ஒரிஸ்ஸா பாலசோர் ரயில் விபத்துக்கு அரசின் பக்கமிருந்து காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெய்யான காரணங்கள் என்ன? இது போன்ற விபத்துகள் ஏன் நடக்கின்றன? விபத்துகளை தடுக்க முடியாதா? இவைகளுக்கு யார் பொறுப்பேற்பது போன்றவைகளை அலசுகிறது இந்தக் காணொளி. https://www.youtube.com/watch?v=eCw4U9iLVOc
பகுப்பு: இந்தியா
கருத்துரிமை படும் பாடு
கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்லப்படுவதன் பொருள் என்ன? அவதூறு என்றால் என்ன? அவதூறு என்று எதைச் சொல்லலாம்? அவதூறே அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வது? போன்றவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=aP1QrnJXuX4
மணிப்பூர் : கலவரமா? வன்முறையா? அரசியல் சதியா?
மணிப்பூர் கலவரம் என்று தான் அனைத்து ஊடகங்களும் கூறுகின்றன. இது சரியா? மணீப்பூர் மாநிலத்தில் நடந்தது கலவரமா? திட்டமிடப்பட்ட வன்முறையா? அரசியல் சதியின் விளைவா? இந்த வன்முறை வெறியாட்டத்தின் பின்னிருக்கும் அரசியல் சதி என்ன? போன்றவற்றை விளக்குகிறது இந்தக் காணொளி. https://www.youtube.com/watch?v=5f5U6CUQtYE
நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY
நீதியும் ஜனநாயகமும் படும் பாடு
விக்டோரியா கௌரி நியமனத்தை வழக்குரைஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? கொலீஜியத்துக்கும் NJAC வுக்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணி என்ன? இந்த நியமனத்தின் பின்னிருக்கும் நோக்கம் என்ன? ஜான் சத்யன் ஏன் நியமிக்கப்படவில்லை? விளக்குகிறது இந்தக் காணொளி https://www.youtube.com/watch?v=f6e3ZLyWZ20
மோடி பேச்சின் நஞ்சு
உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்
எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே
எழுத்தாளர் ஜெயகாந்தன், 'கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது, 'எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்' என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது … ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.
வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு
இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் … வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.