யூ டியூப்

நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2008 லிருந்து வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தான். தொடக்கத்தில் வலைப்பக்கத்தில் எழுதுவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது என்றாலும், பெரும்பாலும் எதிர்வினைகள், விவாதங்கள் நடப்பதில்லை. அவை முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்று நகர்ந்து விட்டன. இவை போலவே யூடியூப் வலையொளி காட்சியங்களும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

அதில் நாமும் இணைய வேண்டும் எனும் எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும், தோழர்கள் சிலர் அவ்வப்போது இது குறித்து தொடங்குங்கள் என்று ஆர்வமூட்டிக் கொண்டிருந்தாலும், தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. காரணம், வலைப்பக்கத்தில் எழுதுவதற்கு தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே யூடியூப் வலையொளிகளுக்கு வீடியோ எடிட்டிங், இமேஜ் எடிட்டிங் தெரிந்திருக்க வேண்டும். அந்த தொழில்நுட்பம் தெரியாது என்பது முதன்மையான விதயமாக இருந்தது.

இனியும் தள்ளிப்போடுவது கால ஓட்டத்தில் பின் தங்கி விடுவதாக அமையும் என்பதால், இறங்கி விட்டேன். இப்போதும் அந்த தொழில்நுட்ப அறிவில் பெருங்குறை இருக்கிறது என்றாலும், நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் வந்து விட்டேன்.

தொடக்கத்தில் செங்கொடி வலைப்பக்கத்தில் வெளியிடும் கட்டுரைகளை ஒளிப்பதிவாக வெளியிடும் திட்டம் தான் இருக்கிறது. தொடர்ந்து அதை மேம்படுத்தி ஒரு காணொளி இதழாக மாற்றும் எண்ணம் இருக்கிறது. உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி வலையொளிக்கு செல்லலாம்

செங்கொடியின் வலையொளி

உங்களின் கருத்துகளை வெளிப்படுத்துங்கள். மாற்றுக் கருத்துகள் இருப்பின் தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.

அப்புறம் எல்லோரும் கூறுவது போல, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. கமாண்ட் பண்ணுங்க.

நன்றி.

***********

ஊரடங்கு எனும் நிதித் தொற்று

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே

இன்று கருப்பு நாள்

இவர்களை எதால் அடிப்பது

இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்.

வலையொளி அறிமுகம்