்கிறீர்கள். இது ஏற்புடையதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

  இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று என்னிடம் கேட்டிருந்தீர்கள். உடனேயே அதற்கான நிரூபணங்களை நான் எழுதியிருக்கிறேன். இதில் உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள், கேள்விகளை அனைத்தையும் எதிர் கொள்வேன், உங்களுக்கு ஏற்பு ஏற்படும் வரையில். ஆனால் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். இதனை நேர்மறையாக அணுகினால் கூட ஆம் இதை நிரூபிக்க முடியாது. அந்த நிலையில் தான் இது இருக்கிறது, இதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் இதை நீருபணம் இல்லை எனும் நிலையில் வைத்து விட்டு அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என்று கூறியிருக்க முடியும். மாறாக, நீங்கள் இதற்கு மேல் இது குறித்து கேட்காதீர்கள் என்று கட்டளையிடுகிறீர்கள். அந்தக் கட்டளையை நான் ஏற்க மறுத்ததால் சிறுபிள்ளைத் தனம் என்று என்னைக் கூறி விட்டு நீங்கள் விவாதத்தை விட்டு வெளியேறுகிறீர்கள்.

  மன்னிக்கவும் நண்பரே, பதில் சொல்ல முடியாமல் விவாதத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள் எனும் இழி சொல் உங்களுக்கு ஏற்படாதிருக்க வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து விவாதித்தே ஆக வேண்டும். சரியான பொருத்தமான பதிலைக் கூறி சிறுபிள்ளையான எனக்கு புரிய வைக்க மூல ஆற்றலாக இருக்கும் கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.

 65. கடவுள் இல்லையென்றால் எப்படி இந்த உலகம் உண்டானது, தானாக உண்டானது என்றால் ஏன் நீங்கள் வேலைக்கு போய் சாப்பிடுகிறீர்? சாப்பாடு தானாக வரும் என்று இருக்கலாமே? உலகம் உண்டானது பெருவெடிப்பால் என்றால் அந்த பெருவெடிப்புக்கு தேவையானது எங்கே இருந்து அல்லது யாரால் கொண்டுவரப்பட்டது ? அதுவும் தானாக என்றால் மனிதன் ஏன் படைக்கப்பட்டான் , எப்படி படைக்கப்பட்டான் ? விளக்கவும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: